Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அவல்பூந்துறை பேரூராட்சியில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

Print PDF

தினமணி             31.01.2014

அவல்பூந்துறை பேரூராட்சியில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

அவல்பூந்துறை பேரூராட்சியில் புதன்கிழமை குடிநீர்த் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.

அவல்பூந்துறை பேரூராட்சி 6-ஆவது வார்டு, பொங்காளிவலசில் சாக்கடை கட்டும் பணிக்காக பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 1.65 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணியை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் மணி (எ) சிவசுப்பிரமணியம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல, சென்னிமலைப்பாளையத்தில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 4.5 லட்சம் செலவில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இதிலிருந்து குடிநீர் விநியோத்தை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமி துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் கே.சி.ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் தினகரன், சண்முகம், அட்டவணை அனுமன்பள்ளி முன்னாள் துணைத் தலைவர் கோவிந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் பொன்னுசாமி, அவல்பூந்துறை டெக்ஸ் தலைவர் பூவைதமிழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

பெருந்துறை பேரூராட்சியில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை

Print PDF

தினமணி             31.01.2014

பெருந்துறை பேரூராட்சியில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை

பெருந்துறை பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது .

பெருந்துறை பேரூராட்சி பகுதிச் சாலைகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவைகள் சில சாலைகளில் செல்பவர்களைக் கடித்து விடுகின்றன. மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைத் தொடர்ந்து, குரைத்துக் கொண்டே துரத்திச் செல்கின்றன.

இதில், சிலர் தடுமாறி விழுந்து, காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து, போரூராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பெருந்துறை பேரூராட்சி சார்பில், சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை, சுகாதார பணியாளர்கள் பிடித்து, கால்நடை மருத்துவர்கள் மூலமாக அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 20 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

 இக் கூட்டத்திற்கு பின், மேயர் அ.விசாலாட்சி செய்தியாளர்களிடம் கூறியது:

 மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் உள்ள 16 முதல் 30-ஆவது வார்டு வரை,

3-ஆவது மண்டலத்தில் 31 முதல் 45-ஆவது வார்டு வரை என மொத்தம் 30 வார்டுகளில் குப்பை அகற்றும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீடுகள்தோறும் 600 தள்ளுவண்டிகள் மூலமாக குப்பை சேகரிக்கப்படும். வீதிகளில் குப்பை கொட்டுவதற்கு 800 காம்பேக்டர் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். இத் தொட்டிகளில் ரேடியோ அதிர்வு அடையாள அட்டை பொருத்தப்பட்டு, இணையதளம் மூலமாக கண்காணிக்கப்படும்.

 பேருந்து நிலையம், சந்தை, முக்கியச் சாலைகளில் 24 மணி நேரமும் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும். இத் தனியார் குப்பை வாகனங்களில் பொது சிறு தொகுதி அலை சேவை கருவி (எடதந) பொருத்தப்பட்டு, அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

குப்பையை அகற்றுவது தொடர்பாக மக்கள் அழைப்பதற்காக இலவச சேவை எண் வழங்கப்படும். ஆன்லைன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

 தனியார் குப்பை சேகரிக்கும் பணியை வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) துவக்கி வைக்க உள்ளார். திருப்பூர் மாநகரை தூய்மையான நகரமாக உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

 

781 துப்புரவுப் பணியாளர்களுடன் குப்பை சேகரிக்கும் பணி

Print PDF

தினமணி             31.01.2014

781 துப்புரவுப் பணியாளர்களுடன் குப்பை சேகரிக்கும் பணி

திருப்பூர் மாநகரில் 30 வார்டுகளில், 781 துப்புரவுப் பணியாளர்கள், 600 தள்ளுவண்டிகள், 800 குப்பைத் தொட்டிகள் மூலமாக வீடுதோறும் குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) ஈடுபட உள்ளது.

 திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் 500 டன்களுக்கும் கூடுதலான குப்பை தெருக்களில் கொட்டப்படுகிறது. சுகாதாரப் பணிகளுக்குத் தேவையான துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால், மாநகர் முழுவதும் குப்பையை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

 இப் பிரச்னைக்குத் தீர்வாக மொத்தமுள்ள 60 வார்டுகளில், 30-இல் குப்பையை அகற்றும் பணியை தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 நகராட்சிகள், திருச்சியில் துப்புரவுப் பணிகளைச் சிறப்பாக செய்து வரும், சீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனம், திருப்பூர் மாநகரில் குப்பை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளது.

 இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை, சுகாதார அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்களுக்கு இதுகுறித்து படவிளக்கக் காட்சிகளுடன்

அந் நிறுவனத்தின் செயல்பாடுகள் விளக்கப்பட்டன.

 இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மேயர் அ.விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், சுகாதாரக் குழுத் தலைவர் பூலுவப்பட்டி பாலு, நிலைக்குழுத் தலைவர்கள் முருகசாமி, அன்பகம் திருப்பதி, நகர் நல அலுவலர் செல்வராஜ், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 குப்பையை அகற்றும் தனியார் நிறுவன முதன்மை நிர்வாகி எஸ்.வெங்கடேஷ், இப் பணிகள் குறித்த விவரங்களை படவிளக்கக் காட்சிகளுடன் விளக்கினார்.

 இதில், துணை மேயர் சு.குணசேகரன் பேசியது:

 தாய்மைக்கு நிகர் தூய்மை என்ற இலக்குடன் சுகாதாரமான மாநகரை உருவாக்கும் வகையில், குப்பை அகற்றும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார்.

 


Page 125 of 3988