Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னையில் புதிய மேம்பாலம், சுரங்கப்பாதை: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினமணி             13.02.2014

சென்னையில் புதிய மேம்பாலம், சுரங்கப்பாதை: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை தங்கசாலையில் புதிய மேம்பாலத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து புதன்கிழமை விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.பி.பூனாட்சி,  சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, அரசு கொறடா ஆர்.மனோகரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே.
சென்னை தங்கசாலையில் புதிய மேம்பாலத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து புதன்கிழமை விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.பி.பூனாட்சி,  சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, அரசு கொறடா ஆர்.மனோகரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

தங்கசாலை மணிக்கூண்டு அருகில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 15 மீட்டர் அகலம் மற்றும் 506.8 மீட்டர் நீளம் கொண்ட அந்த மேம்பாலம் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.

அதே போல ஸ்டான்லி மருத்துவமனை அருகே  மணியசத்திர தெருவில் உள்ள ரயில்வே பாதைகளைக் கடப்பதில் பொதுமக்களுக்கு ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது.

அதற்கான பணிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 360 மீட்டர் நீளம் மற்றும் 8 மீட்டர் அகலத்துடன் கூடிய அந்த ரயில்வே சுரங்கப் பாதை ரூ. 15 கோடியே 76 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

ஷெனாய் நகரில் 61 ஆயிரத்து 756 சதுர அடி பரப்பளவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீனக் கலையரங்கம் கட்டத் திட்டமிடப்பட்டு, ரூ.18.05 கோடியில் அப்பணிகள் முடிக்கப்பட்டன.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்த புதிய கட்டடம், மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதையை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

 

சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி மண்டலங்களில் ரூ.7 கோடி மதிப்பில் தார்சாலைகள், சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கியது

Print PDF

தினத்தந்தி                13.02.2014

சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி மண்டலங்களில் ரூ.7 கோடி மதிப்பில் தார்சாலைகள், சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கியது

சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலங்களில் ரூ.7 கோடி மதிப்பில் தார்சாலைகள், சிறுபாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

பிளாஸ்டிக் தார்சாலைகள்

ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் 2013–14 கீழ் சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.7 கோடியே 18 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்சாலைகள், வடிகால், சிறுபாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.

சேலம் அம்மாப்பேட்டை மண்டல பகுதிகளில் வார்டு 35, 39–ல் உள்ள ஜோதி தியேட்டர் கிழக்கு தெரு, மேற்கு தெரு, சவுண்டம்மன் கோவில் மற்றும் பெரிய கிணறு தெருக்கள், வார்டு 34, 36, 38, 41 மற்றும் 42–ல் உள்ள முராரி வரதய்யர் தெரு, பரமகுடி நன்னுசாமி தெரு, கிருஷ்ணன்புதூர் குறுக்கு தெரு, தியாகி நடேசன் தெரு, விவேகானந்தர் தெரு, குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளுக்கு 3.522 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பில் பிளாஸ்டி கழிவுகளை பயன்படுத்தி தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை நேற்று மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்.

சிறுபாலம், வடிகால்

இதேபோல், அம்மாப்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட ரெயில்வே லைன் வடக்கு குறுக்கு தெரு நம்பர் 1,2,3, தில்லை நகர் குறுக்கு தெருக்களில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்சாலை புதுப்பிக்கும் பணிகளையும் மற்றும் சக்தி நகர், சங்கிலி ஆசாரி காடு, சின்ன அம்மாப்பேட்டை, சவுண்டம்மன் கோவில் வள்ளுவர் காலனி மெயின் ரோடு, நாமமலை குறுக்கு தெரு, பச்சப்பட்டி மெயின் ரோடு, ஆறுமுக நகர் குறுக்கு தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ரூ.3 கோடியே 23 லட்சம் மதிப்பில் 6.785 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளையும் மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்.

இதேபோல் அஸ்தம்பட்டி 17–வது வார்டில் உள்ள ஆடிட்டர் காலனியில் ரூ.19 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் சாலை மற்றும் வடிகால் வசதிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல், கொண்டலாம்பட்டி 54–வது வார்டில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் சிறியபாலம், தார்சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஆணையாளர் அசோகன், செயற்பொறியாளர்கள் காமராஜ், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பாளையங்கோட்டை பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் ரத்து

Print PDF

தினத்தந்தி                13.02.2014

பாளையங்கோட்டை பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் ரத்து

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு, குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் வ.உ.சி. திடல் அருகே நேற்று உடைப்பு ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளார்கள்.

இதனால் பாளையங்கோட்டை 8–வது வார்டு முருகன்குறிச்சி பகுதி, ராஜா குடியிருப்பு, வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது.

எனவே பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் (பொறுப்பு) சாமுவேல் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

 


Page 80 of 3988