Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

15-இல் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி           10.01.2014

15-இல் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை

திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் ஜன.15-இல் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கடைகளைத் திறப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

 வரும் 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும் இறைச்சி விற்பனை செய்வதும்  தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.  எனவே, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15-ஆம் தேதி ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூட வேண்டும். கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் உக்கடம், சிங்காநல்லூர், துடியலூர் ஆடு அறுவை மனைகள், கணபதியில் உள்ள மாடு அறுவை மனை மற்றும் 10 இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.  இந்த உத்தரவை மீறிச் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மாங்காடு பேரூராட்சியில் குப்பைகளை அகற்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன வாகனம்

Print PDF

தினமணி           10.01.2014

மாங்காடு பேரூராட்சியில் குப்பைகளை அகற்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன வாகனம்

மாங்காடு பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றும் பணியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன வாகனம் ஈடுபடுத்தப்படவுள்ளது.

குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது மாங்காடு பேரூராட்சி. இங்கு மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.

இந்த பேரூராட்சியில் நாளொன்றுக்கு 12 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இங்கு குப்பைகள் அகற்றும் பணியில் தனியார் மூலம் 34 ஊழியர்களும், பேரூராட்சி மூலம் 21 ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த பேரூராட்சியில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே ரூ.1.25 லட்சம் மதிப்பில் நவீன அரவை இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குப்பைகளை அகற்ற பேரூராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் நவீன வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாங்காடு பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:

கோயில் பகுதியான மாங்காடு பேரூராட்சியை குப்பையில்லா நகரமாக உருவாக்க, பேரூராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழக அரசின் பகுதி-2 திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் நவீனக் குப்பை அள்ளும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளொன்றுக்கு 15 டன் குப்பைகளை அகற்ற முடியும் என்றார் அவர்.

 

விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து சென்னைக்கு 2 கோடி லிட்டர் குடிநீர் லாரி மூலம் வினியோகம்

Print PDF

மாலை மலர்            09.01.2014

விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து சென்னைக்கு 2 கோடி லிட்டர் குடிநீர் லாரி மூலம் வினியோகம்
 
விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து சென்னைக்கு 2 கோடி லிட்டர் குடிநீர் லாரி மூலம் வினியோகம்

சென்னை, ஜன.9 - பருவமழை ஆய்வு குறித்த கருத்தரங்கம் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் நடந்தது. இதில் சென்னையின் குடிநீர் நிலவரம் குறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் பேசியதாவது:–

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது நீர் இருப்பு குறைவாக உள்ளது.

ஆனாலும் வீராணம் எரியில் இருந்து தினமும் 18 கோடி லிட்டர், மீஞ்சூர், நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தினமும் 18 கோடி லிட்டர் குடிநீர் கிடைப்பதால் நிலைமையை சமாளித்து வருகிறோம்.

மொத்த குடிநீர் தேவையில் 60 சதவீதம் இந்த இரண்டு நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது.

தற்போது குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகள், கண்டலேறு அணை, வீராணம் ஏரி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீரை வினியோகிக்கலாம்.

ஆனால் இந்த ஆண்டு சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், மீஞ்சூர், பஞ்சட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் தினமும் 2 கோடி லிட்டர் தண்ணீரை லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளோம்.

விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து தினமும் 4 கோடி லிட்டர் பெறவும், நெய்வேலியில் கூடுதலாக 10 ஆழ்துளை கிணறுகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

கருத்தரங்கில் வானிலை ஆய்வு மையத்தின் துணைத் தலைமை இயக்குனர் ஒய்.எ.ராஜ், வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர்ட, வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 190 of 3988