Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

Print PDF

தினமணி             11.02.2014

நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

மதுரை மாநகராட்சியிலுள்ள முந்தைய 72 வார்டு பகுதிகளில் 4 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாநகராட்சி மூலம் குழாயில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பிப். 11 செவ்வாய்க்கிழமை அருள்தாஸ்புரம் மேல்நிலைத்தொட்டி, ரிசர்வ்லைன் மேல்நிலைத்தொட்டி, பி அன்ட் டி நகர் பகுதிகள், அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி, சுந்தரராஜபுரம் பகுதிகள், ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத்தொட்டி, செல்லூர் மேல்நிலைத்தொட்டி, புதூர் மேல்நிலைத்தொட்டி, ராஜாஜி பூங்கா மேல்நிலைத்தொட்டி, கேகே நகர் மேல்நிலைத்தொட்டி, கோரிப்பாளையம், சுந்தரராஜபுரம் மேல்நிலைத் தொட்டி விநியோக பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

பிப்ரவரி 12 புதன்கிழமை வடகரையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை: ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான மருதுபாண்டியன் மெயின் சாலை, குறுக்கு, மேற்கு வடக்குத் தெரு, பாண்டியன் தெரு, கட்டபொம்மன் நகர், ராமமூர்த்தி தெரு.

காலை 4 மணி முதல் 6 மணி வரை: செல்லூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகள்.

காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை: புதூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான சிங்காரவேலன் தெரு, பாரதிஉலா சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, கணேசபுரம், மாதா கோவில் மெயின் ரோடு, உலகநாதன் சேர்வை தெரு, பாரதியார் மெயின் ரோடு, ஐடிஐ மெயின் ரோடு, சிட்கோ காலனி தெரு பகுதிகள்.

மாலை 3 முதல் 6 மணி வரை: மருதங்குளம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான கற்பகநகர், பாரத்நகர், கொடிக்குளம், சம்பக்குளம், சூரியாநகர், சங்கர்நகர் பகுதிகள்.

காலை 6 முதல் மாலை 5 மணி வரை: ராஜாஜி பூங்கா மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான ஷா தியேட்டர், குருவிக்காரன் சாலை, தல்லாகுளம், அழகர்கோவில் சாலை, ஆழ்வார்புரம், பனகல்சாலை, செனாய்நகர்.

காலை 6 முதல் பகல் 12 மணி வரை: அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான அண்ணாநகர் கிழக்குத்தெரு, சாத்தமங்கலம்.

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை: கோரிப்பாளையம், சொக்கிகுளம், ராமமூர்த்தி தெரு.

இரவு 7 மணி முதல் 12.30 மணி வரை: சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான என்எஸ் கோனார் தெரு, நேதாஜி தெரு, வீரகாளியம்மன் தெரு முதல் ஜீவாநகர் 2-வது மற்றும் குறுக்குத் தெருக்கள்.

தென்கரையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 4 முதல் 9 மணி வரை: கீழமாரட் 1-ஆவது பகிர்மானம் தாசில்தார் பள்ளிவாசல் தெரு, ஆட்டுமந்தை பொட்டல், கீழமாரட் வீதி, கரிம்பள்ளி வாசல், சுங்கம் பள்ளிவாசல், காயிதேமில்லத் தெரு, இஸ்மாயில்புரம், அருணாசலபுரம், கீழவெளி வீதி, லட்சுமிபுரம், கான்பாளையம் மற்றும் குறுக்குத் தெருக்கள்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை: அரசரடி மேல்நிலைத்தொட்டி, துரைச்சாமி நகர், வேல்முருகன் நகர்.

காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை: பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 3 தெருக்கள், குறுக்குத் தெருக்கள்.

பிற்பகல் 2 முதல் 3 மணி வரை: அரசரடி கீழ்மட்டத்தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் விநியோகம் செய்யும் பகுதிகள்:

மாலை 3 முதல் 6 மணி வரை: ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான தெற்குமாசி வீதி, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு, முத்தையாபிள்ளை தெரு, ஜடாமுனிகோவில் தெரு, மகால், சின்னக்கடைத்தெரு, பந்தடி, கான்சாமேட்டுத்தெரு, தெற்காவணி மூலவீதி, ஓதுவார் தெரு, வெங்கலக்கடைத்தெரு, சப்பாணி கோவில் தெரு, காஜா தெரு பகுதிகள்.

மாலை 6 முதல் இரவு 11 மணி வரை: ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான சிந்தாமணி சாலை, நாகுப்பிள்ளை தோப்பு பகுதிகள், வாழைத்தோப்பு பகுதிகள், கிருஷ்ணாபுரம் 1,2 தெருக்கள், பச்சரிசிக்காரத் தெரு, பாலுச்சாமி ஐயர் தெரு, புதிய மாகாளிப்பட்டி சாலை, குறுக்குத் தெருக்கள், ராமசத்திரம் குறுக்குத் தெருக்கள்.

இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை: அரசரடி கீழ்மட்டத் தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

 

மாநகராட்சி சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் இன்று தொடக்கம்

Print PDF

தினமணி             11.02.2014

மாநகராட்சி சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் இன்று தொடக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்களை செவ்வாய்க்கிழமை (பிப். 11) முதல் மாநகராட்சி நடத்துகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக முதல்வரின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு, 66 ஆயிரம் பேருக்கு சிறப்பு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.

இந்த முகாம்களை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி திரு.வி.க. மண்டலம் கேசவப்பிள்ளை பூங்காவில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) தொடங்கி வைக்கிறார்.

இந்த முகாம்களுக்கு சென்னை மாநகராட்சி பொது சுகாதாதத்துறையும், டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிப்ரவரி 21-ஆம் தேதி வரை குடிசைப்பகுதிகளில் இந்த முகாம்கள் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விளம்பர பலகைகள் வைக்க விதிமுறை

Print PDF

தினமணி             11.02.2014

விளம்பர பலகைகள் வைக்க விதிமுறை

சென்னையில் விளம்பர பலகைகளை வைப்பது தொடர்பான விதிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அண்மையில் வெளியிட்ட செய்தி: மின்னனு அச்சு விளம்பரப் பட்டிகைகள், விளம்பர அட்டைகளை நிறுவ 15 நாள்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும். நில உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்று, காவல்நிலையத்தில் பெறப்பட்ட தடையில்லா சான்று பெற வேண்டும். விளம்பர பலகைகளில், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற எண், காலம், விளம்பர பட்டிகைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிடவேண்டும்.

 10 முதல் 20 அடி அகலம் உள்ள சாலைகளில் 4 அடி உயரம் மற்றும் 2.5 அடி அகலத்திலும், 100 அடி அகலத்துக்கு மேல் உள்ள சாலைகளில் 15 அடி உயரம் மற்றும் 25 அடி அகலம் என விளம்பர பட்டிகைகளின் அளவு இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 87 of 3988