Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய லண்டனில் இருந்து வந்துள்ள நவீன வாகனம்

Print PDF

தினத்தந்தி            05.02.2014

தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய லண்டனில் இருந்து வந்துள்ள நவீன வாகனம்

 

 

 

 

 

நாய்க்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய லண்டனில் இருந்து நவீன வாகனம் மதுரைக்கு வந்துள்ளது.

வேட்டை

மதுரையில் நாய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் நடந்தால், நாய்க்கடி உறுதி என்ற நிலை தான் மதுரை மக்களுக்கு உள்ளது. மனிதர்களை வேட்டையாட இரவு நேரங்களில் நாய்கள், கூட்டம் கூட்டமாக திரிகின்றன. நாய் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

நாய்களின் இனப் பெருக் கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி லாரி நிலையத்தில் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்படுகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் வெற்றி பெற முடியவில்லை.

நவீன கருத்தடை வாகனம்

இந்த நிலையில், லண்டனில் உள்ள உலக கால்நடை தொண்டு நிறுவனம், மதுரையில் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய உதவி செய்வதாக அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது. இதற்காக லண்டனில் இருந்து நவீன கருத்தடை வாகனம் ஒன்றும், மருத்துவ குழுவும் மதுரைக்கு வர முடிவு செய்யப்பட்டு இருந்தது.

லண்டனில் இருந்து மும்பைக்கு கப்பலில் வந்த நவீன வாகனத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விட்டனர். ரூ.7 கோடிக்கு வரி காட்டினால், வாகனத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதிப்போம் என்று கூறிவிட்டனர். எனவே இந்த வாகனம் மதுரைக்கு வரவில்லை. வெறும் லண்டன் மருத்துவ குழுவினர் மட்டும் வந்தனர். அவர்கள் நாய்களை பிடித்து ஆபரேஷன் செய்தனர்.

ஆபரேஷன் தியேட்டர்

இந்த நிலையில் மும்பையில் துறைமுகத்தில் இருந்த வாகனம் மீட்கப்பட்டு, அசாம் மாநிலத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் பணி செய்தது. நேற்று மதுரை வந்தது. இந்த நவீன வாகனத்தில் ஆபரேஷன் தியேட்டர், சி.டி.ஸ்கேன், எக்.ஸ்ரே வசதி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. நாய்களுக்கு ஆபரேஷன் செய்வதை டி.வி.யில் பார்க்கும் வசதியும் உள்ளது.

இந்த திட்டத்தை கமிஷனர் கிரண்குராலா முன்னிலையில் மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். நகர்நல அலுவலர் யசோதாமணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாய்களுக்கு ஆபரேஷனும், டாக்டர்களுக்கு பயிற்சியும் நேற்று அளிக்கப்பட்டன.

 

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மின்மோட்டார் பறிமுதல்

Print PDF

தினகரன்            05.02.2014

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மின்மோட்டார் பறிமுதல்

அனுப்பர்பாளையம், : அவிநாசியில் குடிநீர் குழாயிலிருந்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்ததால், நேற்று பேரூராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்தனர்.

அவிநாசி பழைய பஸ் நிலையம் அருகே போலீஸ் நிலையம் எதிரில் உள்ள கடை வீதி குடியிருப்பு பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாகவும், அந்த பகுதியில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் குடிநீர் மிகவும் குறைவாக வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் அந்த பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடிநீரில் சாக்கடை கலப்பதில்லை என தெரிந்தது. மேலும் அங்குள்ள ஒரு உணவகத்தில் குடிநீர் இணைப்பில் மின்மோட்டாரை பொருத்தி அதிகளவு குடிநீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து, அந்த குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும் மின்மோட்டாரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுபோல புகார்கள் அடிக்கடி வருவதால், தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு மின்மோட்டாரை வைத்து குடிநீர் உறிஞ்சுவதை கண்டுபிடித்து மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை

Print PDF

தினகரன்            05.02.2014

ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை

ஓமலூர், : ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பால்  ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் நகரம் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்லும் இணைப்பு மற்றும் முக்கிய நகரமாகும். பஸ் ஸ்டேண்டிற்¢கு போதுமான இடவசதி இருந்தும், இந்த பஸ் ஸ்டாண்ட்  போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பஸ்கள் வந்து செல்ல போதுமான இடவசதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால், பல பஸ்கள் உள்ளே வந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதன்படி, தர்மபுரி, மேட்டூர் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டேண்டிற்குள் வராமலேயே சென்று விடுகின்றன.

இந்தநிலையில் பஸ் ஸ்டாண்ட் கடை உரிமையாளர்கள், பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடைகளை பஸ் ஸ்டேண்டிற்கு உள்ளே நீட்டித்து பஸ்கள் வரமுடியாத வகையிலும், பயணிகள் நிற்கமுடியாத நிலையிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும்,  புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தில் தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகளின் மூட்டைகள், பழக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நிழலுக்காக ஒதுங்கி நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதேபோல் பயணிகள் நடக்க முடியாத அளவில் நடைபாதை கடைகள்  ஆக்கிரமித்துள்ளன. கடைகள் ஓரமாக நின்றால் கடைகாரர்களின் கடுமையான பேச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்துக்கு ஆளான ஒருவர் ஒரு காலை இழந்தார். இது குறித்து வந்த பல்வேறு புகார்களை அடுத்து, பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி மன்ற தலைவர் (பொ) பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி மேற்பார்வையில் பணியாளர்கள் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

 


Page 100 of 3988