Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பல்லாவரம் நகராட்சியில் சிறுவிசை மின் குடிநீர் தொட்டி உயர்கோபுர மின்விளக்கு திறப்பு எம்பி நிதி ரூ.1 கோடியில் அமைத்தது

Print PDF

தினகரன்             08.02.2014 

பல்லாவரம் நகராட்சியில் சிறுவிசை மின் குடிநீர் தொட்டி உயர்கோபுர மின்விளக்கு திறப்பு எம்பி நிதி ரூ.1 கோடியில் அமைத்தது

பல்லாவரம், : ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு 2012-13ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் சிறுவிசை மின் குடிநீர் தொட்டி மற்றும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பல மாதங்களாக டெண்டர் விடமாலும், டெண்டர் எடுக்க வரும் ஒப்பந்ததாரர்களை எடுக்க விடமால் தடுத்து வந்தனர்.

இதையடுத்து திமுக சார்பில் கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு, ஆமை வேகத்தில் நடந்தன. பிறகு பணிகள் முழுவதுமாக முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. இதுகுறித்து மீண்டும் கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில், பல்லாவரம் நகராட்சியில் 10 வார்டுகளுக்கு சிறுவிசை மின் குடிநீர் தொட்டி மற்றும் உயர்கோபுர மின்விளக்கு திறப்பு விழா நேற்று நடந்தது. டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் இ.கருணாநிதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

Print PDF

தினமணி             07.02.2014

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

மதுரையில் சனிக்கிழமை (பிப்.8) குடிநீர் விநியோகமாகும் பகுதிகள் விவரம்:

அதிகாலை 3.30 முதல் 6.30 மணி வரை: ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகளான மருதுபாண்டியன் மெயின் ரோடு, மருதுபாண்டியன் குறுக்கு, மேற்கு, வடக்குத்தெரு, பாண்டியன் தெரு, கட்டபொம்மன் நகர், ராமமூர்த்தி தெரு.

அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை: செல்லூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகள்.

காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை: புதூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான, சிங்கார வேலன் தெரு, பாரதி உலா சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, கணேசபுரம், மாதாகோவில் மெயின் ரோடு, உலகநாதன் சேவை தெரு, பாரதியார் மெயின் ரோடு, ஐடிஐ மெயின் ரோடு, சிட்கோ காலனி தெரு.

மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை: மருதங்குளம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான, கற்பக நகர், பாரத் நகர், கொடிக்குளம், சம்பக்குளம், சூரியாநகர், சங்கர் நகர் பகுதிகள்.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை: அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி விநியோக பகுதிகளான அண்ணாநகர் கிழக்குத்தெரு, சாத்தமங்கலம் பகுதிகள்.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை: ராஜாஜி பூங்கா மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகளான, ஷா தியேட்டர், குருவிக்காரன் சாலை, தல்லாகுளம், அழகர்கோவில் சாலை, ஆழ்வார்புரம், பனகல்சாலை, ஷெனாய்நகர் பகுதிகள்.

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை: கோரிப்பாளையம், சொக்கிகுளம், ராமமூர்த்தி தெரு பகுதிகள்.

இரவு 7 முதல் 12.30 வரை: சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான, என்எஸ் கோனார் தெரு, நேதாஜி தெரு, வீரகாளியம்மன் தெரு முதல் ஜீவாநகர் 2-வது மற்றும் குறுக்குத் தெருக்கள் பகுதிகள்.

வெள்ளிக்கிழமை (பிப்.7) அருள்தாஸ்புரம் மேல்நிலைத் தொட்டி, ரிசர்வ்லைன் மேல்நிலைத்தொட்டி, பி அன்ட் டி நகர் பகுதிகள், அண்ணாநகர் மேல்நிலைத் தொட்டி சுந்தரராஜபுரம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

732 மாணவர்களுக்கு ரூ. 84 லட்சம் ஊக்கத்தொகை: மேயர் சைதை துரைசாமி வழங்கினார்

Print PDF

தினமணி             07.02.2014

732 மாணவர்களுக்கு ரூ. 84 லட்சம் ஊக்கத்தொகை: மேயர் சைதை துரைசாமி வழங்கினார்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து, தற்போது உயர்கல்வி பயிலும் 732 மாணவ, மாணவியருக்கு ரூ. 83.91 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகையை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை வழங்கினார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

இதன்படி சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் 732 மாணவர்களுக்கு ரூ. 83.91 லட்சம் அளவிலான ஊக்கத் தொகையை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை வழங்கினார்.

இதில் முதலாமாண்டு பயிலும் 275 பேருக்கு ரூ. 42 லட்சமும், இரண்டாமாண்டு பயிலும் 225 பேருக்கு ரூ. 18.25 லட்சமும், மூன்றாமாண்டு பயிலும் 205 பேருக்கு ரூ. 17.51 லட்சமும், நான்காமாண்டு பயிலும் 27 பேருக்கு ரூ. 6.15 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜன், துணை ஆணையர் (கல்வி) ரா. லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 94 of 3988