Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சிப் பள்ளிகளில் நுண்கலை கூடம்

Print PDF

தினமணி              08.02.2014

மாநகராட்சிப் பள்ளிகளில் நுண்கலை கூடம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நுண்கலை கற்பிக்கும் கலைக் கூடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:

2013-14-ஆம் ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் மாநகராட்சி பள்ளிகளில் நுண்கலைகள் கற்பிக்கும் கலைக்கூடங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, முதல்கட்டமாக ட்ரஸ்ட்புரம் சென்னை நடுநிலைப்பள்ளி, ஜி.பி.டபள்யூ காலனி சென்னை நடுநிலைப்பள்ளி, நொச்சிக்குப்பம் சென்னை தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் கலைக்கூடங்கள் அமைக்கப்பட்டன. ட்ரஸ்ட்புரம் சென்னை நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மேயர் சைதை துரைசாமி இந்த கலைக் கூடங்களைத் திறந்து வைத்தார். மேலும் 5 பள்ளிகளில் நடனம், நாடகம், இசை, சிற்பம் போன்ற கலைகளை வளர்க்கும் கலைக்கூடங்களும், 2 பள்ளிகளில் செராமிக்ஸ், பாட்டரி ஆகியவற்றை கற்பிக்கும் கலைக்கூடங்களும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

இந்தத் தொடக்க நிகழ்ச்சியில், துணை ஆணையர் (கல்வி) ரா.லலிதா, மண்டலக்குழு தலைவர்கள் எஸ். சக்தி, எல்.ஐ.சி. மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பழைய சுரங்கப் பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பேரூராட்சித் தலைவர்

Print PDF

தினமணி              08.02.2014

பழைய சுரங்கப் பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பேரூராட்சித் தலைவர்

செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள பழைய சுரங்கப் பாதையை சுத்தப்படுத்தி நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சித் தலைவர் மக்கள் பயன்பாட்டு கொண்டு வந்தார்.

கூடுவாஞ்சேரியில், ரூ.15 கோடி மதிப்பில், கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணி மற்றும் ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை மேம்பால திட்டப் பணிகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி டிசம்பர் 28-ஆம் தேதி திடீரென ரயில்வே கேட் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த மாடம்பாக்கம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையில் இருந்த குடிநீர் பைப்லைன், கேபிள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர் மொபெட்டுகள் மற்றும் ஆட்டோக்கள் செல்லும் அளவுக்கு மின்விளக்கு  வசதிகளுடன் பாதை அமைக்கபட்டது.

அதை நந்தவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சித் தலைவர் எம்.கே தண்டபாணி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஜார்ஜ், பேரூராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் குமரவேல், டில்லீஸ்வரி, ஹரி, ஸ்ரீமதிராஜி, ரவி, முன்னாள் பத்மநாபன், தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விரைவில் மேம்பாலப் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் செல்லும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

குடிநீர் விநியோகத்தில் பிரச்னையா?: புகார் தெரிவிக்க கைபேசி எண்கள் அறிவிப்பு

Print PDF

தினமணி              08.02.2014

குடிநீர் விநியோகத்தில் பிரச்னையா?: புகார் தெரிவிக்க கைபேசி எண்கள் அறிவிப்பு

குடிநீர் விநியோகத்தில் பிரச்னைகள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய பொறியியல் பிரிவு அலுவலர்களின் கைபேசி எண்களை, மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

  வார்டு வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய உதவிப் பொறியாளர்கள் கைபேசி எண்கள்  விவரம்:

   மண்டலம் 1: வார்டு 1, 2, 3, 4 மற்றும் 23 - 9788810099, வார்டு 5, முதல் 9 - 9788810087, வார்டு 10 முதல் 14 - 9486555172, வார்டு 15 முதல் 18 - 9788810101, வார்டு 19 முதல் 22 - 9788810188.

 மண்டலம் 2: வார்டு 24, 25, 26 மற்றும் 46 - 9788810189, வார்டு 27, 28, 34, 44, 45 - 9788810074, வார்டு 29 முதல் 33 - 9788810083, வார்டு 35, 36 மற்றும் 43 - 9788810091, வார்டு 37, 38 - 9788810105, வார்டு 39, 40 - 9942141209, வார்டு 41, 42, 47, 48, 49 - 9443739507.

 மண்டலம் 3: வார்டு 50, 51, 52, 55 மற்றும் 73 - 9788810086, வார்டு 53, 54 மற்றும் 57 - 9788810100, வார்டு 56, 58 முதல் 62 - 9788810194, வார்டு 63, 64 மற்றும் 68 - 9750624553, வார்டு 65, 66, 67, 69 மற்றும் 74 - 9788810094.

 மண்டலம் 4:   வார்டு 70, 71, 72 - 9790396770, வார்டு 75, 76, 93 மற்றும் 100 - 9894563344, வார்டு 78, 79, 85, 86 - 9788810077, வார்டு 80 முதல் 84 - 9788810088, வார்டு 77, 87 முதல் 92 - 9788810085, வார்டு 94 - 9566453591, வார்டு 95 முதல் 99 - 9788810095.

 


Page 92 of 3988