Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நெய்யூர் பேரூராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி             25.01.2014

நெய்யூர் பேரூராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

குளச்சல் அருகே நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள பிரின்ஸ் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி கொடுமுடியில் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ரேஷன் கடை கட்டிடமும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் செம்பொன்விளை குளலிவிளையில் சிமெண்டு தளமும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கு நெய்யூர் சிவ சக்தி விநாயகர் கோவில் அருகே கலையரங்கமும், ரூ.3 லட்சம் செலவில் முரசங்கோடு பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடமும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஆலங்கோடு பகுதியில் சிமெண்டு தளமும், சரல்விளை சி.எஸ்.ஐ. சபை அருகே ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் தார்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடக்க விழா நடந்தது.

விழாவுக்கு நெய்யூர் பேரூராட்சி தலைவர் பால்சேகர் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர்கள் செல்வதாஸ், பென்டேவிட், வின்சென்ட், ஜோலின், மேரி லில்லி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிகளை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளாட்சன், சாமுவேல் சேகர், ரத்தினகுமார், முரசங்கோடு பங்குதந்தை ஜான்கென்னடி, ஞானதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ஈரோடு மாநகராட்சியில் 5,675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி             25.01.2014

ஈரோடு மாநகராட்சியில் 5,675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்

ஈரோடு மாநகராட்சியில் 5 ஆயிரத்து 675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.

மிக்சி வழங்கும் விழா

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 38, 39, 40 மற்றும் 42-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனி பகுதியில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனாபழனிச்சாமி, கேசவமூர்த்தி, முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி ஆகியோர் பேசினார்கள். விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்குறுதிகள்

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு ஒரு உறுதி அளித்தார். பெண்கள் கஷ்டப்படாமல் இருக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தருவேன் என்று கூறினார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். ஆட்சியாளர்கள் பலரும் வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2½ ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறார். அவர் ஆட்சியில் இருப்பதால்தான் 20 கிலோ விலையில்லா அரிசி கிடைக்கிறது. அவர் ஆட்சியில் இருப்பதால்தான் 60 வயது கடந்த முதியோர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கிறது. திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் கிடைக்கிறது. அவர் ஆட்சியில் இருப்பதால்தான் இப்போது மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கிடைக்கிறது.

புறக்கணிப்பு

மத்திய அரசு அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தை புறக்கணிக்கிறது. அரிசி, மண்எண்ணை ஆகியவற்றை குறைவாக தருகிறது. பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் பெட்ரோல் -டீசல் விலையை அன்றாடம் உயர்த்தி வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்து உள்ளது. இந்த விலை உயர்வுகளுக்கு எல்லாம் காரணம் மத்திய அரசுதான். ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. ஆனாலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றி வருகிறார். அவருக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினார்.

5,675 குடும்பங்கள்

மொத்தம் 5 ஆயிரத்து 675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டன.

விழாவில், சிந்தாமணி தலைவர் ஜெகதீசன், வக்பு வாரிய உறுப்பினர் எஸ்.ஏ.பாரூக், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஈரோடு தாசில்தார் சாகுல் அமீது, துணை தாசில்தார் ஜெயக்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி             25.01.2014

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

புகைப்படம் எடுக்கும் பணி

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்தது. பின்னர் 2-வது கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கி ஒவ்வொரு வார்டு வாரியாக நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பழைய வார்டு எண் அடிப்படையில் 36-வது வார்டில் இருந்து 45-வது வார்டு வரை உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

பழைய வார்டு எண் அடிப்படையில் புகைப்படம் எடுக்கும் பணி விவரம் வருமாறு:-

36-வது வார்டு

36-வது வார்டுக்கு உள்பட்ட ஜீவானந்தம் ரோடு, பெரும்பள்ளம் ஓடை குடிசைகள், ஜீவானந்தம் ரோடு குடிசை மாற்று வாரியம் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

37-வது வார்டுக்கு உள்பட்ட ஈ.வி.என்.ரோடு, கருப்பண்ணன் வீதி, பெரியார் நகர் வீதி 1, 2, 3, 4, 5, 6, 7, 15, பெரியார் நகர் குடிசை மாற்று வாரியம், ராஜாக்காடு சந்து, ராஜாக்காடு வீதி 1, 2, 3 ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

38-வது வார்டுக்கு உள்பட்ட அண்ணா நகர் மெயின் ரோடு, அண்ணா நகர் குடிசைகள், அசோகபுரி, அசோகபுரி குடிசைகள், பெரியார் நகர், ஸ்டோனி பாலம் குடிசைகள் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு பெரியண்ண வீதி கலைமகள் கல்வி நிலையம் தொடக்கப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

எஸ்.கே.சி. ரோடு

39-வது வார்டுக்கு உள்பட்ட தனக்கோடி லே அவுட், கருப்பண்ணசாமி கோவில் வீதி 1, 2, 3, 4, மாரப்பன் வீதி 1, 2, 3, ராஜரத்தினம் வீதி, எஸ்.கே.சி. மெயின் ரோடு, எஸ்.கே.சி. ரோடு 1, 2, 3, 4, 5, ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு சூரம்பட்டி இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

40-வது வார்டுக்கு உள்பட்ட அவ்வையார் வீதி, தேவா வீதி, கிராமடை வீதி 1, 2, 3, 4, 5, 6, 7, லட்சுமணன் வீதி, சாந்தான் கருக்கு வீதி 1, 2, 3, 41-வது வார்டுக்கு உள்பட்ட ஈ.எம்.எம். மெயின் வீதி, ஈ.எம்.எம்.ரோடு 2, 3, பெருமாள் காடு, 42-வது வார்டுக்கு உள்பட்ட ஈஸ்வரன் வீதி, ஈ.வி.என்.ரோடு, காந்திஜி ரோடு, கள்ளியங்காடு குடிசைகள், பொய்யேரிக்கரை, பொய்யேரிக்கரை குடிசைகள் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு ஸ்டோனி பாலம் ஆதிதிராவிடர் ஆண்கள் விடுதியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

ஜீவானந்தம் ரோடு

43-வது வார்டுக்கு உள்பட்ட பாலசுப்பராயலு வீதி, கிழக்கு பட்டக்காரர் வீதி, ஜீவானந்தம் ரோடு, காதர்மொய்தீன் சந்து, காதர்மொய்தீன் வீதி, பழைய ரெயில் நிலையம் ரோடு, பட்டக்காரர் வீதி, ஷேக் தாவூத் வீதி, தங்க பெருமாள் வீதி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. 44-வது வார்டுக்கு உள்பட்ட எல்.ஐ.ஜி.எஸ். காலனி வீதி 1, 2, 3, ரெயில் காலனி ரோடு, 45-வது வார்டுக்கு உள்பட்ட ஈ.எம்.எம். மெயின் வீதி, ஈ.எம்.எம்.வீதி 1, 4, ரெயில்வே கூட்ஸ் செட் எதிர்புறம் உள்ள குடிசைகள், மணல்மேடு வீதி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு கொல்லம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்தப்பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை புகைப்படம் எடுக்கப்படுகிறது.

இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் மு.விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.

 


Page 154 of 3988