Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க வேண்டும்

Print PDF

தினமணி               06.01.2014

போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க வேண்டும்

கோவை மாநகராட்சி பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

கோவை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் என்.கே.ராமகிருஷ்ணன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாநகரில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

கோவை மாநகராட்சி கழிவுகள் சரியாக அகற்றப்படாத காரணத்தாலும், சாக்கடைகளை தூர்வாராத காரணத்தாலும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, சிக்கன்குன்யா போன்ற விஷக் காய்ச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வீரியம் மிக்க கொசு மருந்துகளை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் கொசுகளை ஒழிக்க நடவடிக்கை மாநகராட்சி எடுக்க வேண்டும்.

கோவை மாநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம், மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சிவகாசி நகராட்சியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி               06.01.2014

சிவகாசி நகராட்சியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசி நகராட்சியில் ரூ. 61.75 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது என நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  நகராட்சி பகுதியில் உள்ள மருதுபாண்டியர் ஓடையில் உள்ள பாலத்தை விரிவாக்கம் செய்ய ரூ. ஒரு லட்சம், மீன் சந்தையில் கடைகள் கட்டும்பணிக்கு ரூ. 10 லட்சம், காளியப்பா நகரில் தார்சாலை அமைக்க ரூ. 8 லட்சம், மணிநகரில் சுகாதார வளாகம் கட்ட ரூ. 2.50 லட்சம் புதுத்தெருவில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 6.50 லட்சம், பி.கே.எஸ்.தெருவில் பேவர்பிளாக் அமைக்க ரூபாய் 4.40 லட்சம், வெண்டர் பிள்ளைத் தெருவில் மழைநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் அமைக்க ரூ. 7 லட்சம், ஓடைத் தெருவில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 3.75 லட்சம், டம்பர்பின் வைக்க பிளாட்பாராம் அமைக்க ரூ. 1 லட்சம், சோலை காலனியில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 5.75 லட்சம், பாரதிநகரில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 1.20 லட்சம், வேலாயுதம் சாலையில் ஸ்டேட் பாங்க் பின்புறம் பேவர் பிளாக்க அமைக்க ரூ. 6.75 லட்சம், பெரியகுளம் காலனி மற்றும் மாசில்லா மணிநகரில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 8.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது பொது நிதியிலிருந்து செலவழிக்கப்படும். இப்பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

நத்தம் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி               06.01.2014

நத்தம் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்

நத்தம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வனத்துறை இலாகாவிடம் இருந்து பெறப்பட்ட இடத்தில் இருந்த வனத்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலைய அமைப்புக்கான வேலைகள் தொடங்கின.

 இப்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பேருந்துகள் வந்து செல்ல இடையூறாக இருந்து வருகிறது. நத்தத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் நத்தத்தில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்லும் மாணவர்கள் மாலை நேரங்களில் பஸ்சில் ஏறுவதற்கு அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் வியாபாரம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பல வேலைகளுக்காக வருபவர்களுக்கு புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக 2 மாதங்களுக்கு முன் பேரூராட்சிக்கு 2 ஏக்கர் நிலத்தை வனத்துறை வழங்கியது. அந்த இடத்தில் சனிக்கிழமை கனரக இயந்திரங்களைக் கொண்டு பணிகள் தொடங்கின.

 


Page 201 of 3988