Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சமூக விரோத செயல்களை தடுக்க குடிநீர் தொட்டியை சுற்றி சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன்             23.01.2014 

சமூக விரோத செயல்களை தடுக்க குடிநீர் தொட்டியை சுற்றி சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு

திண்டுக்கல், : சமூகவிரோத செயல்களை தடுக்க மேல்நிலை குடிநீர் தொட்டியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகராட்சிக்குட்பட்ட 18, 23, 30 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் அருகில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டியுள்ளது. இதில் ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் தொட்டியை சுற்றி சுற்றுச்சுவரும் பூங்காவும் அமைக்கப்பட்டிருந்தது. காலபோக்கில் பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் சுவர் சிதைந்து விட்டது. சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை மர்மநபர்கள் இடித்து விட்டனர். இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் கும்பல் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இதனையடுத்து சமூகவிரோத செயல்களை தடுக்கவும், மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்ளவும், நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து சுற்றுச்சுவர் கட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சுற்றுச்சுவர் இல்லாததால் குடிநீர் தொட்டி பகுதியில் சமூக விரோத செயல் நடந்து வருவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. இதை தடுக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.

 

பழநி நகரில் ரூ.98 லட்சத்தில் வளர்ச்சி பணி நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்             23.01.2014 

பழநி நகரில் ரூ.98 லட்சத்தில் வளர்ச்சி பணி நகராட்சி தலைவர் தகவல்

பழநி, : பழநி நகரில் ரூ.98 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நக ராட்சி தலைவர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

பழநி நகராட்சிக்குட்பட்ட இடும்பன் இட்டேரி குறுக்கு தெருவில் பிற்படுத்தப்பட்ட மானிய நிதி 2013 -14ன் கீழ் ரூ.15 லட்சம் மதி ப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.

இதுபோன்று காமரா ஜர் வீதியில் ரூ.2 லட்சம், ராஜா நகரில் ரூ.9 லட்சம், ஆவணி மூலவீதி மற்றும் அரசு மருத்துவமனை பகுதி யில் ரூ.3.50 லட்சம் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.

மாசிமலை சந்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டி,  ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஜீவானந்தம் சாலையில் வடிகால், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் தேவேந்திரன் தெருவில் மழைநீர் வடி கால், ரூ.2 லட்சம் மதிப்பீட் டில் இந்திரா நகர் மேற்கு பகுதியில் வடிகால் மற்றும் பாலம் அமைக்கப்பட உள்ளது.

ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் ரயிலடி சாலை, சித்தனாதன் தெரு, சுகதேவ் வீதி, கவுண்டர் இட்டேரி சாலைகளில் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது.

ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மங்களகவுண்டர் சந்து, மதனபுரம் குறுக்கு தெருவில் மழைநீர் வடிகால், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் 24வது வார்டில் கழிவறை மராமத்து,

ரூ.2 லட்சம் மதிப்பீட் டில் லயன் கிளப் சாலையில் சிறுபாலம் மற்றும் மழைநீர் வடிகால், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கவுண்டர் இட்டேரி வார சந்தை சாலையில் தார் தளம், ரூ.9.95 லட்சம் மதிப் பீட்டில் நகராட்சி அலுவலகம் மராமத்து பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுதவிர நகராட்சியின் பிற பகுதிகளில் மழைநீர் வடிகால், சாக்கடை அமை த்தல், ஆழ்குழாய் கிணறு என மொத்தம் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நகர்மன்ற ஒப்புதலுக்குப்பின், டெண் டர் விடப்பட்டு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் வேலு மணி தெரிவித்துள்ளார்.

 

அலுவலர்களுக்கு பயிற்சி

Print PDF

தினகரன்             23.01.2014 

அலுவலர்களுக்கு பயிற்சி

தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 72 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் 72 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேனியில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் ராஜாராம் தலைமை வகித்து பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். இதில், நகராட்சி மேலாளர் சத்யசீலா, சுகாதார அலுவலர் சுருளிநாதன், நகராட்சி தேர்தல் பிரிவு உதவியாளர் ராஜா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

 


Page 172 of 3988