Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி          27.01.2014 

குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு

ஆரணி நகருக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்ததையொட்டி, ஆரணியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ஆரணி நகருக்கு சில மாதங்களுக்கு முன்பு ரூ.37 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து சனிக்கிழமை ஆணையிட்டார்.

இதையடுத்து ஆரணி நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி தலைமையிலான அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், நகரச் செயலர் அசோக்குமார், துணைத் தலைவர் தேவசேனா ஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜோதிலிங்கம், அன்புஇளங்கோ, வேலாயுதம், பொன்னி பாலாஜி, ரவி, பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

நகராட்சி பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம்

Print PDF

தினமணி          27.01.2014 

நகராட்சி பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம்

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாதிரி நாடாளுமன்றம் நடைபெற்றது.

 பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பெ.விஜயலட்சுமி, மேலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினம் குறித்துப் பேசினர்.

தொடர்ந்து, நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி, தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க, ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

 நிகழ்ச்சியில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் வி.அனுசுயா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினமணி          27.01.2014 

வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

வந்தவாசி நகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

 வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை வட்டாட்சியர் எஸ்.ராஜலட்சுமி தொடங்கி வைத்தார். வந்தவாசி டிஎஸ்பி மகேந்திரன், நகராட்சி ஆணையர் எஸ்.லட்சுமி, நகராட்சி பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ், துணை வட்டாட்சியர்(தேர்தல்) டி.அரிதாஸ் மற்றும் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவியர், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

 பின்னர் வந்தவாசி மேற்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குரிமை, வாக்களிப்பதின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

 


Page 144 of 3988