Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஆலந்தூர், நங்கநல்லூரில் குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி               15.02.2014

ஆலந்தூர், நங்கநல்லூரில் குடிநீர் விநியோகம் ரத்து

ஆலந்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி:

மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஜி.எஸ்.டி. சாலையில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன.

இதற்கான பணிகள் வரும் திங்கள்கிழமை காலை 8 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணிவரை நடைபெறவுள்ளன.

இதனால் ஆலந்தூர், ஆதம்பாக்கம், பாலாஜி நகர், பக்தவச்சலம் நகர், நங்கநல்லூர், கண்டோன்மென்ட் பகுதி, மீனம்பாக்கம், பம்மல், முனைவர் அவின்யூ, கண்ணபிரான் கோயில் தெரு, அனகாபுத்தூர், பொழிச்சலுர், கவுல்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினங்களில் குடிநீர் விநியோகம் தடைப்படும். லாரி குடிநீர் தேவைப்படுபவர்கள் 81449 30912, 81449 30365, 81449 30315, 044 - 28454040 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

நெல்லை மாநகராட்சியில் நிலுவை வரிபாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை புதிய ஆணையாளர் லட்சுமி பேட்டி

Print PDF

தினத்தந்தி               15.02.2014

நெல்லை மாநகராட்சியில் நிலுவை வரிபாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை புதிய ஆணையாளர் லட்சுமி பேட்டி

“நெல்லை மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்துவரி, குடிநீர் வரி பாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்“ என புதிய ஆணையாளர் லட்சுமி தெரிவித்தார்.

புதிய ஆணையாளர்

நெல்லை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பு வகித்த மோகன் மறைவுக்கு பிறகு, அந்த பொறுப்புகளை மாநகர பொறியாளர் ஜெய்சேவியர் கவனித்து வந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சிகளின் மண்டல இயக்குனராக பணியாற்றிய லட்சுமி, நெல்லை மாநகராட்சி புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நெல்லை மாநகராட்சி நிதி நிலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சொத்துவரி மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் வசூல் செய்யவும், சென்னையை போல் நெல்லை மாநகராட்சியையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதாள சாக்கடை திட்டம்

2–ம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவு படுத்தப்படும். மக்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு புதிய ஆணையாளர் லட்சுமி கூறினார்.

அவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகும். தூத்துக்குடி மாநகராட்சியில் 2007 முதல் 2009 வரை பணியாற்றினார். அதன்பிறகு திண்டுக்கல் நகரசபை ஆணையாளராக இருந்தார். பின்னர் சென்னை மறைமலை நகர் நகரசபை ஆணையாளராக பணியாற்றினார். அதன்பிறகு செங்கல்பட்டு நகராட்சிகளின் மண்டல இயக்குனராக பதவி வகித்தவர் ஆவார்.

புதிய ஆணையாளராக பதவி ஏற்ற லட்சுமிக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன்              14.02.2014

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆலந்தூர்,  : ஆதம்பாக்கம் குளம் அருகே மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடத்தின் அடித்தளம் இடித்து தள்ளப்பட்டது.

ஆதம்பாக்கம் கிழக்கு கரிகாலன் தெருவில் ஒரு குளம் உள்ளது. இதன் நுழைவாயில் அருகே புதிய ஆக்கிரமிப்பு கட்டிடம் முளைத்தது. அடித்தளம்வரை கட்டப்பட்ட இந்த கட்டிடம் மாநகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து மண்டல செயல் பொறியாளர் மகேசன், உதவி செயற் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர் சேதுபதிராஜா ஆகியோர் நேற்று அந்த இடத்தைப் பார்வையிட்டு ஊழியர்கள் மூலம் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றினர்.

 


Page 74 of 3988