Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்             01.02.2014

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம்

திருக்காட்டுப்பள்ளி, : தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம் தலைவர் மங்கையற்கரசி தலைமையில் நேற்று நடந்தது.

துணைத் தலைவர் இளவரசி, செயல் அலுவலர் சாந்தகுமார் முன்னிலை வகித்தனர். திமுக உறுப்பினர்கள் திவ்யா, தனலெட்சுமி, மாரியப்பன், சரவணகுமார், சங்கர் அதி முக உறுப்பினர்கள் பிரபு, ராஜேஷ்கண்ணன், செல்வப்பிரியா, நல்லேந்திரன், நக்கீரன், பொன்னரும்பு, தன்ராஜ், முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண் டனர். கூட்ட பொருட்களை இளநிலை உதவியாளர் வைரக்கண்ணு வாசித்தார். கூட்டத்தில் குடமுருட்டி லயன் கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையின் தென்பகுதியில் தரை தளம் சிமெண்ட் பிளாக் அமைப்பது, பேரூராட்சி 15 வார்டுகளில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அமரர் ஊர்தி வாகனம் வாங்குவது, ஒன்பத்து வேலி தைக்கால் தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

பேரூராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும்பேரவை கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினகரன்             01.02.2014

பேரூராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும்பேரவை கூட்டத்தில் தீர்மானம்

அன்னவாசல், : புதுக் கோட்டை மாவட்டம் அன்னவாசலில், சாலை ஓர வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம் முத்தை யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஜடியூசி மாவட்ட தலைவர் தர்மராஜன், அன்னவாசல் பேரூராட்சி கவுன்சிலர்கள் மீராமொய்தீன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு எளிதில் குறைவான விலையில் கிடைக்கச் செய்யும், நோக்கத்தோடு வியாபாரம் செய்து வரும் சாலை ஓர வியாபாரிகளுக்கு தொழில்துறையை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்.

தரைக்கடை வியாபாரிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு வங்கிகளில் மானியக்கடன் வழங்க வேண்டும். சாலை ஓர வியாபாரிகளின் தொழில் பாதுகாப்பிற்கு பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை, வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வெங்கடாசலம், சாகுல் அமீது, ஆறுமுகம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம்

Print PDF

தினகரன்             01.02.2014

கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம்

மஞ்சூர், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது.நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜெயாசந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் போஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மணிகண்டன் வரவேற்றார். முன்னதாக பேரூராட்சியின் வரவு, செலவினங்கள் மற்றும் பிறப்பு, இறப்பு விகிதங்கள் சரிபார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரும்பாலான உறுப்பினர்களும் தங்களது வார்டுகளில் தடையற்ற குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ளவும், தெருவிளக்குகள், தடுப்புசுவர்கள், நடைபாதை, சாலை வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தி பேசினர். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கவுன்சிலர் அர்ஜூணன் நன்றி கூறினார்.

 


Page 116 of 3988