Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடை

Print PDF

தினமணி             04.01.2014 

துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடை

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம சேவை பிரிவான விவேகானந்த சேவா பிரதிஷ்டான் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை பேரூராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் க.ஜெயசங்கர் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் மா.தமிழ்செல்வன் வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர் மாலதி இராமலிங்கம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற நல்லாசிரியர்கள் முத்து. அண்ணாமலை, சீராள.சிவப்பிரகாசம், பாவாணன், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் (ஒய்வு) கி.தங்கவேலு, பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் தங்கவேல், வழக்குரைஞர் காமராஜ் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

விவேகானந்த சேவா பிரதிஷ்டானின் இயக்குநரும், ஸ்ரீசாரதா வித்யாலயா பள்ளி முதல்வருமான யதீஸ்வரி ஆத்ம விகாஸப்ரியா அம்பா பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார். பேரூராட்சி ஊழியர்கள், சந்நியாச சகோதரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி             04.01.2014 

குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி எச்சரிக்கை

திருநெல்வேலி மாநகராட்சியின் கீழ் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள், தங்களது குடிநீர் வரியை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வரும் துண்டுப்பிரசுர விவரம்:

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்புதாரர்கள் தங்களது சொத்துக்களுக்கு 31-3-2014 வரை செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், காலிமனை வரி, தொழில்வரி ஆகியவற்றை இன்றைய தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாமல் இருந்தால் உடனே வரிகளைச் செலுத்தி ரசீதுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வைகுண்ட ஏகாதசி அடிப்படை வசதிகள்: மேயர் ஆய்வு

Print PDF

தினமணி             04.01.2014 

வைகுண்ட ஏகாதசி அடிப்படை வசதிகள்: மேயர் ஆய்வு

சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவுக்கு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மேயர் அ. ஜெயா வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  சிறீரங்கம் பகுதியில் 12 இடங்களில் 39 தாற்காலிக கழிப்பறைகள், 2 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 7 பொது குடிநீர் குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்புகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

  சிறீரங்கம் சாலைரோடு, திம்மராயசமுத்திரம் ஆகிய இரு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மேயர் அ. ஜெயா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

  மேலும், காந்தி சாலை ஓரத்தில் 5 அடி அகலத்தில் ரூ. 30 லட்சத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, அடையவளைஞ்சான் வீதி பிரசன்னா மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ. 30 லட்சத்தில் கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தையும் மேயர் பார்வையிட்டார்.

  இந்த ஆய்வின்போது, துணை மேயர் மரியம் ஆசிக், கோட்டத் தலைவர் எம். லதா, நகர்நல அலுவலர் டாக்டர்  மாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 206 of 3988