Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பாதாள சாக்கடைக்கு வரி செலுத்தாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அபராதம் மாநகராட்சி அதிரடி

Print PDF

தினகரன்                30.01.2014

பாதாள சாக்கடைக்கு வரி செலுத்தாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அபராதம் மாநகராட்சி அதிரடி

திருச்சி, : பாதாள சாக்கடைக்கு வரி செலுத்தாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அப ராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் வரி செலுத்தாமல் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கண்டோன்மென்ட் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தனபால் தலைமையில் அலுவலர்கள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பாதாள சாக்கடைக்கு வரி செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வரிகட்டாத வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் யார், யார் பாதாள சாக்கடைக்கு இதுவரை வரி செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர்ந்து வரி செலுத்தாத வீடுகள் கண்டறியப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்றனர்.

 

திருக்கோவிலூரில் 25 நாய்களுக்கு கருத்தடை

Print PDF

தினகரன்                30.01.2014

திருக்கோவிலூரில் 25 நாய்களுக்கு கருத்தடை

திருக்கோவிலூர், : திருக்கோவிலூர் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வந்தது. இதில் நகர்ப்புறத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் அதிகளவ் விபத்துகள் நடந்து வந்தது. கடந்த வாரம் வெறிநாய் கூட்டம் சுமார் 20 பேரை கடித்து குதறியது. இதனால் திருக்கோவிலூர் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்.

 இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பத் உத்திரவின் பேரில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்ய சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  அதன்படி நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நேற்று முதல் கட்டமாக திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 25 நாய்களை கண்டறிந்து அவைகளுக்கு கால்நடை மருத்துவர் களால் கருத் தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த சிறப்பு அறுவை சிகிச்சை முகாமில் பேரூராட்சி மன்ற தலைவர் தேவிமுருகன், துணைத்தலைவர் குணா, செயல்அலுவலர் சுந்தரம்,  மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சுப்பு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், கால்நடைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

 

திண்டுக்கல் குமரன் பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன்                30.01.2014

திண்டுக்கல் குமரன் பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து நகராட்சி எச்சரிக்கை

திண்டுக்கல், : திண்டுக்கல் குமரன் பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

திண்டுக்கல் நகராட்சிக்கு சொந்தமான குமரன் பூங்கா கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. பல வண்ண பூச்செடிகள், அழகிய சிமென்ட் சிற்பங்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே பூங்கா சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி இருந்தது. பொதுமக்களின் வருகையும் குறைந்தது.

இதையடுத்து நகராட்சி சார்பில் பல லட்சம் செலவில் பூங்கா சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் இரண்டு வாரத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூங்கா பராமரிக்கும் பொறுப்பை மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் ஒப்படைக்க கடந்த 4 நாட்களுக்கு முன்பு நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதன்முதலாக பூங்கா ஒப்பந்த அடிப்படையில் மகளிர் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்படி சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் எடுக்கும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சீருடை அணிந்து பகுதிநேரம் பிரித்து பூங்காவை பராமரிக்க வேண்டும். இரவு மற்றும் பகல் காவலர்கள் நியமிக்க வேண்டும். பூங்காவிற்கு தண்ணீர் விட இரண்டு நபர்கள் நியமிக்க வேண்டும்.

உணவு மற்றும் டீ, காபி, குளிர்பானங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். வேறு ஏதும் கடைகள் வைக்கக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள், சிகரெட், பான்மசால், குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்யக்கூடாது.

விளையாட்டு உபகரணங்கள் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனே பழுது நீக்கி தர வேண்டும். ஒரு நபருக்கு நுழைவுக்கட்டணம் ரூ.5 மட்டும் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும். வசூல் செய்யப்படும் தொகையிலேயே ஊதியம், பூங்கா பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்.

கூடுதல் செலவினம் ஏற்பட்டால் நகராட்சி இழப்பீடு தர இயலாது. சிலை, சுற்றுச்சுவர் உட்பட அனைத்து பகுதிகளையும் 6 மாதத்திற்கு ஒருமுறை வர்ணம் பூச வேண்டும். பூங்காவில் உள்ள மரங்கள், செடிகளை முன் அனுமதியின்றி வெட்டக்கூடாது. நகராட்சியில் இருந்து பெறப்பட்ட அதே நிலையிலேயே நகராட்சி வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

 


Page 133 of 3988