Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஈச்சம்பட்டியில் நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு

Print PDF

தினகரன்          27.01.2014 

ஈச்சம்பட்டியில் நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு

துறையூர், : உப்பிலியபுரம் பேரூராட்சியில் உள்ள ஈச்சம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.6.66 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மைவிழி அன்பரசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் அழகாபுரி செல்வராஜ் வரவேற்றார். கடையை எம்எல்ஏ இந்திராகாந்தி திறந்து வைத்தார்.

உப்பிலியபுரம் ஒன்றியக்குழு தலைவர் லலிதா செல்லமுத்து, அவைத்தலைவர் வைரபெருமாள், பேரூராட்சி செயலாளர்கள் ராஜாங்கம், ராஜேந்திரன், கூட்டுறவு இயக்குனர் முத்துசாமி, தலைவர் மருதமுத்து, செயலாளர் அசோகன், துறையூர் ஒன்றியக்குழு தலைவர் பாலசுப்பிரமணியன், வட்ட கூட்டுறவு விற்பனையாளர் சங்க தலைவர் மோகன்தாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்யலட்சுமி, கண்ணதாசன், செல்வம், கலைச்செல்வி துரைராஜ், சுந்தர்ராஜீ, அக்ரோ தலைவர் தர்மராஜ், சிக்கத்தம்பூர் கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.

 

நகராட்சி கவுன்சில் கூட்டம்

Print PDF

தினமலர்          27.01.2014 

நகராட்சி கவுன்சில் கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நேற்று<, நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். கமிஷனர்(பொறுப்பு) ராமசாமி முன்னிலை வகித்தார். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பராமரிப்பு, ரேஷன் கடை அமைப்பது மற்றும் அடிப்படை வசதி பணிகள் குறித்து, 39 தீர்மானங்கள் நிறைவேறின. பத்து நிமிடங்களில் கூட்டம் முடிந்தது. 

 

எல்.இ.டி., மின் விளக்குகளால் காஞ்சிபுரம் ஜொலிக்கும்: முதல்கட்ட பணிகளை துவங்கியது நகராட்சி

Print PDF

தினமலர்          27.01.2014 

எல்.இ.டி., மின் விளக்குகளால் காஞ்சிபுரம் ஜொலிக்கும்: முதல்கட்ட பணிகளை துவங்கியது நகராட்சி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி., தொழில்நுட்பத்திற்கு மாற்றவும், கம்பங்களை ஒருசீராக்கவும், 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி பகுதியில், பல்வேறு காலகட்டங்களில் நிறுவப்பட்ட பல்வேறு வகையான தெருவிளக்குகள் உள்ளன. அனைத்து விளக்குகளையும், மின்சாரத்தை சிக்கனமாக செலவிடும் எல்.இ.டி., தொழில்நுடப்த்திற்கு மாற்றுவதோடு, விளக்கு கம்பங்களையும் ஒரே வடிவில் அமைக்க கடந்த டிசம்பர் மாதம் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் முடிவானது.

எட்டு கோடி ஒதுக்கீடு இதை தொடர்ந்து, முதல்கட்டமாக, காமாட்சி அம்மன் கோவில் மாட வீதி மற்றும் சன்னிதி தெரு, ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதி மற்றும் சன்னிதி தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாடவிதி மற்றும் சன்னிதி தெரு போன்ற முக்கிய பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்பட உள்ளன. முதல் கட்ட பணிகளுக்காக, எட்டு கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டத்தில், காமராஜர் சாலை, காந்தி ரோடு, திருக்கச்சி நம்பி தெரு, நான்கு ராஜ வீதிகள், அரக்கோணம் சாலையில் ஒலிமுகமதுபேட்டை வரை, புதிய ரயில் நிலையத்திலிருந்து ஜவஹர்லால் நேரு சாலை வரை, வள்ளல் பச்சையப்பன் தெரு, போன்ற சாலைகளில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்படும் என, தெரிகிறது.

இந்த திட்டம் குறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ''கடந்த டிசம்பர் மாதம், முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்தாய்வு கூட்டத்தில், இந்த திட்டத்திற்காக, 16 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் நகர பகுதிகளில் 30 மீட்டருக்கு ஒரு மின் கம்பம் வீதம், 1,800 புதிய மின் கம்பங்கள் நட்டு, விளக்குகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. அடுத்த மாதத்திற்குள் இந்த பணி துவங்கி விடும்,'' என்றார்.

 


Page 142 of 3988