Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஏ.பி.எஸ்.அகடமி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கவிஞர் வைரமுத்து பங்கேற்பு

Print PDF

தினகரன்             25.01.2014

ஏ.பி.எஸ்.அகடமி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கவிஞர் வைரமுத்து பங்கேற்பு

அனுப்பர்பாளையம்,; திருப்பூர் மாநகராட்சி பூலுவபட்டி ஏ.பி.எஸ்.அகடமி மெட்ரிக் பள்ளியின்  5-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.  விழாவுக்கு மகாத்மா காந்தியின் முதன்மை செயலாளர் (1944-1948) சுதந்திரபோராட்ட தியாகி வி.கல்யாணம் தலைமை தாங்கினார். திருப்பூர்  மாநகராட்சி கல்விக்குழுத்தலைவர் மற்றும் ஏ.பி.எஸ்.அகடமி கல்வி நிறுவனங்களின் தலைவர் பட்டுலிங்கம், ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் துரைசாமி, விகாஸ் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் சேர்மன் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவிஞர் வைரமுத்து பரிசுகளை வழங்கி பேசினார்.

புதுச்சேரி அஸிஸ்ட் வேல்டு ரெக்கார்டு நிறுவனர் ராஜேந்திரன், க்யூ-எல்யோ-மல்டிவெர்சல் யோகா நிறுவனர் ஸ்டோயன் யங், திருப்பூர் ஜினாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் மற்றும் ஏபிஎஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரவணக்குமார், ஏபிஎஸ்  கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை பொருளாளர் அம்பிகாவதி, அறக்கட்டளை உறுப்பினர் நந்தினி, யோகாசக்ரவர்த்தி ஞானாம் பாள்(93வயது), திருப்பூர் மாவட்ட யோகா அசோசியேஷன் நிர்வாகி எள்ளுசாமி, ரெக்கார்டு ரெசர்ஸ் தாளா ளர் அருண், தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டுக்கழக  செயலாளர் மாரியப்பன், இந்தியன் யோகா பெட்ரேசன்  செயலாளர் மஜும்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளிக்குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியை மரகதம் நன்றி கூறினார்.

 

பழைய 36 முதல் 45வது வார்டு வரை ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு

Print PDF

தினகரன்             25.01.2014

பழைய 36 முதல் 45வது வார்டு வரை ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பழைய வார்டு 36 முதல் 45 வரை உள்ள பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் 25ம்தேதி (இன்று) முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்கள் மற்றும் கடந்த முகாமில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

36வது வார்டு ஜீவானந்தம் ரோடு, பெரும்பள்ளம் ஓடை குடிசைகள், ஜீவானந்தம் குடிசைமாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 37வது வார்டுக்குட்பட்ட ஈவிஎன் ரோடு, கருப்பண்ணன் வீதி, பெரியார் நகர் பகுதிகள், பெரியார் நகர் குடிசை மாற்றுவாரியம், ராஜாக்காடு மற்றும் ராஜாக்காடு சந்து ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் சி.எஸ்.ஐ.பள்ளியிலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 38வது வார்டு அண்ணாநகர் மெயின் வீதி, அண்ணா நகர் குடிசை பகுதி, அசோகபுரி, பெரியார்நகர், ஸ்டோனிபிரிட்ஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஈரோடு பெரியண்ண வீதியில் உள்ள கலைமகள் கல்வி நிலைய தொடக்கப்பள்ளியிலும், 39வது வார்டுக்குட்பட்ட தனக்கொடி லேஅவுட், கருப்பண்ணசாமி கோவில் வீதி, மாரப்பன் வீதி, ராஜரத்தினம் வீதி, எஸ்.கே.சி.ரோடு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் சூரம்பட்டி இந்து கல்வி நிலையத்திலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

40வது வார்டு அவ்வையார் வீதி, கிராமடை, தேவா வீதி, லட்சுமணண் வீதி, சாந்தான் கருக்கு, வேலா வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும், 41வது வார்டு ஈஎம்எம் வீதி, பெருமாள்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களும், 42வது வார்டு ஈஸ்வரன் வீதி, ஈவிஎன் ரோடு, காந்திஜிரோடு, கள்ளியங்காடு குடிசை பகுதி, பொய்யேரிக்கரை, பொய்யேரிக்கரை குடிசை பகுதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஸ்டோனி பிரிட்ஜில் உள்ள மாணவர் விடுதியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

43வது வார்டுக்குட்பட்ட பாலசுப்பராயலு வீதி, கிழக்கு பட்டக்கார வீதி, ஜீவானந்தம் ரோடு, காதர்மொய்தீன் வீதி, பழைய ரயில்வே ஸ்டேசன் ரோடு, பட்டக்காரர் வீதி, ஷேக்தாவூத் வீதி, தங்க பெருமாள் வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 44வது வார்டுக்குட்பட்ட எல்.ஜி.ஜி.எஸ். காலனி ரயில்வே காலனி ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும், 45வது வார்டுக்குட்பட்ட ஈஎம்எம் மெயின் வீதி, ஈஎம்எம் வீதி, குட்ஷெட்ஸ் எதிர்புறமுள்ள குடிசை பகுதிகள், மணல்மேடு வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொல்லம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

 

மெரினா அண்ணா நினைவிடம் அருகே இசை நீர்வீழ்ச்சியுடன் ரூ7.58 கோடியில் பூங்கா

Print PDF

தினகரன்             25.01.2014

மெரினா அண்ணா நினைவிடம் அருகே இசை நீர்வீழ்ச்சியுடன் ரூ7.58 கோடியில் பூங்கா

சென்னை, : மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகம் அருகில் ரூ7.58 கோடியில் இசை நீர் வீழ்ச்சியுடன் புதிய பூங்கா அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

* சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை புனரமைக்கும் பணிக்கு கூடுதலாக வெளிப்புற மற்றும் உள்வேலைகள் மற்றும் பணியிடம் அபிவிருத்தி செய்யும் பணிக்காக ரூ7.35 கோடி அனுமதிக்கப்படும்.

* சைதாப்பேட்டையில் உள்ள சலவையாளர் காலனியில் சலவைக்கூடம், உலர்த்தும் அறை, தேய்ப்புக்கூடம் மற்றும் ஓய்வறைகள்(பேஸ் 2) ரூ3.10 கோடியிலும், பேஸ் 3 ரூ3.10 கோடியிலும் கட்டப்படும்.

* சென்னை மெரினா காமராஜர் சாலையில் அண்ணா நினைவகம் அருகில் புதிய பூங்கா (சமப்படுத்துதல், சுற்று சுவர் கட்டுதல், செடிகள் அமைத்தல், மின்வசதி மற்றும் இசை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பணிகள்) ரூ7 கோடியே 58 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இசை நீர்வீழ்ச்சி பணிக்கு மட்டும் ரூ5 கோடி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


Page 153 of 3988