Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கிழக்கு தில்லியிலும் பார்க்கிங் கட்டணம் உயர்வு: நவம்பர் 1 முதல் அமல்

Print PDF

 தினமணி   30.10.2014

கிழக்கு தில்லியிலும் பார்க்கிங் கட்டணம் உயர்வு: நவம்பர் 1 முதல் அமல்

தில்லி சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிழக்கு தில்லி மாநகராட்சியும் வாகன நிறுத்த (பார்க்கிங்) கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் சனிக்கிழமை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வர உள்ளது.

வடக்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய மாநகராட்சிகளும் அண்மையில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தின. இந்த நிலையில், கிழக்கு தில்லி மாநகராட்சியும் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து கிழக்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிக்கையை கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நிலைக்குழுவிடம் சமர்பித்தோம். அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. சாதாரண, நெரிசல் மிகுந்த நேரம் என இருவகைகளில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி, கார்களுக்கு சாதாரண நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு தரைதள பார்க்கிங் கட்டணம் ரூ.20, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.30, மூன்று மணி நேரத்துக்கு மேல் நிறுத்துபவர்களுக்கு ரூ.50, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெரிசல் நேரங்களில் தரைத் தளங்களில் கார்களுக்கு முதல் ஒரு மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.30, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.50, மூன்று மணி நேரம் வரை தரைத்தளத்தில் நிறுத்த ரூ.75, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இருசக்கர வாகனங்களுக்கு தரைத்தள கட்டணம் ரூ.20, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றார் அவர்.

 

மழை நிவாரணப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்கள்: கொசுக்களை கட்டுப்படுத்த 3500 பேர்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

 தி இந்து         24.10.2014

மழை நிவாரணப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்கள்: கொசுக்களை கட்டுப்படுத்த 3500 பேர்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

கோப்பு படம்

கோப்பு படம்

மழை நிவாரணப்பணிகளை கண்காணிக்க, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங் களுக்கும் சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: சென்னையில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் இடர்ப்பாடுகளை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதன்படி சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றுவது, சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது, சேதமான சாலைகளை சரி செய்வது, தொற்று நோய் பரவாமல் தடுப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை துரிதப் படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருங்கி ணைப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த அதிகாரிகள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியம், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையுடன் ஒருங்கிணைந்து நிவாரணம், புனரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளை கண்காணிப்பார்கள். மேலும் அந்தந்த மண்டலங்களில் அன்றாடம் நடக்கும் பணிகள் குறித்த அறிக்கைகளை மாநகராட்சி ஆணையரிடம் அளிப்பார்கள்.

பருவமழை தொடர்பான புகார் களை சென்னை மாநகராட்சியின் 24 மணிநேர புகார் பிரிவு எண் -1913 மற்றும் மாநகராட்சி கட்டுப் பாட்டு அறை எண்களான (044) - 25619237 மற்றும் 25387235 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.

கொசுக்களை கட்டுப்படுத்த 3500 ஊழியர்கள்

சென்னையில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை சில நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது. இதன்படி அனைத்து மண்டலங்களிலும் 24 மணி நேர மருத்துவசேவை அளிப்பதற்காக, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தொற்றுநோய் மருத்துவமனை களில் 76 மருத்துவர்களும், 196 பணியாளர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். குடிசைப் பகுதிகளில் 35 மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு 2,848 பேர் பயன் அடைந்துள் ளனர்.

குடிநீரில் நோய்கிருமிகள் ஏற்படுவதை தடுப்பதற்காக, வீடுகள் தோறும் குளோரின் மாத்தி ரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் இரண்டு மாதத்திற்கு தேவையான கிருமி நாசினிகள் மற்றும் மருந்துகள் இருப்பில் வைக்கப் பட்டுள்ளன.

கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் 3,520 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மண்டலங்களிலும் 654 கைத்தெளிப்பான்கள் கொண்டு, தேங்கியுள்ள நீர்நிலைகள் மீது கொசுமருந்து தெளிக்கப்பட்டு கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், குடிசைப் பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க புகைப் பரப்பி கருவிகள் மூலம் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகள் எவை? மென்பொருள் மூலம் கணக்கெடுக்க புதிய திட்டம்

Print PDF

 தினமலர்        24.10.2014

சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகள் எவை? மென்பொருள் மூலம் கணக்கெடுக்க புதிய திட்டம்

சென்னை : புதிய அலைபேசி செயலி (அப்ளிகேஷன்) மூலம், சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களை துல்லியமாக கணக்கெடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட உள்ளது.

துல்லியமாக...
சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கப்படுகின்றன. பொதுவாக புகார் வரும் பகுதிகள், ஊழியர்கள் நேரில் அடையாளம் காணும் பகுதிகள், தாழ்வான பகுதிகளாகவும், மழைநீர் தேங்கும் பகுதிகளாகவும் அடையாளம் காணப்பட்டு, அவை வரைபடமாக தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், அனைத்து மண்டலங்களிலும் மழைநீர் தேக்கம் உள்ள பகுதிகளை, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில், புதிய மென்பொருள் மூலம் துல்லியமாக கணக்கெடுக்க, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

கூகுளில் பார்க்கலாம் : இதற்காக ஓ.டி.கே., (ஓப்பன் டேட்டா கிட்) என்ற மென்பொருள், பொறியாளர்களின், 'ஸ்மார்ட்' அலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது.இந்த மென்பொருள் மூலம் ஒரு இடத்தில் தண்ணீர் தேங்குவதை படம் பிடித்தால், புவியியல் ரீதியாக அந்த இடம், செயற்கைக்கோள் மூலம் துல்லியமாக பதிவாகும். இந்த படம், தலைமை அலுவலகத்தில் உள்ள பிரதான கணினியில் பதிவாகும். 'கூகுள்' வரைபடத்தில் தண்ணீர் தேக்கம் உள்ள பகுதி, சிவப்பு நிறத்தில் காட்டும்.

பொறியாளர்கள் படம் பிடிக்கும் பகுதிகள் மட்டுமில்லாமல், புகார் பிரிவில் பதிவாகும் இடங்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்படும்.தற்போது சிறப்பு திட்டங்கள் துறையில் உள்ள, 40 பொறியாளர்களின் அலைபேசியில் இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மழைநீர் தேங்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. விரைவில், 200 வார்டு பொறியாளர்களுக்கும் இந்த மென்பொருள் வழங்கப்பட உள்ளது.

சாலை சீரமைப்புக்கும் உதவும் : இதன் மூலம் இந்த வடகிழக்கு பருவமழைக்கு தண்ணீர் தேங்கும் பகுதிகளை துல்லியமாக கணக்கெடுத்து, அடுத்த மழைக்கு முன் அங்கு கட்டமைப்பு பணிகளை உருவாக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இந்த மென்பொருள் மூலம் மழைநீர் தேக்கம் மட்டுமல்லாமல், சாலை சீரமைப்பு, மாநகராட்சி சொத்துக்கள் என அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட உள்ளன.

 


Page 41 of 3988