Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்கள்

Print PDF

தினமணி             25.01.2014 

நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்கள்

வாணியம்பாடி நகராட்சியில் பொதுப் பிரிவில் துப்புரவுப் பணியாளர்களுக்குச் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ரவி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு பணியாளர்களுக்கு கையுறை, தலைக்கவசம், சீருடைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார் . நிகழ்ச்சியில் மேலாளர் சுரேஷ், துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன், நடராஜன், விஜயகுமார், அலி, அலுவலர்கள் குரு சீனிவாசன், அஜீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

சிவகாசியில் ரூ 2.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி             25.01.2014

சிவகாசியில் ரூ 2.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசியில் ரூ.2.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் தெரிவித்தார்.

   நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் கூறியதாவது: ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2013-2014 இன் கீழ் 1.02 கி.மீ. நீளமுள்ள என்.கே.ஆர். பெரியண்ணன் சாலை (விளாம்பட்டிசாலை) சீரமைக்கப்பட்டுள்ளது. தெய்வானை நகரில் 365 மீட்டர் அளவில் தார் சாலையும், ஏ.ஆர். அருணாச்சலம் சாலையும்  ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.  ஜக்கம்மாள் கோயில் பகுதியிலும், வேலாயுதம் சாலையிலும், ரூ.3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டியும், அப்பகுதிக்கு காமராஜர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து பகிர்மானக் குழாய் பதிக்கவும், மேல்நிலைத் தொட்டி பகுதியில் உள் கட்டமைப்பு செய்யவும், பசும்பொன் சாலையிருந்து, பழனியாண்டவர் புரம் காலனியில் உள்ள மேல்நிலைத் தொட்டிவரை பகிர்மானக் குழாய் பதிக்கவும் ரூ.1.30கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

 

மானாமதுரை பேரூராட்சி: ஜன. 31 க்குள் வரி பாக்கிகளை செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினமணி             25.01.2014

மானாமதுரை பேரூராட்சி: ஜன. 31 க்குள் வரி பாக்கிகளை செலுத்த வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி பகுதியில் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்தப்படாத அனைத்துவிதமான வரி பாக்கிகளையும் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா தெரிவித்துள்ளதாவது:

  ஒவ்வொரு நிதியாண்டிலும் முதல் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை மே மாதத்துக்குள்ளாகவும் இரண்டாம் அரையாண்டுக்கான வரி பாக்கிகளை நவம்பர் மாதத்துக்குள்ளும் செலுத்த வேண்டும். மானாமதுரை பேரூராட்சி பகுதியில் இதுவரை வரி பாக்கிகளை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக வரி பாக்கிகளை 31 ஆம் தேதிக்குள் செலுத்தி சட்டப்பூர்வ மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 வரி மற்றும் வரியற்ற இனங்களை செலுத்தாமல் உள்ள நபர்களின் பெயர் பட்டியல் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டர் பிளக்ஸ் போர்டுகளில் வைக்கப்பட்டு தினசரி நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்படும்.

  வரி செலுத்தாதவர்களின் வீட்டு மின் இணைப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் மின் இணைப்பு ஆகியவற்றை துண்டிக்கவும் மின்வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.

  விடுமுறை நாள்களில் வரி பாக்கிகளை செலுத்த ஏதுவாக சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் வசூல் மையம் செயல்படும் என்றார்.

 


Page 158 of 3988