Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சியில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Print PDF

தினகரன்             04.02.2014

மாநகராட்சியில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருச்சி, - திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.  

இதில் சாலை மேம் பாடு, ஆக்கிரமிப்பு அகற் றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழிவறை மற்றும் பூங்காக் கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர் பாக 10 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடை யூறாக சாலை மற்றும் முக் கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரைந்து பழுது நீக்கம் செய்யவும், பொதுமக்களி டம் பெறப் படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு முழு மையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என் றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார். கூட்டத்தில், துணை மேயர் மரியம் ஆசிக் மீரா, நகரப் பொறி யாளர் சந்தி ரன், நகர்நல அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

ரூ.10.70 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

Print PDF

தினமணி             03.02.2014

ரூ.10.70 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

ஈரோடு மாநகராட்சி மற்றும் பெருந்துறை தொகுதியில் ரூ.10.70 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சியில், ஈரோடு சென்னிமலை சாலை முதல் பெரியசடையம்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.10.09 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி, பெருந்துறை தொகுதியில் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி ஸ்ரீராம் நகர் பகுதியில் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, பெருந்துறை பேரூராட்சி ஜீவா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சலை அமைக்கும் பணி, பெரியவிளாமலை ஊராட்சியில் கண்ணவேலம்பாளையம் பகுதியில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் குறுக்கே ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ.10.70 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளை பூமி பூஜை நடத்தி அவர் தொடங்கிவைத்தார்.

அமைச்சர் வெங்கடாசலம் பேசும்போது, ஈரோடு மாநகராட்சியில் ஈரோடு சென்னிமலை சாலையையும், பெரியசடையம்பாளையம் சாலையையும் இணைப்பதற்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்று ரூ.10.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். இப்பாலம் 18 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்றார்.இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆர்.என்.கிட்டுசாமி, ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் துரை.சக்திவேல், மண்டலக் குழு தலைவர்கள்  இரா.மனோகரன், பி.கேசவமூர்த்தி, மாவட்ட சிந்தாமணி தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

 

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 250 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி             03.02.2014

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 250 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 250 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

திருப்பூர் மாநகராட்சியின் 2, 3-ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட 30 வார்டுகளில் குப்பை அகற்றும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா, திருநீலகண்டபுரத்தில் நடைபெற்றது.

இதற்கு, மேயர் அ.விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், குப்பை அகற்றும் பணியைத் துவக்கிவைத்து வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியது:

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் அதிமுக ஆட்சியில் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கடந்த 2.5 ஆண்டுகளில் திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக முதல்வர் ரூ. 250 கோடி வழங்கி உள்ளனர். அதன்மூலமாக மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள துப்புரவுப் பணியாளர் பற்றாக்குறை, வாகனங்கள் பற்றாக்குறை குறித்து

தமிழக முதல்வரின் கவனத்துக் கொண்டுசென்றேன். அதன் அடிப்படையில், தனியார் நிறுவனம் மூலமாக குப்பை அகற்றும் பணிக்கு முதல்வர் அனுமதி அளித்தார்.

தனியார் நிறுவனம் மூலமாக, குப்பை அகற்றும் பணிகளுக்கு 781 பணியாளர்கள், 28 ஓட்டுநர்கள், 800 குப்பை கொட்டும் கன்டெய்னர் தொட்டிகள் உள்ளிட்ட வசதிகளுடன் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

நகரை தூய்மையாக வைப்பதற்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மேயர் அ.விசாலாட்சி பேசியது:

திருப்பூரில் 2, 3-ஆம் மண்டலப் பகுதிகளுக்கு உள்பட்ட 30 வார்டுகளில் குப்பை அகற்றும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 வீடுதோறும் குப்பை சேகரித்தல், வீதிகளில் கன்டெய்னர் தொட்டிகளில் இருந்து குப்பை அகற்றும் பணிகள் உள்பட தனியார் நிறுவம் மேற்கொள்ளும் இந்தப் பணிகள் அனைத்தும் நவீனத் தொழில்நுட்பம் மூலமாக அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றார்.

இதில், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், சுகாதாரக் குழு தலைவர்

பூலுவப்பட்டி பாலு, நகர்நல அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 104 of 3988