Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குடியிருப்போர் சங்கங்களுக்குப் பரிசுகள்

Print PDF

தினமணி             07.02.2014

குடியிருப்போர் சங்கங்களுக்குப் பரிசுகள்

சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

மேலும், சென்னையில் சிறந்த சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

எனவே, சென்னையில் உள்ள குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் அமைப்புகளின் பெயர், பிரதிநிதிகளின் பெயர் மற்றும் பதவி, பதிவு செய்த விவரம் (பதிவுச் சான்றிதழ்), புகைப்பட ஆதாரத்துடன் செயல்பாடுகளின் விவரம் ஆகியவை குறித்த தகவல்களுடன் சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு வரும் பிப். 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Print PDF

தினமணி             07.02.2014

குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கோடை கால குடிநீர் தேவையைச் சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனதன் விளைவாக சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் போதிய நீர் இருப்பு இல்லை. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 3,142 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது.

மேலும் நகரில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே வரும் கோடை காலத்தில் நகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் எனத் தெரிகிறது. இதைத் தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: நெய்வேலி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மறுசீரமைக்கப்பட்டு கூடுதலாக 11 மில்லியன் லிட்டர் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பூண்டி, தாமரைப்பாக்கம், மீஞ்சூர் பகுதியில் ரூ.14 கோடியில் 250 விவசாய ஆழ்துளைக் கிணறுகளில் தினமும் 40 மில்லியன் லிட்டர் நீர் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சோழவரம், புழல் ஏரிகளின் அடிமட்ட நீர் இருப்பையும் வீணாக்காமல் பம்புசெட் மூலம் உறிஞ்சி உபயோகப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் தேவை அதிகம் உள்ள 10,245 இடங்களில் 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சேதமடைந்த 500 தொட்டிகளுக்கு பதிலாக புதிய தொட்டிகளை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் வாரியம் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அடுத்தாண்டு மேலும் 100 பூங்காக்கள்: மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி             07.02.2014

அடுத்தாண்டு மேலும் 100 பூங்காக்கள்: மாநகராட்சி முடிவு

சென்னையில் வரும் நிதியாண்டில் மேலும் 100 பூங்காக்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் பூங்காக்களை அமைத்து, பராமரிக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் 200 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில், 87 பூங்காக்களின் பணிகள் முடிவடைந்துள்ளன. சுமார் 107 இடங்களில் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு காரணங்களால் 4 பூங்காக்கள் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள திறந்தவெளி நிலங்களில் 100 பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. 100 பூங்காக்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 95 of 3988