Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சேலத்தில் நாளை முதல் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி             13.02.2014

சேலத்தில் நாளை முதல் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து

சேலம் மாநகரில் பிப்ரவரி 14, 15 ஆகிய இரு நாள்களும் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

 சேலம் மாநகருக்கு குடிநீர் வழங்கி வரும் மேட்டூர் - ஆத்தூர் வழித் தடத்தில், அரபிக் கல்லூரி அருகில் தனிக் குடிநீர் திட்டக் குழாய் இணைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், வரும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு நாள்களுக்கும் சேலம் மாநகரில் குடிநீர் விநியோகம் இருக்காது என்றும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையர் மா.அசோகன் அறிவித்துள்ளார்.

 

எடப்பாடி நகர்மன்ற ஆணையர் பொறுப்பேற்பு

Print PDF

தினமணி             13.02.2014

எடப்பாடி நகர்மன்ற ஆணையர் பொறுப்பேற்பு

எடப்பாடி நகர்மன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட ஜி.தனலட்சுமி  புதன்கிழமை பொறுப்பேற்றார்.

 எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 2008- 2009-ஆம் ஆண்டு ஆணையராக இருந்தவர் ஏ.அருணாசலம். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணிமாறுதலாகிச் சென்றார். அதற்குபிறகு, எடப்பாடி நகர்மன்றத்துக்கு ஆணையர் நியமிக்கப்படவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக நகராட்சிக்கு என தனியாக ஆணையர் நியமிக்கப்படாமல் பொறியாளர்களே கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர். தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமங்கலம் நகர்மன்ற ஆணையராக பணியாற்றி வந்த ஜி.தனலட்சுமி எடப்பாடி நகர்மன்ற ஆணையராக நியமனம் செய்யப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றார். .

இதுகுறித்து தனலட்சுமி கூறியது:  எடப்பாடியை சுற்றிப்பார்க்கும் போது குப்பைகள்தான் அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றை சீர்படுத்துவதில்தான் என்னுடைய முதல்கவனம் இருக்கும் என்றார் அவர்.

 

எடப்பாடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி             13.02.2014

எடப்பாடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டியில் புதிதாக சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணியை நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன் தொடக்கி வைத்தார் .

கவுண்டம்பட்டி பகுதியில் சிமென்ட் சாலைகள் அமைக்க ரூ. 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

இதில், துணைத் தலைவர் சி.ராமன், நகரமன்ற உறுப்பினர்கள் அழகம்பெருமாள், தனம், செல்வம், சீனிவாசன், சாந்தி நாகராஜன், அரசு வழக்குரைஞர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 78 of 3988