Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஜனவரி 30-இல் மாமன்றக் கூட்டம்

Print PDF

தினமணி            24.01.2014 

ஜனவரி 30-இல் மாமன்றக் கூட்டம்

சேலம் மாநகராட்சியின் மாமன்றக் இயல்புக் கூட்டம் ஜனவரி 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

சேலம் தொங்கும் பூங்கா வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது.

கூட்டத்துக்கு, மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமை வகிக்கிறார். ஆணையர் மா.அசோகன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில், உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

 

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி            24.01.2014 

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட சரவணந்தேரி மற்றும் சுக்குப்பாறை தேரிவிளையில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ. 3 லட்சம் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஹெலன் டேவிட்சன் எம்.பி. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை திறந்துவைத்தார். இதில், பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், செயல் அலுவலர் ஆ.செண்பகபாண்டியன், திமுக ஒன்றியச் செயலர் என்.தாமரைபாரதி, வார்டு உறுப்பினர்கள் சிவராமகிருஷ்ணன், சுயம்பையா, வைத்தியநாதன், குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க நடவடிக்கை

Print PDF

தினமணி            24.01.2014 

பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க நடவடிக்கை

பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூருவில் நடைபெறும் கர்நாடக சட்ட மேலவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை நியமன உறுப்பினர் தாரா அனுராதாவின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:

பெங்களூரு மாநகராட்சி கடந்த ஆண்டுகளில் ரூ. 3,420 கோடி கடன் பெற்றுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை அளிக்கப்படாததால், பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளன.

எனவே, பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். கடந்த பட்ஜெட்டில் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ரூ. 1,576 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் ரூ. 900 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரூ. 696 கோடியும் விடுவிக்கப்படும். மேலும், கூடுதால ரூ. 300 கோடி வழங்கப்படும். மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்படும்.

பெங்களூருவின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மேற்கொள்ள அரசு உதவும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பெங்களூரு மாநகராட்சி ரூ. 169 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால், அதற்கான வட்டியை செலுத்தவில்லை. முந்தைய பாஜக ஆட்சியில் மாநாட்சியில் உள்ள சாலைகள் சீராக அமைக்கவில்லை. இதனால், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன என்றார் சித்தராமையா.

 


Page 163 of 3988