Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பிப்ரவரி 1ம்தேதி நடக்கிறது பொதுநல சங்கங்கள் குறை கேட்பு கூட்டம் மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன்                29.01.2014  

பிப்ரவரி 1ம்தேதி நடக்கிறது பொதுநல சங்கங்கள் குறை கேட்பு கூட்டம் மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, :  மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகள் குறைகேட்பு கூட்டம் கடந்த 25ம்தேதி நடத்தப்படுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் வரும் 1ம்தேதி நடத்தப்படுகிறது. அதன்படி மண்டலம் ஒன்று முதல் 8 வரை செயல்பட்டு வரும் பொதுநல சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டம் கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. உள் விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும். மண்டலம் 9 முதல் 15 வரையில் செயல்படும் பொதுநல சங்கங்கள் பிரதிநிதிகளுடனான குறைகேட்பு கூட்டம் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் அன்றைய தினம் மாலை 3 மணிக்கும் நடக்கிறது.

இதில், மாநகராட்சி ஆணையர், இணை மற்றும் துணை ஆணையர்கள், அனைத்து துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 

மாநகராட்சி பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

Print PDF

தினகரன்                30.01.2014

மாநகராட்சி பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

திருச்சி, : திருச்சி மாநகராட்சிக்கான 2014- 15ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்தார். இதில் நிதிநிலை அறிக்கை தயார் செய்வது, மாநகராட்சிக்கான வருவாய் இனங்களை மேம்படுத்துதல், அரசின் மூலாதார நிதியை அதிகரிக்கவும், மாநகர வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட் டது.

ஆணையர் தண்ட பாணி, துணைமேயர் மரி யம் ஆசிக், கோட்ட தலைவர்கள் சீனிவாசன், மனோகரன், நிதிக்குழு தலைவர் அய்யப்பன், மாநகர பொறி யாளர் சந்திரன், செயற்பொறியாளர்கள் அருணாசலம், நாகேஷ், நகர்நல அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர்கள் பிரபுகுமார் ஜோசப், ரங்கராஜன், தனபால் தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

திருச்சி மாநகராட்சியில் மழைநீர் சேகரிக்க திட்டம் தயார் கருத்தரங்கில் ஆணையர் தகவல்

Print PDF

தினகரன்                30.01.2014

திருச்சி மாநகராட்சியில் மழைநீர் சேகரிக்க திட்டம் தயார் கருத்தரங்கில் ஆணையர் தகவல்

திருச்சி, : கேரளாவை போன்று திருச்சி மாநகராட்சியில் மழைநீர் சேக ரிக்க திட்டம் தயார் செய்து வருவதாக கருத்தரங்கில் ஆணையர் தண்டபாணி தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி மற்றும் சென்னை மழை இல்லம் அமைப்பு சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கம் பெமினா ஓட்டலில் நேற்று நடந்தது. மழை இல்லம் நிர்வாக இயக்குனர் சேகர் ராகவன் தலைமை வகித்தார்.

கருத்தரங்கை துவக்கி வைத்து திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி பேசியதாவது: திருச்சியில் 1.60 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமை ப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 70 ஆயிரம் வீடுக ளில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சியில் 50 சதவீத இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஆண்டுக்கு 40 நாட்கள் மழை பெய்கி றது. இது சராசரியாக 835 மி.மீ. என பதிவாகியுள்ளது. இதில் 60 சதவீதம் மழைநீர் வீணாகிறது. திருச்சி மாநகரில் மழைநீர் சேகரிக்க பல்வேறு கட்ட முயற்சி நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் திருச்சி மாநகரில் மேட்டுப்பகுதி, சமமான பகுதி, தாழ்வான பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தாழ்வான பகுதிகளில் ஏராளமான குடிசை வீடு கள் இருக்கிறது. மேட்டுப்பகுதியில் கிடைக்கும் மழை நீரை மேட்டு பகுதியிலேயே சேகரிக்க மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 90 சத வீத அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 43 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார்ச்சாலையில் ரூ.183 கோடியில் மழைநீர் சேகரிப்பு அமை ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாவதில்லை. அதை பார்வையிட்டு வந்துள்ளோம். அதுபோல் திருச்சியிலும் மழைநீர் வீணாகாமல் கிணற்றடி நீராக மாற்ற பல்வேறு திட்டங்கள் தயார் படுத்தப் பட்டு வருகிறது. இவ்வாறு ஆணையர் பேசினார். தஞ்சை மண்டலத்தில் உள்ள நகராட்சி ஆணையர் கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 132 of 3988