Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமலர்           29.01.2014 

பேரூராட்சி கூட்டம்

வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பாப்பாத்தி தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் விஜயநாத், துணைத்தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நன்னி ஆசாரியூர், ஏ.வி.பட்டி, போஜனம்பட்டி, ரெட்டியார்களம், சக்கரவர்த்தி நகர் பகுதிகளில் குடிநீர் பணிகள் செய்ய ஒப்புதல் தரப்பட்டது. வார்டு பகுதிகளில் ஆங்காங்கே புதிய ஆழ்குழாய் அமைத்து மின்மோட்டார் பொருத்த அனுமதிக்கப்பட்டது.

 

மாநகராட்சி ஊழியர்களுக்கு தியான பயிற்சி வழங்கல்

Print PDF

தினமலர்           29.01.2014 

மாநகராட்சி ஊழியர்களுக்கு தியான பயிற்சி வழங்கல்

ஈரோடு: பிரம்ம குமாரிகள் சபா சார்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்களுக்கு, இயற்கை பேரிடரில் இருந்து காக்கும், தியானப்பயிற்சி வழங்கப்பட்டது.

மனிதர்களின் மனமாற்றத்தால், இயற்கை பேரிடரை தவிர்க்க முடியும் என, நாடு முழுவதும், சென்னையில் இருந்து, கன்னியாகுமரி வரை, ஒரு குழுவும், சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஒரு குழுவாகவும், அறிவியல் அறிஞர்கள் மற்றும் இன்ஜினியர்கள் அடங்கிய குழு, தியானப்பயிற்சியின் பலன்களை, பொதுமக்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று எடுத்துரைத்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சேலத்தில் இருந்து ஈரோடு வந்த சென்னை - திருவனந்தபுரம் ஈஸ்வரன் தலைமையிலான குழு, ஈரோட்டில் கல்லூரிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீத்தடுப்பு அலுவலகங்களில் தியானப்பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, மாநகராட்சி கூட்ட அரங்கில், ஊழியர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவரும் சகோதரர் என்ற எண்ணம், பிற உயிர்களிடத்தில் அன்பு ஏற்பட வேண்டும். மனிதர்களிடம் மாற்றம் ஏற்பட்டால், அது இயற்கையையும் பிரதிபலிக்கும், என விளக்கினர். தொடர்ந்து இக்குழு, திருப்பூர் சென்று, கோவை, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் செல்கின்றனர்.

 

புதிய குடிநீர் திட்டம் விரைவில் அமலாக்கம்

Print PDF

தினமலர்           29.01.2014 

புதிய குடிநீர் திட்டம் விரைவில் அமலாக்கம்

ஈரோடு: ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துக்கான அனுமதி விரைவில் கிடைக்கும், என துணை மேயர் பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், 60 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது குடிநீர் தேவைக்கு, காவிரியில் இருந்து தினமும், 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த நீரை சுத்திகரிப்பு செய்து, பொது மக்களுக்கு, மாநகராட்சி வழங்கி வருகிறது. காவிரியில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை மற்றும் சாக்கடை கழிவுகள் பெரும் அளவில் கலப்பதால், குடிநீர் கடுமையாக மாசுபட்டுள்ளது. இவற்றை தடுக்க மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்யும் நோக்கத்தில், ஊராட்சிகோட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வர, 425 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்கு சென்றுள்ளது. இதுகுறித்து துணை மேயர் பழனிசாமி கூறியதாவது: ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துக்கு மத்திய அரசு, 50 சதவீதம், மாநில அரசு அரசு, 40 சதவீதம், மாநகராட்சி, 10 சதவீதம் பங்களிப்போடு, பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மிக விரைவில் அனுமதி கிடைக்கும், என எதிர்பார்த்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும், பணிகள் துவங்கும், என்றார்.

 


Page 138 of 3988