Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நரசிங்கபுரம் நகராட்சியில் தொழில்வரி உயர்வு 25 சதவீதம் அதிகரிப்பு

Print PDF

தினகரன்                03.02.2014

நரசிங்கபுரம் நகராட்சியில் தொழில்வரி உயர்வு 25 சதவீதம் அதிகரிப்பு

ஆத்தூர்,: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 138, 13 உட்பிரிவு(2)ன் படியும் நகரமன்ற தீர்மானத்தின்படியும் நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு 25 சதவீத தொழில்வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரையாண்டிற்கான மொத்த வருமானம் ரூ21,001 வரை உள்ளவர்களுக்கு தொழில்வரி விதிப்பு இல்லை ரூ21,001 முதல் ரூ30,000 வரை உள்ளவர்களுக்கு ரூ125ம், ரூ30,001 முதல் ரூ45,000 வரை உள்ளவர்களுக்கு ரூ313ம், ரூ45,001 முதல் ரூ 60,000 வரை உள்ளவர்களுக்கு ரூ625ம், ரூ60,001 முதல் ரூ75,000 வரை உள்ளவர்களுக்கு ரூ938ம், ரூ75,001 முதல் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ1250 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பின்படி நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் தொழில்வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மாநகராட்சியில் 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு

Print PDF

தினகரன்                03.02.2014

மாநகராட்சியில் 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு

திருப்பூர், : மாநகரில் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மாநகரில் தினமும் 540டன் குப்பை சேருகிறது. இக்குப்பையை அகற்றும் பணி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 மற்றும் 3வது மண்டலங்களில் உள்ள தலா 15 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், வரும் 2ம் தேதியில் இருந்து இந்த 30 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதுதொடர்பாக, அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியும் ஆய்வுக் கூட்டம் மேயர் விசாலாட்சி தலை மையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை மேயர் குணசேகரன், மண்டலத் தலைவர்கள் ராதாகிருஷ்ண ன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், வீதிகளில் குப்பையை அள்ளுவது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் செயல்படும் விதம் குறித்து அந்நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கினர். வீடுகள் தோறும் குப்பை சேகரிப்பதைக் கண்டறிவது குறித்து மேயர் விசாலாட்சி கேட்டறிந்தார். குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.ஆர்.கருவி பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீதிகளில் குப்பை நிரம்பியுள்ள கன்டெய்னர் கண்டறியப்படும் என்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து நேற்று மாலை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்களுக்கு இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

 

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைப் போட்டிகள் பரிசளிப்பு

Print PDF

தினகரன்                03.02.2014

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைப் போட்டிகள் பரிசளிப்பு

புதுக்கோட்டை,: புதுக் கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் மற் றும் போஸ் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி இணைந்து குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி களை நடத்தியது.

இப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கண்ணன், பள்ளி நிர்வாக தலைவி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  ஓவியப் போட்டிகளில் ஹரிஹரன், அருண்குமார், அனுபாரதி ஆகி யோர் முதல் பரிசையும், சஞ்சய்குமார், துளசிவர்மா, ஆரோன் மோசே ஆகி யோர் 2ம் பரிசுகளையும், சிந்திகா, சந்தோஷ், தீபிகா ஆகியோர் 3ம் பரிசுகளை யும் பெற்றனர். 

பேச்சுப் போட்டிகளில் தனசேகர், துளசிவர்மா, கமலி ஆகி யோர் முதல் பரிசையும்,  சிந்திகா, அஸ்வினி, இஸ்மத்நூன் ஆகியோர் 2ம் பரிசுகளையும், ஜெய்கு மார், ரூபாசக்தி, மனோஜ் குமார் ஆகியோர் 3ம் பரிசுகளை யும்,  கட்டுரைப்போட்டிகளில் பானு பிரபா, ஆசிகா பேகம், அனுபாரதி ஆகி யோர் முதல் பரிசையும், ஹரிஹரன், துளசிவர்மா, கமலி இரண்டாம் பரிசை யும், நந்தினி, அருண்குமார், சந்துரு ஆகியோர் 3ம் பரிசையும் பெற்றனர்.

விழா வில் புத்தா மார்சியல் ஆர்ட் ஸ் நிறுவனர் சேது கார்த்திகேயன், பேலஸ் சிட்டி செயலாளர் இதயதுல்லா, ஒருங்கிணைப் பாளர் நவநீதகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர்கள், ஆசிரியைகள் உமாதேவி, மகேஸ் வரி, கீதா, மாணவ, மாண விகள், பெற் றோர் உள்பட பலர் கலந்து கொண் டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் லதா, சிவ ராணி, பேலஸ் சிட்டி ரோட் டரி சங்கத்தினர் செய்திருந்தனர். முன்ன தாக தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். ஆசிரியை அமிர்தகொடி நன்றி கூறினார்.

 


Page 106 of 3988