Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தேனி பழைய பஸ் நிலையத்தை மாற்று பயன்பாட்டுக்கு விட தீர்மானம்

Print PDF

தினமணி           29.01.2014 

தேனி பழைய பஸ் நிலையத்தை மாற்று பயன்பாட்டுக்கு விட தீர்மானம்

தேனி நகராட்சி பழைய பஸ் நிலையத்தை மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் நிறுத்தமாக பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  தேனி அல்லிநகரம் நகர் மன்றக் கூட்டம் தலைவர் எஸ். முருகேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தேனியில் கடந்த 2013, டிச.30-ஆம் தேதி கர்னல் பென்னிகுயிக் நினைவு நகராட்சி புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்துக்கு வட்டார போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏ பிரிவு அங்கீகாரம் வழங்கியுள்ளன.

தேனியில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த காமராஜர் நினைவு பழைய பஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்டிருந்த பி பிரிவு அங்கீகாரம் வரும் மார்ச் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் பழைய பஸ் நிலையத்துக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தை மார்ச் 28-ம் தேதியுடன் ரத்து செய்து நகராட்சி நிர்வாகத்துக்கு வட்டார போக்குவரத்துத் துறை மற்றும்  மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளன.

 இந்த நிலையில், பழைய பஸ் நிலையத்தை மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் நிலையமாக பயன்படுத்த வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்புவதாக நகர்மன்றத் தலைவர் கூறினார்.

 கடந்த 2010-ஆம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேனி புதிய பஸ் நிலைய அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை, புதிய பஸ் நிலையத்தில் வைக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். புதிய பஸ் நிலையத்தில் கல்வெட்டு அமைக்கும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.

 

அம்பத்தூரில் இறைச்சிக் கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி           29.01.2014 

அம்பத்தூரில் இறைச்சிக் கடைகள் அகற்றம்

அம்பத்தூரில் தெரு ஓரங்களில் அனுமதியின்றி இயங்கி வந்த இறைச்சி கடைகளை செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மண்டலம்-7 (அம்பத்தூர்) செங்குன்றம் சாலை, புதூர் மார்க்கெட், கொரட்டூர் வடக்கு நிழற்சாலை முதலிய பகுதிகளில் தெருவோரங்களில் பல்வேறு கறிக் கடைகள் இயங்கி வந்தன. அனுமதி மற்றும் உரிமம் இன்றி இயங்கி வந்த அந்தக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜன.28) அகற்றினர்.

மேலும் முத்திரையின்றி விற்பனைக்கு வைக்கப்பட்ட 120 கிலோ எடையுள்ள இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும் சாலையோரம் இறைச்சி கடைகள் நடத்துவதற்காக 21 இடங்களில் போடப்பட்டிருந்த தாற்காலிக பந்தல்களையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

பொதுநலச் சங்கங்களுடன் மாநகராட்சி கருத்துக்கேட்பு

Print PDF

தினமணி           29.01.2014 

பொதுநலச் சங்கங்களுடன் மாநகராட்சி கருத்துக்கேட்பு

பொதுநல சங்கங்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை (பிப்.1) நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான கருத்து கேட்புக் கூட்டம் ஜன. 25-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் இது ஒத்தி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும்.

இதில், 1-வது மண்டலம் முதல் 8-வது மண்டலம் வரை உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும்.

9 முதல் 15-வது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், இணை மற்றும் துணை ஆணையர்கள், அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் மண்டல அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இதில் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு குறைகளை தெரி

விக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 


Page 137 of 3988