Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா உணவகம்

Print PDF

தினகரன்             10.02.2014 

ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா உணவகம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் சங்க திருவள்ளூர் வட்ட மாநாடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு திருவள்ளூர் வட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.

வட்டச் செயலாளர் அருண்டேனியர் வரவேற்றார். பொருளாளர் மெல்கிராஜா முன்னிலை வகித்தார்.

தீர்மானங்கள்:

அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும். விடுமுறை நாள்கள் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விஸ்வநாதன் நன்றி கூறினார்.

 

மதுரையில் நாளை குடிநீர் விநியோகமாகும் பகுதிகள்

Print PDF

தினமணி              10.02.2014

மதுரையில் நாளை குடிநீர் விநியோகமாகும் பகுதிகள்

மதுரை மாநகரில் 4 நாள்களுக்கு ஒருமுறை குழாய்களில் மாநகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்து ஒருசுற்று முடிந்து (பிப்ரவரி 10) திங்கள்கிழமை முதல் 2-வது சுற்று துவங்குகிறது.

 இன்று வடகரையில் அருள்தாஸ்புரம் மேல்நிலைத் தொட்டி, ரிசர்வ்லைன் மேல்நிலைத்தொட்டி, தாகூர் வால்வு பகிர்மான பகுதிகள், சுந்தரராஜபுரம் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள், தென்கரையில் கோச்சடை-1, பெத்தானியாபுரம் பகுதி, ஞாயிற்றுக்கிழமை சந்தை மேல்நிலைத்தொட்டி, ஜிஎல்எஸ்ஆர், பெரியார் பேருந்து நிலையம் பகுதி, கோச்சடை-2 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நடைபெறும்.

பிப்ரவரி 11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வடகரையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் வருமாறு:

அதிகாலை 3.30 மணி முதல் 6.30 மணிவரை: அருள்தாஸ்புரம் மேல்நிலைத்தொட்டி-மேற்குப்பகுதி ஆலவாய்நகர், செங்கோல்நகர் 1முதல் 5 தெருக்கள், மீனாட்சிநகர் மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகள், அய்யனார் காலனி, தத்தனேரி மெயின்தெரு.

காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.30மணி வரை: ரிசர்வ்லைன் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதி-காலங்கரை, வண்டிப்பாதை, பிடிஆர் நகர், வள்ளுவர் காலனி, பழனிச்சாமி நகர், ஜவஹர்புரம், கிருஷ்ணாபுரம் காலனி, சொக்கநாதபுரம், பாரதிநகர், நாராயணபுரம், ஜேஎன் நகர் பகுதிகள், விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், பழைய நத்தம் சாலை.

பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை: பி அன்ட் டி நகர், மீனாட்சி நகர் பகுதிகள், வள்ளுவர் காலனி பகுதிகள், வாசுகி நகர், குருநகர்.

பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை: அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி விநியோக பகுதிகள், தாசில்தார் நகர் குறுக்குத்தெரு, சிங்கராயர் தெரு, காக்காதோப்பு.

இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12.30 வரை: சுந்தரராஜபுரம், சோலைஅழகுபுரம் 1-ஆவது மெயின் ரோடு முதல் 4-வது மெயின் வீதி மற்றும் குறுக்குத் தெருக்கள், பாரதியார் தெரு, 4 தரம் குறுக்குத் தெருக்கள்.

தென்கரையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 3.30 மணி முதல் 7 மணி வரை: ஆரப்பாளையம் மேல்நிலைத்தொட்டி பகுதி, ஆரப்பாளையம், பிள்ளைமார் தெரு, கோமாஸ் பாளையம், கார்விநகர், ஏஏ சாலை, டிடி சாலை, கண்மாய்க்கரை, முன்சிபாளையம், ஜெயில்ரோடு, மேலப் பொன்னகரம், மோதிலால் தெரு, கரிமேடு, ஆரப்பாளையம் கிராஸ் சாலை, பொன்னகரம் பகுதிகள்.

காலை 7 மணி முதல் 10.30 மணி வரை: தமிழ்ச்சங்கம் மேல்நிலைத்தொட்டி பகிர்மான பகுதிகள், பேச்சியம்மன் படித்துறை சாலை, வடக்குமாசி வீதி, வடக்கு கிருஷ்ணன்கோவில் தெரு, மேலஆவணி மூலவீதி, தாசில்தார் பள்ளிவாசல், மீன்காரத்தெரு, எம்எம்சி காலனி, ஆதிமூலம் பிள்ளை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், கோவிந்தன்செட்டி தெரு, அனுமார் கோவில் படித்துரை, திருமலைராயர் படித்துறை, தைக்கால் 2,3,4, 5 தெருக்கள், கீழப்பட்டமார் தெரு, வடக்குமாசி வீதி.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை: அரசரடி கீழ்மட்டத்தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை: டிபி டேங்க் 2-ஆவது பகிர்மானம், சுப்பிரமணியபுரம் தெருக்கள், ஜெய்ஹிந்த்பரம் 2-ஆவது மெயின்சாலை, எம்கே புரம், செட்டியூரணி, எம்சிசி காலனி, எம்கே புரம் மெயின்சாலை, ஜெய்ஹிந்த்புரம் 1-ஆவது மெயின்ரோடு.

மாலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை: கோச்சடை 3-ஆவது பகிர்மானம், சம்மட்டிபுரம், எம்எம் நகர், வெள்ளக்கண்ணு தியேட்டர் நகர், சொக்கலிங்கநகர்.

இரவு 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை: அரசரடி தரைமட்டத் தொட்டியிலிருந்து லாரி மூலம் விநியோகம்.

 

1.50 லட்சம் கொசு வலைகள்: மாநகராட்சி டெண்டர் வெளியீடு

Print PDF

தினமணி              10.02.2014

1.50 லட்சம் கொசு வலைகள்: மாநகராட்சி டெண்டர் வெளியீடு

சென்னையில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய கூடுதலாக 1.5 லட்சம் கொசு வலைகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னையின் நீர்வழிப்பாதைகளின் அருகில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இதன்படி முதலில் 5 லட்சம் கொசு வலைகளை தனியார் நிறுவனத்திடம் இருந்து மாநகராட்சி கொள்முதல் செய்தது.

பின்னர் சென்னையில் பச்சை நிற ரேஷன் அட்டைகள் வைத்துள்ள அனைவருக்கும் இலவச கொசு வலைகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கொசு வலைகள் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இப்போது சென்னையில் சுமார் 11 லட்சம் பச்சை நிற ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான கொசு வலைகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக, ரூ. 2.25 கோடி மதிப்பில் 1.5 லட்சம் கொசு வலைகளை கொள்முதல் செய்ய மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி டெண்டர் விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 90 of 3988