Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ராஜபாளையத்தில் ரூ. 6. 24 கோடியில் 11 இடங்களில் தார் தளம்

Print PDF

தினமணி           28.01.2014 

ராஜபாளையத்தில் ரூ. 6. 24 கோடியில் 11 இடங்களில் தார் தளம்

ராஜபாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நகரில் 11 இடங்களில் ரூ. 6.24 கோடியில் செலவில் தார்தளம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

 நகர்மன்றக் கூட்டத்துக்கு தலைவர் பி.எஸ். தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆணையாளர் ராமசாமி மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

  ராஜபாளையம் நகராட்சிக்கு வர உள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டஆய்வு பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளவும், இக் கூட்டுக் குடிநீர் திட்டப் பராமரிப்பு பணிகளை குடிநீர் வடிகால் வாரியமே மேற்கொள்ளவும் மன்றத்தின் அனுமதிக்கு வைத்து நிறைவேற்றப்பட்டது.

  ராஜபாளையம் 27ஆவது வார்டு கொரிஹவுஸ் நிறுவனம் அருகே ரூ. 15 லட்சம் செலவில் பொது கழிப்பிடம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் ரூ. 6 கோடி நகராட்சி பொதுநிதி ரூ. 24.30 லட்சம் சேர்த்து 11 இடங்களில் தார்தளம் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் இடத்தில் வாகனக் காப்பகம் அமைத்தல் உட்பட 39 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு உறுப்பினர்களின் பார்வைக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி செல்வசுப்பிரமணிய ராஜா பதிலளித்துப் பேசினார்.

 

மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பயிற்சி முகாம்

Print PDF

தினமணி           28.01.2014 

மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பயிற்சி முகாம்

மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்ககப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆணையர் கிரன்குராலா முகாமை துவக்கி வைத்துப் பேசியது: நகர்ப்புறங்களில் மிகவும் வறுமை நிலையிலுள்ள ஏழைகளின் துயர் துடைக்க 12 ஐந்தாண்டு திட்ட காலத்தில், நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் மூலம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. முன்மாதிரியாக இத்திட்டம் மதுரை, ஜெய்ப்பூர் மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், சமூக அமைப்புகள் உருவாக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்,    சுயவேலைவாய்ப்புத் திட்டம், நகர்ப்புற தெருவோர விற்பனையாளர்களுக்கு உதவி செய்யும் திட்டம், நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கான தங்கும் விடுதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. நலிந்தோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் உயரவும், சொந்தமாக தொழில் செய்பவர்கள், சுயஉதவிக்குழுக்கள், வீடற்ற ஏழைகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கவும், சமூக அமைப்புகள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, அவற்றுக்கு நிதியுதவி வழங்கி வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்கிறது என்றார்.

முகாமில் நகர்நல அலுவலர் யசோதாமணி, சிப்போ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.ராஜகோபால், பொதுமேலாளர் பழனிவேல்முருகன், பிஆர்ஓ சித்திரவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

Print PDF

தினபூமி           27.01.2014 

சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா
 
சென்னை.ஜன.28 - சென்னை மாநகராட்சி மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 65_ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரிப்பன் கட்டடத்தில்...

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மேயர் சைதை துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியரின் அணிவகுப்பு மாஷயாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெநூரவித்தார்.

2013_14_ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கும் கேடயங்களையும் அவர் வழங்கினார். செண்பகப்பூ மற்றும் செநூந்தரியம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, இந்தியன் வங்கி கிளைகளின் மூலம் வழங்கப்பட்ட தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மேயர் வழங்கினார். மேலும், 71 பயனாளிகளுக்கு தனி நபர் கடனாக ரூ.1.06 கோடிக்கான காசோலைகளையும், 21 அண்டை வீட்டுக் குழுக்களுக்கு ரூ.33 லட்சத்துக்கான காசோலைகளையும் அவர் அளித்தார்.

விழாவில் சென்னை மாநகராட்சி துணை மேயர் பெஞ்சமின், ஆணையர் விக்ரம் கபூர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 141 of 3988