Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

முதல்கட்டமாக 1289 மையங்கள் மூலம் மாவட்டத்தில் 2.15 லட்சம் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்

Print PDF

தினகரன்              20.01.2014

முதல்கட்டமாக 1289 மையங்கள் மூலம் மாவட்டத்தில் 2.15 லட்சம் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்

ஈரோடு, :ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் நேற்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சண் முகம் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. கிட்டு சாமி, மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, ஆணையாளர் விஜயலட்சுமி, பொறியாளர் ஆறுமுகம், உதவி ஆணையர்கள் விஜயகுமார், சண்முகவடிவு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குநர் டாக்டர் பாலுசாமி, மாநகராட்சி சுகாதார அலு வலர் டாக்டர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பெருந்துறை பஸ் ஸ்டேண்டில் போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்ததாவது: ஈரோடு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக கிராமப்புறங்களில் 1,201 மையங்களும், நகர்ப்புறங்களில் 88 மையங்களும் என 1,289 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் மூலமாக 2.15 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக பொது சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பிறதுறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் என 5 ஆயிரத்து 156 பேர் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 49 மையங்கள் மூலமாக 15 ஆயிரத்து 901 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பவானி நகராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 14 மையங்களில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. இம்முகாமை நகராட்சித் தலைவர் கே.சி.கருப்பணன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ராஜேந்திரன், பவானி - குமாரபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜா, செயலாளர் முரளிதரன், உதவி ஆளுனர் திருமுருகன் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன் சிலர்கள் சரவணக்குமார், ராஜசேகரன், டாக்டர் சக்திகா, துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மனோகரன், சங்கமேஸ்வரன், கிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மொடக்குறிச்சி அருகே தாமரைபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவர் டாக்டர் ஏ.மேகநாதன் முன்னிலையில் உதவி மருத்துவர் மேனகா தலைமையிலான குழுவினர் 12 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இதேபோல கொம்பனைபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பூரண சந்திரன் தலைமையில் முகாம் நடந்தது. மேலும் 16 மையங்களில் சொட்டு மருந்து ஊற்றப்பட்டது.

சென்னசமுத்திரம் பேரூ ராட்சி சோளக்காளிபாளை யம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை டாக்டர் சண்முகம் தலைமையிலான குழுவினர் கொடுமுடி பஸ்நிலையம் உள்ளிட்ட 16 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் 14 இடங்களில் மையம் அமைத்து சொட்டு மருந்து ஊற்றினர். முகாம்கள் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வராஜ், தங்கவேல், அல்லிமுத்து, மகாலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

எம்ஜிஆர் சிலையை அகற்றி விட்டு ரவுண்டானா பணி துவக்க முடிவு போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரோடு எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் ரவுண்டனா அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 8 கோடி ரூபாயை நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை அதிமுக சார்பில் வைக்கப்பட்டது. இந்த சிலையை அகற்றுவது குறித்து முதல்வருக்கு கடிதம் கொடுத்துள்ளோம். முதல்வரிடம் அனுமதி பெற்று சிலையை அகற்றி விட்டு பணிகள் தொடங்கும்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலக்கும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். எந்தெந்த இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையம் தேவை என்பது குறித்து ஆய்வு செய்து தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 14 மையங்களில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. இம்முகாமை நகராட்சித் தலைவர் கே.சி.கருப்பணன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ராஜேந்திரன், பவானி - குமாரபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜா, செயலாளர் முரளிதரன், உதவி ஆளுனர் திருமுருகன் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன் சிலர்கள் சரவணக்குமார், ராஜசேகரன், டாக்டர் சக்திகா, துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மனோகரன், சங்கமேஸ்வரன், கிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மொடக்குறிச்சி அருகே தாமரைபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவர் டாக்டர் ஏ.மேகநாதன் முன்னிலையில் உதவி மருத்துவர் மேனகா தலைமையிலான குழுவினர் 12 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இதேபோல கொம்பனைபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பூரண சந்திரன் தலைமையில் முகாம் நடந்தது. மேலும் 16 மையங்களில் சொட்டு மருந்து ஊற்றப்பட்டது. சென்னசமுத்திரம் பேரூ ராட்சி சோளக்காளிபாளை யம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை டாக்டர் சண்முகம் தலைமையிலான குழுவினர் கொடுமுடி பஸ்நிலையம் உள்ளிட்ட 16 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் 14 இடங்களில் மையம் அமைத்து சொட்டு மருந்து ஊற்றினர். முகாம்கள் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வராஜ், தங்கவேல், அல்லிமுத்து, மகாலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

 

ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி சார்பில் மாநகராட்சி நிலத்தில் ரூ.30 லட்சத்தில் தனியார் பராமரிப்பு பூங்கா

Print PDF

தினகரன்          20.01.2014

ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி சார்பில் மாநகராட்சி நிலத்தில் ரூ.30 லட்சத்தில் தனியார் பராமரிப்பு பூங்கா

கோவை, : கோவை மாநகராட்சி வசம் உள்ள பூங்காங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கும்  திட்டத்தை கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு, 26 பூங்காங்களை முதல்கட்டமாக அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாநகராட்சி 17வது வார்டு நவாவூர் பிரிவு குருசாமி நகரில் உள்ள 1 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வடவள்ளி ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் சார்பில்  ரூ.30 லட்சம் மதீப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு சுற்றுசுவர், நடை பயிற்சி பாதை, மருத்துவ மரவகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், இறகுபந்து மைதானம், விழா மேடை, புல்வெளிகள் மற்றும் வண்ணவிளக்குகள் அமைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் பூங்காவினை கோவை மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர். மோகன், இயக்குநர்கள் ராமநாராயணன், அருள்ஆண்டனி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தக்ஷா பொது மேலாளர் ரமாவேலாயுதம் திட்டவுரை ஆற்றினார்.

விழாவில் தா.மலரவன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையாளர் லதா, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சாவித்திரிபார்த்திபன், கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார், மனித நேய பேரவை உமாதாணு, வனக்குழு தலைவர் பார்த்திபன், மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 23 January 2014 09:17
 

ஈரோடு மாநகராட்சியில் மீண்டும் தொடக்கம்

Print PDF

தினமணி            19.01.2014

ஈரோடு மாநகராட்சியில் மீண்டும் தொடக்கம்

ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி ஈரோடு மாநகராட்சியில் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உயிரியல் புள்ளியியல் (பயோ மெட்ரிக்) கார்டு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 2-ம் கட்டமாக மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் இருந்தும் புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்கள் மற்றும் கடந்த முகாமில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பழைய நகராட்சி வார்டு எண்கள் 24 முதல் 35 வரை புகைப்படம் எடுக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சனிக்கிழமை முதல் ஜன.23ம் தேதி வரை பழைய 24வது வார்டு மக்களுக்கு ஈரோடு இடையன்காட்டு வலசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 25, 26, 27 ஆகிய வார்டு மக்களுக்கு ஈரோடு முத்துகருப்பண்ணவீதி கலைமகள் கல்வி நிலைய தொடக்கப்  பள்ளியிலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது. மேலும் 28, 29, 30 ஆகிய வார்டு மக்களுக்கு ஈரோடு காந்திஜி சாலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,

31, 33-வது வார்டுகளுக்கு ஈரோடு கச்சேரி வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், 34, 35 ஆகிய வார்டுகளுக்கு காளைமாடு சிலை அருகில் உள்ள பாலசுப்பராயலு வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும்

புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.    இந்த மையங்களில் மக்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

 


Page 180 of 3988