Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னைக்கு புதிய திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு

Print PDF

மாலை மலர்              24.01.2014

சென்னைக்கு புதிய திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு
 
சென்னைக்கு புதிய திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு
சென்னை, ஜன. 24 - சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–

பொங்கல் திருநாளில் மக்கள் நலன் கருதி தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 13 ஆயிரத்து 87 பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் மக்கள் பயன் பெறும் வகையில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன் மூலம் தமிழ்நாட்டில் 3.39 கோடி மக்கள் நேரடியாக பயன் பெற்றனர். அதாவது தமிழக மக்கள் தொகையில் 46.95 சதவீதம் பேர் பயன் பெற்றுள்ளனர். இதற்கு உத்தரவிட்ட முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு.

சென்னையின் இதய பகுதி போல் உள்ள 15 ஏக்கர் பரப்புடைய சேத்துப்பட்டு ஏரியை மக்கள் பயன்பெறும் வகையில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பசுமை பூங்காவாக புனரமைக்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

இதற்காக ரூ. 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் சேத்துப்பட்டு ஏரி வருங்காலத்தில் சிறந்த சுற்றுலா மையமாக மாறும். மழைநீர் சேகரிப்பு உள்பட பல்வேறு பயன்கள் கிடைக்கும். இந்த திட்டத்தை அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

நேரு விளையாட்டரங்கம் உள்பட பிற மாவட்டங்களையும் சேர்ந்து 17 இடங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்கவும், உபகரணம் வாங்கவும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா ரூ. 4 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேலும் உலக கபடி போட்டி நடத்த ரூ. 1 கோடியும், ஸ்குவாஷ் போட்டி நடத்த ரூ. 75 லட்சமும் வழங்கியுள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி கலந்த பாராட்டு.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாராட்டு.

தமிழ்நாட்டில் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ள முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் பாராட்டுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

துப்புரவு பணிக்கு நவீன லாரிகள்

Print PDF

தினமலர்              24.01.2014

துப்புரவு பணிக்கு நவீன லாரிகள்

வேலூர்: துப்புரவு பணிக்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பில், நவீன லாரிகள் வாங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நகர் புற அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 2012-13 ம் ஆண்டு வேலூர் மாநகராட்சிக்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பில் குப்பை லாரிகள், குப்பை தொட்டிகள், உபகரணங்கள் வாங்கப்பட்டது. இவற்றை, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் விழா நேற்று நடந்தது. 170 குப்பை தொட்டிகள், ஆறு லாரிகள், ஆறு மினி ஆட்டோக்கள், மழை நீர் கால்வாயில் உள்ள சகதிகளை அகற்ற, டெய்லரில் ஹெட் லோடார் பொருத்திய டிராக்டர்களை மக்கள் பயன்பாட்டுக்கு, மேயர் கார்த்தியாயினி வழங்கினார். கமிஷனர் ஜானகி, துணை மேயர் தருமலிங்கம், நியமனக் குழு தலைவர் சிவாஜி, கவுன்சிலர்கள் குப்புசாமி, தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

திருத்தங்கலில் ரூ.3 கோடியில் சாலை சீரமைக்க நகராட்சி முடிவு

Print PDF

தினமணி             23.01.2014 

திருத்தங்கலில் ரூ.3 கோடியில் சாலை சீரமைக்க நகராட்சி முடிவு

திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த சாலைப் பகுதிகளில் பேவர்கல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் ஜி. தனலட்சுமி மற்றும் துணைத் தலைவர் பொ.சக்திவேல் ஆகியோர் கூறினார்கள்.

  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற சாலைமேம்பாட்டு  திட்டத்தின்கீழ், நகராட்சிப் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சிமிண்ட் பேவர்கல் சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 3 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து, இந்தத் தொகையை, அரசு மானியமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு. திட்ட பிரேரணை தயார் செய்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வார்டு எண் 1,9 மற்றும் 12ல் உள்ள அண்ணா காலனி குறுக்குத் தெருக்கள், இந்திரா நகர், கண்ணகி காலனி, பழனிச்சாமி வீதியிலும், வார்டு 2,7, மற்றும் 16ல் சுப்பிரமணியர் கோவில் குறுக்குத் தெரு, ராதாகிருஷ்ணன் காலனி, அய்யாச்சாமி பிள்ளை சந்து, மாட்டுமந்தை வீதி ஆகியவற்றிலும், வார்டு 3,11 மற்றும் 13ல் உள்ள பசும்பொன் நகர் குறுக்குத்தெரு, பாண்டியன் நகர் குறுக்குத்தெரு, 32 வீட்டு காலனி குறுக்குத்தெரு, முனீஸ்வரன்நகர், கே.கே.நகர் பகுதியிலும், வார்டு 10,14 மற்றும் 17ல் உள்ள தெருக்களான அழகன்சந்து, வையன் வீதி, எஸ்.என். புரம் சாலைகுறுக்குத் தெரு பகுதியிலும், வார்டு 19,20 மற்றும் 21 ஆகியவற்றில் உள்ள தெருக்களான போடிநாயக்கர் குறுக்குத்தெரு, ஆசாரிமார் நந்தவன குறுக்குத்தெரு, மேலமாடவீதி, சுக்கிரவார்பட்டி குறுக்குத்தெரு பகுதிகளிலும், வார்டு 15, 18 ல் உள்ள தெருக்களான நாடார் பிள்ளையார் கோவில் தெரு, சுக்கிரவார்பட்டி சாலைகுறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் பேவர் கல் சாலை அமைக்கப்படும்.

 


Page 166 of 3988