Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

Print PDF

தினகரன்             23.01.2014 

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

அனுப்பர்பாளையம், : திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின் பேரில்,  புத்தாக்கப்பயிற்சி  திருப்பூர் மாநகராட்சி வேலம்பாளையம் மண்டல அலுவலக உதவி ஆணையர் ஷபியுல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில், சுப்பையா மெட்ரிக் பள்ளி, சந்திரகாவி நடுநிலைப்பள்ளி, பாரதிநகர் மெட்ரிக் பள்ளி, பிரேமா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 70 க்கும் மேற்ப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் தாசில்தார் சுப்பிரமணியம் அனைவருக்கும் பயிற்சியளித்தார். இதில், தேர்தல் பணியாற்றுவோரின் கடமை, வாக்குச்சாவடி செயல்பாடு, வாக்குப்பதிவு, வாக்குப்பதிவானதும் வாக்கு மெஷின்களை சீல்வைப்பது ஆகியன குறித்து விளக்கப்பட்டது. மேலும், வரும் 25ல் வாக்காளர் தினத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பன குறித்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதே போல அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், குலாலர் திருமண மன்டபத்தில் தாசில்தார் தேவமனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பயிற்சியளித்தார். இதில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

 

கீழ்குந்தா பேரூராட்சியில் வரியினங்களை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினகரன்             23.01.2014 

கீழ்குந்தா பேரூராட்சியில் வரியினங்களை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

மஞ்சூர், : கீழ்குந்தா பேரூராட்சியில் குடிநீர், மற்றும் சொத்து வரிகளை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது:

கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், மற்றும் உரிம கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இதுவரை செலுத்தாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி பேரூராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இது குறித்த ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 31.01.2014ம் தேதிக்கு பின்னர் வரி மற்றும் கட்டணங்கள் பாக்கியுள்ள நபர்கள் மீது 1920-ம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்ட பிரிவின் கீழ் மேல் நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி நடவடிக்கையை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சுகாதார பணிகளை மேற்கொள்ள குன்னூர் நகராட்சியில் புதிய கமிட்டி

Print PDF

தினகரன்             23.01.2014 

சுகாதார பணிகளை மேற்கொள்ள குன்னூர் நகராட்சியில் புதிய கமிட்டி

குன்னூர், : மனித கழிவுகளை மனிதனே அப்புறப்படுத்த கூடாது என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளதை அடுத்து மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பான உத்தரவின் பேரில் குன்னூரில் ஆர்டிஓ, நகராட்சி ஆணை யம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கழிவறை கழிவுகளை எக்காரணத்தை கொண்டும் பொது கழிவு கால்வாயில் விடக்கூடாது எனவும் இதற்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் செப்டிக் டேங்க் ஏற்படுத்த வேண்டும் மற்றும் மற்றும் மனித கழிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உறைகள் அணிந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க குன்னூர் நகராட்சி சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தலைவராக ஆர்டிஒ செயல்படுவார். நகராட்சி ஆணையர், மக்கள் பிரதிகளில் 2 பேர் சமூக ஆர்வலர்கள் 2 பேர், ஒரு ரயில்வே ஊழியர், 2 துப்புரவு பணியாளர் ஆகியோர் அடங்கிய கமிட்டியினர் இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் துண்டு பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான பணிகளை நகராட்சி ஆணையர் ஜான்சன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நகரப்பகுதியிலுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தனிக்கழிவறை இல்லாமல் கழிப்பிட கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் நேரடியாக குழாய்கள் மூலம் விடுவது கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தனிக்கழிவறை ஏற்படுத்தாவிட்டால் அவர் கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், புதியதாக கட்டட அனுமதி கோரும் அனைத்து விண்ணப்பங்களிலும் கழிவறை குறித்த விவரம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


Page 171 of 3988