Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை

Print PDF

தினமணி         12.09.2014

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது.

இதுதொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை கடை உரிமையாளர்களுக்கு செயல் அலுவலர் ர.ஆனந்தன் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் வியாழக்கிழமை வழங்கினர். மேலும் கடைகள் மற்றும் பொது இடங்களில் இதுதொடர்பான விளம்பர பலகைகளைக் கட்டினர்.

 

நவீன நகரங்களில் வை-ஃபை, தொலை மருத்துவ வசதிகள்

Print PDF
தினமணி         12.09.2014

நவீன நகரங்களில் வை-ஃபை, தொலை மருத்துவ வசதிகள்


மத்திய அரசு உருவாக்கவுள்ள 100 நவீன நகரங்களில் (ஸ்மார்ட் சிட்டி) 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், வை-ஃபை எனப்படும் கம்பியில்லா இணைய சேவை, தொலைவிலிருந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் "டெலிமெடிசன்' வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும் என்று நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவீன நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்து வரும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அதற்கான வரைவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

அதில், சிறந்த போக்குவரத்து வசதி, அனைத்து வீடுகளுக்கும் கழிவுநீர் இணைப்பு வசதி, வீடுகளுக்கே சென்று குப்பைகளை சேகரிக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நவீன நகரங்களின் கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதற்காக, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில அமைச்சர்கள், மாநில முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நவீன நகரங்களுக்கான வரைவுத் திட்டம் இறுதி செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
 

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆந்திரம், தில்லி மாநகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமணி        12.09.2014  

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆந்திரம், தில்லி மாநகராட்சி அதிகாரிகள் 

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்து, அங்கு வழங்கப்பட்ட மதிய உணவை ருசி பார்த்த ஆந்திர மாநிலம் அனந்தப்பூர், தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள்.

ஆந்திர மாநிலம், தில்லி மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாநகராட்சி ஆணையர் ஜே.ஸ்ரீனிவாசலு, துணை செயற்பொறியாளர் எஸ்.சதீஷ் சந்தர் உள்ளிட்ட குழுவினர், தெற்கு தில்லி மாநகராட்சி பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் யோகேந்திரபாபு, துணை கணக்குக் கட்டுப்பாட்டாளர் எஸ்.பி.பிள்ளை, செயற்பொறியாளர் அஜய் அகர்வால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அம்மா உணவகத்தைப் பார்வையிட்டனர்.

உணவகத்தில் உள்ள பொருள்கள் வைக்கும் அறை, சமையலறை, சாப்பாடு வழங்கும் இடம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர்கள், அங்கு பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் பணியாளர் தேர்ந்தெடுக்கப்படும் முறை, பணி நேரம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து, உணவகத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள் கூறுகையில், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் விலை குறைவாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும் உள்ளன.

ஆந்திரத்தில் உள்ள முக்கிய மாநகராட்சிகளில் இதே போன்று மலிவு விலை உணவகங்கள் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளன.

தில்லி மாநகராட்சியிலும் இதே போன்று மலிவு விலை உணவகங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
 


Page 54 of 3988