Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அம்மா திட்டம், இரவு நேர துப்புரவு பணியில் முறைகேடுகள் புகார்: ஆணையாளர் நடவடிக்கை

Print PDF

தினமணி             12.02.2014

அம்மா திட்டம், இரவு நேர துப்புரவு  பணியில் முறைகேடுகள் புகார்:  ஆணையாளர் நடவடிக்கை

மதுரை மாநகராட்சி பகுதியில் அம்மா திட்டம் மற்றும் இரவு நேர துப்புரவுப் பணிகளில் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றுமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையர் கிரண்குராலா உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி பகுதியில் அம்மா திட்டம் மற்றும் பேருந்து நிலையங்கள், சாலையோரங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மணல், குப்பைகளை அகற்றும் பணியில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த ஒப்பந்தப் பணியில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வரை மாநகராட்சி நிதியில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆள்களை பணியில் ஈடுபடுத்திவிட்டு, 4 முதல் 5 மடங்கு வரை கூடுதலாக ஆள்கள் பணியாற்றுவதாக போலியான பட்டியல்கள் மூலம் இந்த முறைகேடுகள் நடப்பதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு பெரியார் பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியை ஆணையர் கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மேயர் விவி ராஜன்செல்லப்பாவும் பங்கேற்றார்.

பெரியார் பேருந்து நிலையம், நேதாஜி சாலை, டவுன்ஹால் ரோடு, நான்கு மாசி வீதிகள், டிபிகே சாலை, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி பகுதிகளில் இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை 50 ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாக ஆணையரிடம் கணக்கு சொல்லப்பட்டது. ஆனால், திங்கள்கிழமை ஆணையர் முன்னிலையில் 30 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. முறைகேடுகளுக்கு இடமின்றி துப்புரவு பணி நடைபெற வேண்டும். கணக்கு காண்பிக்கப்படும் எண்ணிக்கையிலான ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். 4 மண்டலங்களிலும் இதை கண்டிப்புடன் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக, மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

விதிமீறல் மருத்துவமனை கட்டடத்துக்கு "சீல்'

Print PDF

தினமணி             12.02.2014

விதிமீறல் மருத்துவமனை கட்டடத்துக்கு "சீல்'

விதியை மீறி கட்டடப்பட்ட தனியார் மருத்துவமனை கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரட்டூர், திருமலை நகர் அவென்யூ, எண், 9 என்ற முகவரியில் தரைத்தளத்துடன் கூடிய 5 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டடம், விதிமுறைகளுக்கு மாறாக முறைகேடாக கட்டப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து அக் கட்டடத்தின் உரிமையாளருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் கட்டடம் சரிசெய்யப்படாததால், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை கட்டடத்தின் 4 மற்றும் 5- ஆம் தளங்களை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செவ்வாய்கிழமை பூட்டி சீல் வைத்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோபியில் ரூ.1 கோடி செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள்

Print PDF

தினத்தந்தி             12.02.2014

கோபியில் ரூ.1 கோடி செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள்

கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் காலனியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்காக ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கோபி –சத்திரோட்டில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கோபி நகராட்சி தலைவர் ரேவதிதேவி தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் காளியப்பன், நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 84 of 3988