Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்

Print PDF

தினமணி               06.01.2014

ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்

கரூர் மாவட்த்தில் ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கரூர் நகராட்சியை ரூ. 40 கோடியில் அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்ட பணியாக கரூர் பசுபதீஸ்வரர் கோயில் முன்பு ரூ. 36 லட்சம் மதிப்பில் சிமென்ட் வண்ணக்கல் தரை தளம் அமைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமி பூஜை தொடக்க விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

கரூர் மாவட்டத்துக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற நலத் திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். ரூ. 68 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பசுபதிபாளையத்தில் ரூ. 13.75 கோடி செலவில் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பசுபதிபாளையம், பெரியகுளத்துப்பாளையத்தில் ரூ. 6.60 கோடியில் குகை வழிப்பாதை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்.

சுக்காலியூர் முதல் காந்திகிராமம் வரை ரூ. 16.35 லட்சத்தில் 4 வழிச்சாலை பணிக்கு பூமிபூஜை நடத்தப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. இதேபோல காந்திகிராமம் முதல் வீரராக்கியம் வரை பழுதான சாலையை ரூ. 6.75 கோடியில் சீரமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் முடிந்து விடும். இதேபோல எண்ணற்ற திட்டங்கள் கரூர் மாவட்டத்துக்கு கிடைக்க, தமிழக முதல்வருக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் வரதராஜன் வரவேற்றார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை, கோட்டாட்சியர் நெல்லை வேந்தன், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் பாப்பாசுந்தரம், கரூர் ஒன்றியக்குழுத் தலைவர் திருவிகா, கரூர் நகர்மன்றத் துணைத் தலைவர் காளியப்பன், அட்லஸ் நாச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

எடப்பாடியில் குடிநீர்த் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி               06.01.2014

எடப்பாடியில் குடிநீர்த் தொட்டி திறப்பு

எடப்பாடி நகராட்சிப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டிகளை நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

எடப்பாடி நகராட்சிப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் குடிநீர்த் தொட்டிகளின் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சி.ராமன், நகர மன்ற உறுப்பிணர் ரோகிணி, கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஈ.கே.செந்தில், ஆலச்சம்பாளையம் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நகராட்சிப் பள்ளிக்கு ரூ.21.25 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணித் தொடக்கம்

Print PDF

தினமணி               06.01.2014

நகராட்சிப் பள்ளிக்கு ரூ.21.25 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணித் தொடக்கம்

ராணிப்பேட்டை நகராட்சி பள்ளிக்கு ரூ.21.25 லட்சம் செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியை நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை சீனிவாசன்பேட்டையில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவர் மற்றும் அங்கன்வாடி மைய சமையலறை ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்கள் கட்ட நகராட்சி கல்வி நிதியில் இருந்து ரூ.21.25 லட்சம் நிதி அண்மையில் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் நகரமன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் கலந்துகொண்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கானப் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஜே.பி.சேகர், ஆணையாளர் (பொறுப்பு) எஸ்.மணி, நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் கே.பி.சந்தோஷம், நகராட்சிப் பணி ஆய்வாளர் தமிழரசன், பள்ளித் தலைமை ஆசிரியர் மலர்கொடி, நகரமன்ற முன்னாள் உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 200 of 3988