Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

காரப்பாக்கம் பகுதியில் ஆதார் அடையாள அட்டை பணிக்காக சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

காரப்பாக்கம் பகுதியில் ஆதார் அடையாள அட்டை பணிக்காக சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மாநகராட்சி மண்டலம்-11, வார்டு எண் 150-க்கு உட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில் ஆதார் அடையாள அட்டை பணி தொடர்பாக புகைப்படம், கைரேகை மற்றும் விழித்திரை விவரங்கள் பதிவு செய்வதற்காக கீழ்கண்ட இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

சிவபூதம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மகளிர் குழு கட்டிடம், சிவபூதமேடு பகுதியில் உள்ள மகளிர் குழு கட்டிடம், செட்டியார் அகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அப்பாதுரை பிள்ளை தெருவில் உள்ள திரு.வி.க.நகர் நூலக கட்டிடம், சந்தோஷ்பாய் தெருவில் உள்ள பரசுநாத் நகர் பூங்கா நூலக கட்டிடம், ராஜேஸ்வரி நகர் 2-வது தெருவில் உள்ள விளையாட்டு திடல் கட்டிடம், ஜெயா நகர் ஜெயவிநாயகர் கோவில் தெருவில் உள்ள சரஸ்வதி கான்வென்ட், பள்ளிக்கூட தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள பொன்னியம்மன் கோவில் கட்டிடம் மற்றும் பொன்னி நகர், கம்பர் தெருவில் உள்ள கிரேஸ் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

பேரூராட்சிக்கு புதிய கட்டடம்

Print PDF

தினமலர்            04.01.2014  

பேரூராட்சிக்கு புதிய கட்டடம்

தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு குடகனாறு பாலம் அருகே அகரம் பேரூட்சி அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

தற்போதுள்ள அலுவலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது. எனவே இந்த அலுவலகம் அருகிலேயே இரண்டு தளங்களுடன் நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. நாற்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான நிதி பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான நிதி பங்களிப்புத் திட்டம் 2011-2012 ன் கீழ் இந்த கட்டடம் கட்டப்படுகிறது. ""ஓரிரு மாதங்களில் பணி முடிந்து புதிய அலுவலகம் பயன்பாட்டிற்கு வரும்,"" என, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் தெரிவித்தார். 

 

ஆழியாறு குடிநீர் வினியோகம்: பேரூராட்சிக்கு அமைச்சர் ஆலோசனை

Print PDF

தினமலர்            04.01.2014  

ஆழியாறு குடிநீர் வினியோகம்: பேரூராட்சிக்கு அமைச்சர் ஆலோசனை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பேரூராட்சி ஒன்றாவது வார்டு மக்களுக்கும், 15வது வார்டு பகுதி மக்களுக்கும், ஆழியார் குடிதண்ணீர் வழங்க வேண்டும். குறுகலான ரோட்டினை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, இப்பகுதியை வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், செயல் அலுவலர் ரவிக்குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பார்வையிட்டனர். அதில், மலை மேல் வசிக்கும் மக்களுக்கு மூன்று இடங்களில் தொட்டி கட்டியும், 15வது வார்டில் மேல்நிலை தொட்டியின் கீழ் நீர் தேக்கத்தொட்டி கட்டி, அதில் மோட்டார் பொருத்தி மலை மேல்பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், கான்கிரீட் ரோடு அகலப்படுத்தவும், 42 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வேளாண் துறை அமைச்சர், செயல் அலுவலருக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், 15 வார்டான தேரோடும் வீதியில், 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தையும், ரேஷன் கடை அருகில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் குழந்தைகள் அங்கன்வாடி மையம், சிவலோகநாதர் கோவில் முன்புறத்தில் இருந்து சார்பதிவாளர் அலுவலகம் வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும் கழிவு நீர் சாக்கடையையும் பார்வையிட்டனர்.

 


Page 204 of 3988