Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ.4.03 கோடியில் ஆறு நடை மேம்பாலங்கள்: மாநகராட்சி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

Print PDF
தினமலர்              23.01.2014

ரூ.4.03 கோடியில் ஆறு நடை மேம்பாலங்கள்: மாநகராட்சி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்


திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில், 4.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு இடங்களில் நடை மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.திருப்பூர் மாநகராட்சியின் மைய பகுதிகளில், லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதாலும், மிக குறுகிய ரோடுகளாக இருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. காமராஜர் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, குமரன் ரோடு, டவுன்ஹால் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகப்படியான நெரிசல் உருவாகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து போலீசாரே திணறும் அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு, மாநகராட்சிக்கு முக்கிய பணியாக றியுள்ளது. அதிக நெரிசல் ஏற்படும் ஆறு இடங்களில், 4.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடை மேம்பாலங்கள் அமைக்க, அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. தற்போது, அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஆயத்த பணியை துவக்க, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

மாநகராட்சி அலுவலக ரோடு - மங்கலம் ரோடு சந்திப்பில் 89 லட்சம் ரூபாய்; ரயில்வே ஸ்டேஷன் - டவுன்ஹால் சந்திப்பில் 70 லட்சம்; ரயில்வே ஸ்டேஷன் - புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் 43 லட்சம்; குமார் நகர் - அவிநாசி ரோடு சந்திப்பில் 58 லட்சம்; தாராபுரம் ரோடு - காங்கயம் ரோடு சந்திப்பில் ஒரு கோடி ரூபாய்; ராக்கியாபாளையம் பிரிவு - காங்கயம் ரோடு சந்திப்பு பகுதியில் 43 லட்சம் ரூபாய் என மொத்தம் 4.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டத்தில், இத்திட்ட பணிகளுக்கான தொகை மானியமாக பெறப்படும். பாலம் வடிவமைப்புடன் திட்ட மதிப்பீடு அனுப்பி, தொழில்நுட்ப அனுமதி, நிர்வாக அனுமதி பெறப்படும். அதன்பின், டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவக்கப்படும்.

இரும்பு ஆங்கிள் மற்றும் கான்கிரீட் பலகை மூலமாக நடை மேம்பாலம் அமைக்கப்படும். இவ்வாறு, கமிஷனர் செல்வராஜ் கூறினார்.
 

கொடுங்கையூரில் வீடு வீடாக விலையில்லா கொசு வலை வினியோகம்

Print PDF

மாலை மலர்              22.01.2014

கொடுங்கையூரில் வீடு வீடாக விலையில்லா கொசு வலை வினியோகம்
 
கொடுங்கையூரில் வீடு வீடாக விலையில்லா கொசு வலை வினியோகம்

சென்னை, ஜன. 22 - சென்னை மாநகராட்சி சார்பில் விலையில்லா கொசு வலை வழங்கப்படுகிறது. கூவம் ஆற்றோரம் குடியிருப்பவர்களுக்கு மட்டுமின்றி பச்சை நிற ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இந்த கொசு வலை வினியோகம் செய்யப்படுகிறது.

ரூ. 400 மதிப்புள்ள கொசு வலை கொசுக்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவும், கொசுக்களால் ஏற்படும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு போன்ற காய்ச்சலில் இருந்து தப்பிக்கவும் வழங்கப்படுகிறது.

அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் 34–வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் மக்களுக்கு நேரடியாக கொசு வலைகள் வழங்கப்படுகின்றன.

ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினரிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு ஒவ்வொரு வீடு வீடாக சென்று கவுன்சிலரும் நிலைக்குழு தலைவருமான லட்சுமி நாராயணன் வழங்கி வருகிறார். 10 ஆயிரம் வீடுகளுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து லட்சுமி நாராயணன் கூறியதாவது:–

மக்களிடம் நேரில் சென்று ஒட்டு கேட்க மட்டும் போகக்கூடாது. அரசின் நலத்திட்டங்களை நேரில் கொண்டு போய் கொடுப்பதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.

34–வது வார்டை பொறுத்தவரை ஒவ்வொரு வீடு வீடாக சென்று முதல்–அமைச்சர் வழங்கிய விலையில்லா கொசு வலைகளை வழங்கி வருகிறோம்.

இதே போல அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நேரடியாக வீட்டிற்கே சென்று கொடுப்பதனால் அவர்கள் அலைக்கழிக்கப்படாமல் பயன் அடைகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

கோவை மாநகராட்சியில் இன்று முதல் அம்மா திட்ட சிறப்பு முகாம்

Print PDF

தினமணி             22.01.2014

கோவை மாநகராட்சியில் இன்று முதல் அம்மா திட்ட சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் புதன்கிழமை முதல் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

  இது தொடர்பாக மேயர் செ.ம. வேலுசாமி வெளியிட்ட அறிக்கை: கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் புதன்கிழமை (ஜன 22) முதல் கீழ்க்காணும்  நாட்களில் குறிப்பிட்டுள்ள இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாநகர மக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

  இம்முகாம்களில் பெயர், கதவு எண், தெருவின் பெயர் மற்றும்  கேட்பு முதலிய திருத்தங்கள் மேற்கொள்ளுதல், புதிய சொத்துவரி மற்றும்  கேட்பு அட்டை மற்றும் குடிநீர் கேட்பு அட்டை வழங்கல், விடுபட்ட சொத்துவரி, குடிநீர் இணைப்பு பதிவு செய்தல்  தொடர்பான இதர பணிகள், தொழில்வரி இனங்கள், புதிய இனங்கள்  பதிவு செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான இதர பணிகளுக்கு  உடனடி தீர்வு காணப்படும்.

  கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி  காமாட்சியம்மன்  கல்யாண மண்டபத்தில் 32-ஆவது வார்டிலும் மேற்கு மண்டலம் கவுண்டபாளையம்  வார்டு அலுவலகத்தில் 5,6,7,8,9 ஆகிய வார்டுகளுக்கும், குனியமுது;தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் 87, 88,91,92,93 ஆகிய வார்டுகளுக்கும், வடக்கு மண்டலம் துடியலூர் வார்டு அலுவலகத்தில் 1,2,3,4 ஆகிய வார்டுகளுக்கும், ஒசூர் சாலையில் உள்ள மத்திய மண்டல அலவலகத்தில் 25,72,73,74 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

  ஜனவரி 27-ஆம் தேதி கிழக்குமண்டலம்  வரதராஜபுரம் ஜே.ஜே.கல்யாண மண்டபத்தில் 37,56,57,64,65,66 ஆகிய வார்டுகளுக்கும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள  மேற்கு மண்டல அலுவலகத்தில் 10,22,23,24 ஆகிய வார்டுகளுக்கும், தெற்கு மண்டலம் நாகப்பிள்ளையார்  கோவில் பின்புறம் உள்ள நூலக கட்டடத்தில் 89,90  ஆகிய வார்டுகளுக்கும்  வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி  வார்டு  அலுவலகத்தில் 27,42 ஆகிய வார்டுகளுக்கும்   மத்திய மண்டலம் ரத்தினபுரி மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் 45,48,49 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

  பிப். 1-ஆம் தேதி  சிங்காநல்லூர் கிழக்கு மண்டல அலுவலகத்தில்  58,59,60,61,62,63 ஆகிய வார்டுகளுக்கும்,  மேற்கு மண்டலம்  பி.என்.புதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்  15,20,21 ஆகிய வார்டுகளுக்கும்  தெற்கு மண்டலம் செல்வபுரம் வார்டு அலுவலகத்தில்  76,77,78,85 மற்றும் 86 ஆகிய வார்டு மக்களுக்கும் வடக்கு மண்டலம் வெள்ளகிணறு வார்டு அலுவலகத்தில் 26,43 ஆகிய வார்டுகளுக்கும்   மத்திய மண்டலம் வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 50,51,52,53,54 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

 பிப். 5 ஆம் தேதி  கிழக்கு மண்டலம் இராமகிருஷ்ணாபுரம் மருதூர் கல்யாண மண்டபத்தில்  67,69,75 ஆகிய வார்டுகளுக்கும், மேற்கு மண்டலம்  மணியம் வேலப்பன் வீதி மாநகராட்சி ஆரம்பபள்ளியில்  11,12,13,14 ஆகிய வார்டுகளுக்கும், தெற்கு மண்டலம் பொன்னையராஜபுரம்  வார்டு அலுவலகத்தில்  79வது வார்டு மக்களுக்கும் வடக்கு மண்டலம்  சரவணம்பட்டி  வார்டு அலுவலகத்தில் 28,29,30,31 ஆகிய வார்டுகளுக்கும் மத்திய மண்டலம் புலியகுளம் மாநகராட்சி  ஆரம்பப்பள்ளியில் 68,70,71 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

  பிப். 8-ஆம் தேதி  கிழக்கு மண்டலம் காளப்பட்டி  வார்டு அலுவலகத்தில் 33,34,35,36 ஆகிய வார்டுகளுக்கும், மேற்கு மண்டலம் வடவள்ளி  வரிவசூல்  மையத்தில் 16,17 ஆகிய வார்டுகளுக்கும் தெற்கு மண்டலம் சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட்டில் 94,96,97,98 மற்றும்  100 (பகுதி) ஆகிய வார்டுகளுக்கும் வடக்கு மண்டலம் சக்தி ரோடு எம்.எஸ. ஆர்  டேங்கில்  41வது வார்டுக்கும், மத்திய மண்டலம்  பவளம் வீதி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 80,81,82,83,84 ஆகிய வார்டுகளுக்கும் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும.

 பிப்.10-ஆம் தேதி மேற்கு மண்டலம் வீரகேரளம் வரிவசூல் மையத்தில்  18,19 ஆகிய வார்டுகளுக்கும் தெற்கு மண்டலம் சத்திரம் வீதியில் உள்ள  குறிச்சி வார்டு அலுவகத்தில் 95,99 மற்றும் 100 (பகுதி) ஆகிய வார்டுகளுக்கும் வடக்கு மண்டலம் கணபதி கணேஷ் லே-அவுட்  மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 44,46,47 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

 பிப். 15-ஆம் தேதி வடக்கு மண்டலம் பாப்பநாயக்கன்பாளையம்  பொறியியல் பிரிவு அலுவலகத்தில்  40,55 ஆகிய வார்டுகளுக்கும் பிப். 20-ஆம் தேதி  வடக்கு மண்டலம் பயனீர் மில்ஸ் ரோடு பொறியியல்  பிரிவு  அலுவலகத்தில் 38, 39 ஆகிய வார்டுகளுக்கும்  மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள்  நடைபெறும்.

 


Page 173 of 3988