Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குரங்குகள் தொல்லை ஒழிக்கப்படும்: சாத்தூர் நகர்மன்றக்கூட்டத்தில் தகவல்

Print PDF

தினமணி                30.01.2014  

குரங்குகள் தொல்லை ஒழிக்கப்படும்: சாத்தூர் நகர்மன்றக்கூட்டத்தில் தகவல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் சுற்றித்திரியும் மாடுகள், குரங்குகள் இனி நகர்ப்பகுதிக்குள் வராமல் தடுக்கப்படும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் ஆணையாளர் மணி தெரிவித்தார்.

 சாத்தூர் நகர்மன்றக்கூட்டம் புதன்கிழமை தலைவர் டெய்சிராணி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

  உறுப்பினர் இளங்கோவன்: நகர்ப் பகுதியில் மாடுகள் மற்றும் குரங்குள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பெரும்இடையூறு ஏற்படுகிறது. சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள தனியார் விடுதியில் கார் நிறுத்தும் இடம் அமைக்கப்படவில்லை. அப்படியிருந்தும் நகராட்சி அந்த விடுதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாலித்தீன் பைகள் அதிகமாக பயன்படுத்தபட்டு வருகிறது. மேலும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்றத் தலைவர் ஆகியோர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று  மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும்.

  ஆணையாளர்: மாடுகள் மற்றும் குரங்குளை நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை குறைக்க ஏற்கெனவே கடைகளில் சோதனை நடத்தபட்டுள்ளது. மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாமல் விடுதி செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 கண்ணன்: சாத்தூர் பேருந்து நிலையத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட இலவச கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும்.

  ஆணையாளர்: இலவச கழிப்பறைக்கு சரியான பாதுகாப்பு இல்லை. சமூக விரோதிகள் கழிப்பறையை பூட்டிவிட்டு செல்கின்றனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  கூட்டத்தில் பொறியாளர், நகர அமைப்பு அலுவலர், சுகாதாரத் துறை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தார் சாலை, மின்விளக்கு திறப்பு விழா

Print PDF

தினமணி                30.01.2014  

தார் சாலை, மின்விளக்கு திறப்பு விழா

திருவேற்காடு நகராட்சியில் அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் மின்விளக்குகளை அமைச்சர் அப்துல் ரஹீம் செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.

திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட கோலடி முதல் அயனம்பாக்கம் வரை ரூ.1.64 கோடி  செலவில் தார் சாலையும் இதே பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்புடைய மின்விளக்குகளும் நகராட்சி பொது நிதியில் இருந்து புதிதாய் அமைக்கப்பட்டது.

செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற இதன் திறப்பு விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் மின்விளக்கு மற்றும் சாலையை திறந்து வைத்தார்.

இதில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

மன்னார்குடி நகரில் ரூ5 கோடியில் புதிய சாலைகள் நகர்மன்ற தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                30.01.2014 

மன்னார்குடி நகரில் ரூ5 கோடியில் புதிய சாலைகள் நகர்மன்ற தலைவர் தகவல்

மன்னார்குடி, : மன்னார்குடி நகரில் ரூ.5 கோடி யில் புதிய சாலைகள் அமைக்கப்பட இருப்பதாக நகர்மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன் தெரிவித்தார்.

மன்னார்குடி நகராட்சி சார்பில் பொது மக்கள் குறை கேட்கும் முகாம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன் தலைமை வகித்தார். ஆணை யர் (பொ) மனோகரன், துணை தலைவர் வரலெட் சுமி மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சியின் அனைத்து பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் சுமார் 120 மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றில் பெரும் பாலும் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், தெரு விளக்குகள், சாலை வசதி, மற்றும் குப் பைத் தொட் டிகள் வைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத் தியும் மக்கள் மனு அளித்தனர்.  அதேபோல் பெயர் மாற்றம் பிறப்பு, இறப்பு சான்றிதழ், மருத்துவ உதவிகேட்டும் சிலர் மனு அளித்திருந்தனர். அந்த மனுக்கள் மீது பொது மக்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து  நகரர்மன்ற தலை வரும், அலுவலர்களும் பதிலளித்தனர்.இதுபற்றி நகர்மன்றத்தலைவர் சுதா அன்புச்செல் வன் கூறியது:

பொதுமக்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்களில் பிறப்பு, இறப்பு மற்றும் பெயர் மாற்றம் போன்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கானப்பட் டது. அதுபோல் தங்களது பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பான பிரச்னையையும் பொது மக்கள் முன்வைத்தனர். அவற்றை தயார் நிலையில் இருந்த  துப்புரவு பணியாளர்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று அந்த குறை களை சரி செய்தனர். மே லும் ஆக்கிரமிப்புகள் தொடர்பான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள் ளோம். ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  நகரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்னுரிமை அளிக்கப்படும். 

மன்னார்குடி நகரில் 24 வார்டுகளில் ரூ. 5 கோடிக்கு புதிய சாலைகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு விரை வில் பணிகள் தொடங்கவுள்ளன. மீத முள்ள 7 வார்டுகளில் இந்த பணிகள் நடைபெற்று முடிவதற்குள் நிதியை கேட்டுப்பெற்று சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு நகராட்சி தலைவர் கூறினார்.

 


Page 129 of 3988