Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஊஞ்சலூரில் சாலைப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி            24.01.2014 

ஊஞ்சலூரில் சாலைப் பணிகள் ஆய்வு

கொடுமுடி ஒன்றியம், ஊஞ்சலூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலைப் பணிகளை, ஈரோடு பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சு.கலைவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

 ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம்முதல், பேரூராட்சி அலுவலகம் வரை கான்கிரீட் சாலையாக மாற்ற ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

 இப்பணியை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊஞ்சலூர் பேரூராட்சித் தலைவர் ராஜலட்சுமி சாமிநாதன், செயல் அலுவலர் என்.நாகராஜன் உடனிருந்தனர்.

 

ஆற்காடு நகர குடிசைப் பகுதிகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமணி            24.01.2014 

ஆற்காடு நகர குடிசைப் பகுதிகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

ஆற்காடு நகராட்சியில்  உள்ள குடிசைப் பகுதிகளை மத்திய அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கீழ் ஹைதராபாதில் உள்ள மண்டல அலுவலக இயக்குநர் பூபதிராவ் உத்தரவின்பேரில் ஆராய்ச்சி அலுவலர்கள் எம்.ராஜசேகர் ரெட்டி, பி.ராஜீவ் ஆகியோர் ஆற்காடு நகராட்சியில் உள்ள 13 அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகள் மற்றும் 13 அறிவிக்கப்படாத குடிசைப் பகுதிகளை கடந்த திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 4 நாள்கள் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தனர்.

 இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் செ.பாரிஜாதம்,நகரமைப்பு அலுவலர் கே.சாந்தி, நகராட்சி சமுதாய அமைப்பாளர் ம. துரை, சமுதாய மேம்பாட்டுச் சங்கத் தலைவர் ம.சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

கருப்பூரில் ரூ.5.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி            24.01.2014 

கருப்பூரில் ரூ.5.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் பேரூராட்சியில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

கருப்பூர் பேரூராட்சி 3-ஆவது வார்டு பகுதியில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலை, சாக்கடை வடிகால் அமைக்கும் பணி, குள்ளகவுண்டனூர் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கொசு ஒழிப்பு இயந்திரத்தின் செயல்பாடுகளையும் சட்டப்பேரவை உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன் தொடக்கிவைத்தார்.

இதில், பேரூராட்சித் தலைவர் வெற்றிவேல், செயல்அலுவலர் அப்துல்சாதிக் பாட்ஷா, துணைத் தலைவர் மகாதேவன், ஓமலூர் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 162 of 3988