Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி             03.02.2014

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுகாதாரமாகப் பராமரிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினமும் சேகரமாகும் சுமார் 850 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இக் குப்பைகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு பிராசசிங் செய்யப்படுகிறது.

குப்பையிலிருந்து துர்நாற்றம் மற்றும் கொசு, ஈக்கள் தொல்லைகளைத் தடுக்க தினமும் 5 பணியாளர்கள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்து வருகின்றனர். இம்முறையானது வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு குப்பை ஏற்றி வரும் வாகனம் உள்ளே வந்ததும் முதலில் எடை மேடை அருகே மைக்ரோ ஆர்கனிசம் கலவை குப்பையின் மேல் தெளிக்கப்படுகிறது.

பிறகு குப்பையை பிராசசிங் பிளான்டில் கொட்டியவுடன் மீண்டும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. பிறகு உரம் தயாரிக்க குப்பைகள் கொட்டி வைப்பதன் மேலேயும் மருந்து தெளிக்கப்படுகிறது.

தினமும் சேகரமாகும் குப்பையின் மேலும் மற்றும் பிராசசிங் செய்த குப்பையின் மேலும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.

 

மானாமதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தீவிர நடவடிக்கை: தலைவர் தகவல்

Print PDF

தினமணி             03.02.2014

மானாமதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தீவிர நடவடிக்கை: தலைவர் தகவல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதல் இடங்களில் போர்வெல் கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவர் ஐ.ஜோசப்ராஜன் தெரிவித்தார்.

மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ஜோசப்ராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காளீஸ்வரி தெய்வேந்திரன், செயல் அலுவலர் அமானுல்லா, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை சுகாதார மேற்பார்வையாளர் பாலு வாசித்தார்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியிலுள்ள அடிப்படை  பிரச்னைகள் குறித்து பேசினர்.

கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர் பதிலளித்துப் பேசியதாவது:

ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்படும் மானாமதுரை நகர் குடிநீர் திட்டத்துக்கான போர்வெல் கிணறுகளில் வறட்சி காரணமாக நீர் ஆதாரம் குறைந்து வருவதால், தற்போது நகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இனி வரக்கூடிய கோடைகாலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும் என கருதுவதால், முன்னெச்சரிக்கையாக தற்போதுள்ள போர்வெல்

கிணறுகளுடன் மேலும் கிணறுகள் அமைத்து அதிலிருந்து குடிநீர் சப்ளை செய்யும் திட்டம் உள்ளது.

மேலும் நகரில் பல்வேறு இடங்களிலும் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் செயல்படும் ராஜகம்பீரம் வைகையாற்று பகுதியில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும், பேரூராட்சி கவுன்சிலர்கள் மன்றக் கூட்ட பார்வைக்கு கொண்டு வந்த நகர் வளர்ச்சித் திட்டத்துக்கான பணிகளை எடுத்துச் செய்ய அனுமதி கோருதல், பேரூராட்சியின் செலவினங்களை அங்கீகரித்தல், திட்டப் பணிகளை எடுத்துச் செய்ய குறைந்த ஒப்பந்தப்புள்ளி கொடுத்த ஒப்பந்தங்களை அனுமதித்தல் என 17 தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

 

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினகரன்             03.02.2014

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

சுரண்டை, : சுரண்டை பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல் பாடு மற்றும் பொது சுகா தாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ஜெயராணிவள்ளி முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனி நாடார் முன்னிலை வகித் தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா வரவேற்றார்.

முகாமில் செயல் அலுவலர் பொன்னம்பலம் கலந்து கொண்டு பேசுகை யில், ‘சுரண்டை பேரூராட்சி பகுதியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய  மற்றும் மாநில அரசுகள் மானியத்துடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனி நபர் குழுக் கடன், சுழல் நிதி விரைவில் வழங்கப்படும். தனிநபர் கழிப்பிடம் அவசியம். பொது சுகாதாரத்தை பெரியோர், சிறியோர் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார். பின்னர் அவர் பொது சுகாதார விழிப்புணர்வு நோட்டீசை பொது மக்களிடம் வழங்கினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், வசந்தா, செல்வி, கண்ணன், செல்வன், அருணாசலக்கனி, கல்பனா, சமுத்திரக்கனி, சங்கரா தேவி, இந்திரா, மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பொன்னுத்தாய், ஜீவக்கனி, சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 105 of 3988