Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தஞ்சை நகர்பகுதியில் ரூ.14லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம்

Print PDF

தினகரன்                30.01.2014 

தஞ்சை நகர்பகுதியில் ரூ.14லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம்

தஞ்சை, : தஞ்சை நகராட்சி பகுதியில் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.14.21 கோடி செலவில் தார் சாலை போடும் பணி தொடங்கப்பட்டது.

தஞ்சை நகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளில் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதை தார் சாலைகளாக மாற்ற நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.14.21 கோடி மதிப்பில் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. 37வது வார்டுக்குட்பட்ட விக்டோரியா நகர் ஆதி சேசன் தெருவில் நகராட்சி தலைவர் சாவித்திரி கோபால் பூமி பூஜையுடன் சாலை பணிகளை தொடங்கி வைத் தார். அப்போது அவர் கூறும்போது, தஞ்சை நகராட்சியில் 51 வார்டுகளில் சீரமைக்கப்படாமல் இருந்த சாலைகள் தற்போது 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தார் சாலைகளாக போடப்படுகிறது. அதன்படி 6840 மீட்டர் நீளத்திற்கு ரூ.2.72 கோடி மதிப்பில் ஒரு பிரிவாகவும், 8240 மீட்டர் நீளத்திற்கு ரூ.3 கோடி மதிப்பிலும், 11920 மீட்டர் நீளத்திற்கு ரூ.4.26 கோடி மதிப்பிலும், 10190 மீட் டர் நீளத்திற்கு ரூ.4.23 கோடி மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் தரமாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

 

பூந்தமல்லி நகராட்சியில் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல்

Print PDF

தினகரன்                30.01.2014 

பூந்தமல்லி நகராட்சியில் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல்

பூந்தமல்லி, : பூந்தமல்லி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி குடியிருப்புகள், புதிய தொழிற்சாலைகள் கட்டும் பணி நடந்து வருவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தலைமையில் பூந்தமல்லி நகர அமைப்பு ஆய்வாளர் தினகரன், பொறியாளர் வைத்தியலிங்கம், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் பூந்தமல்லி லட்சுமி நகரில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த ஒரு குடியிருப்பு, பூந்தமல்லி பைபாஸ் சாலையில் இயங்கி வந்த உடனடி சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனத்துக்கு நேற்று சீல் வைத்தனர்.

இதுகுறித்து ஆணையர் சுரேந்திர ஷா, நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் கூறுகையில், தமிழ்நாடு நகரமைப்பு உள்கட்டமைப்பு சட்டம் 1971 பிரிவு 56, 57ன்படி பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சியின் உரிய அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை தொடர்ந்து கண்காணித்து சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என்றார்.

 

கூடுவாஞ்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்                30.01.2014 

கூடுவாஞ்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கூடுவாஞ்சேரி,  : நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி, ஹேண்ட் இன் ஹேண்ட் மற்றும் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி இணைந்து பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது.

பேரூராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் டில்லீஸ்வரி ஹரி, முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன், பள்ளி தலைமை ஆசிரியர் ஹெல்பெலக்ஸ் முன்னிலை வகித்தனர்.

பள்ளியில் தொடங்கிய பேரணி,  முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. குப்பைகளை சாலைகளில் போடாதீர், கழிவுநீர் கால்வாய்களில் கொட்டாதீர், கடைகளில் பிளாஸ்டிக்குகளை விற்பதை தவிர்ப்பீர் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

 


Page 130 of 3988