Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ.25 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பூஜை

Print PDF

தினகரன்             25.01.2014

ரூ.25 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பூஜை

புதுச்சேரி, :புதுச்சேரி அரசு உள்ளாட்சித்துறை மூலம் வழங்கிய எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகர மற்றும் கிராம அமைத்துறை நிதி உதவியுடன் உருளையன்பேட்டை வார்டு பகுதியில் உள்ள மார்க்கெட் வீதி முழுவதும் ரூ.25 லட்சம் செலவில் புதுச்சேரி நகராட்சி மூலம் சிமெண்ட் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை நேரு எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

எம்எல்ஏவின் நேர்முக உதவியாளர் சாய்நாதன், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் பழனிராஜன், தொகுதி என்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் கலியன், ராமலிங்கம், சிவராஜ், அப்துல்கலாம், இளங்கோ, முன்னாள் கவுன்சிலர் அஞ்சலிதேவி, கோபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

தேசிய பெண் குழந்தை பாதுகாப்பு தினம்

Print PDF

தினகரன்             25.01.2014

தேசிய பெண் குழந்தை பாதுகாப்பு தினம்

திருப்பூர், :  தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் போஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் ஈசுவரன் வரவேற்று பேசினார். திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தலைவர் கண்ணன், வாசவி கிளப் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெண் குழந்தைகள் தினம் பற்றி பேசினர்.

தொடர்ந்து வடக்கு ரோட்டரி கிளப் மற்றும் வாசவி கிளப் சார்பாக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் முதல் 15 இடங்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசை 9ம் வகுப்பு மாணவி ஜீனத் நிஷாவும், இரண்டாம் பரிசை 8ம் வகுப்பு மாணவி லாவண்யாவும், மூன்றாம் பரிசை 11ம் வகுப்பு மாணவிகள் மரிய செல்சியா, ரம்யா, சீதாலட்சுமி ஆகியோர் வென்றனர். முடிவில், பள்ளி ஓவிய ஆசிரியை வளர்மதி நன்றி கூறினார்.

 

விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்             25.01.2014

விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், :  தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருப்பூர் அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அழகர்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியில், பள்ளி மாணவ, மாணவியர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். பேரணியின் போது மாணவர்கள், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் வாசகங்களை கைகளில் ஏந்திச் சென்றனர்.

பேரணி, அரண்மனைப்புதூரில் 4 வீதிகள் வழியாகச் சென்று நடுத்தோட்டம், பெரியகாலனி, நேத்தாஜி நகர், செரிப்காலனி வழியாக பள்ளியை வந்து  நிறைவடைந்தது. பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 152 of 3988