Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

எளம்பிள்ளையில் திட, திரவ வள மேலாண்மைக் கருத்தரங்கம்

Print PDF

தினமணி             25.01.2014 

எளம்பிள்ளையில் திட, திரவ வள மேலாண்மைக் கருத்தரங்கம்

சேலம் மாவட்டம்,  எளம்பிள்ளை பேரூராட்சி சார்பில் திட, திரவ வள மேலாண்மைக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பழனியம்மாள் தலைமை வகித்தார். எளம்பிள்ளை பேரூராட்சித் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

வேலூர் தொண்டு நிறுவன நிர்வாகி சீனிவாசன் பேரூராட்சிப் பகுதியில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் திட, திரவக் கழிவுகளை பொதுமக்கள் பயனடையும் வகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் தேவையற்ற பொருள்களை பாதிப்பில்லாமல் அழிப்பது குறித்தும் இந்தக் கருத்தரங்கில் விளக்கிக் கூறினார் .

பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் முரளி, பலராமன், சீரங்கன், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர்.

 பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்பரவு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ.1.14 கோடியில் சாலை மேம்பாடு

Print PDF

தினமணி             25.01.2014 

ரூ.1.14 கோடியில் சாலை மேம்பாடு

நாமக்கல் நகரில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மேம்படுத்தும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தொடக்கிவைத்தார்.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் ரங்கர் சன்னதி முதல் சேந்தமங்கலம் சாலை மின் மயானம் வரை ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் தார்ச் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பணிகளை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வியாழக்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தார். மேலும், பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் ஒப்பந்ததாரர்களை கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.காந்திமுருகேசன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் காளியப்பன், நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன், நகர்மன்றத் துணைத் தலைவர் கே.சேகர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலர் லியாகத்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம்

Print PDF

தினமணி             25.01.2014 

உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் தரம் வாய்ந்த மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு இடம் தேர்வு செய்து அமைக்கவேண்டும் என்று மாநகராட்சி கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு கல்விக் குழுத் தலைவர் கே.சூரியாச்சாரி தலைமை தாங்கினார். ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

வேலூர் மாநகராட்சி பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டுவது, வேலூர் சத்துவாச்சாரி மனமகிழ் மன்றத்தைத் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது, மாநகராட்சி அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக் கல்லூரி, சத்துவாச்சாரி உள்ளிட்ட இடங்களில் இடம் தேர்வு செய்ய விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணையம் மூலம் நடவடிக்கை எடுப்பது, பலவன்சாத்து பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக் கட்டடம் மிகவும் சீர்கெட்டுள்ளதை அடுத்து அதை முழுமையாக அகற்றி ரூ.15 லட்சத்தில் புதியக் கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 157 of 3988