Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

காரமடை பேரூராட்சியில் அம்மா திட்ட முகாம்: 362 பேருக்கு சான்றிதழ்

Print PDF

தினமணி             04.01.2014

காரமடை பேரூராட்சியில் அம்மா திட்ட முகாம்: 362 பேருக்கு சான்றிதழ்

காரமடை பேரூராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து 461 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 362 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

மேட்டுப்பாளையம் வருவாய்த் துறை சார்பில், காரமடை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமிற்கு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். காரமடை ஒன்றியக் குழுத் தலைவர் ராஜ்குமார், சமூக நலப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் டி.டி.ஆறுமுகசாமி வரவேற்றார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இம்முகாமில், காரமடை பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டு பகுதி மக்களிடமிருந்து 461 மனுக்கள் பெறப்பட்டு, 362 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உரிய ஆய்விற்கு பின்னர் நிலுவையிலுள்ள மனுக்களுக்கும் தீர்வு காணப்படும் எனதெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில வேளாண் திட்டக் குழு உறுப்பினர் டி.கே.துரைசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் நிரிஜாமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் கந்தசாமி, கண்ணப்பன், முத்துசாமி, ராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரத்தினம், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை வட்டாட்சியர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

 

பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை: அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமணி             04.01.2014

பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை: அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமையவுள்ள இடங்களில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்க ரூ. 147 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில், தமிழக அரசு 50 சதவீதம் தொகையான ரூ. 72 கோடியை ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கியுள்ளது. தற்போது நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்படுவதால் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான ரூ. 147 கோடியில் மீதமுள்ள 50 சதவீதம் தொகையை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

திட்டத்துக்கான முழுத் தொகையையும் மானியமாகப் பெற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, நகராட்சிக் கூட்டத்தில் முழு மானியம் பெற அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பாதாள சாக்கடைத் திட்டம் அமைவதற்கான இடங்களை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரன், உதவி மேலாளர்கள் ஜஸ்டீன், கார்த்திகேயன், சுற்றுச் சூழல்-சமூக மேலாளர்கள், சித்ரா, சிவராமன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார், ஆணையாளர் சுந்தராம்பாள், நகராட்சிப் பொறியாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

 

குடிசைமாற்று குடியிருப்பு திட்டப் பணி: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி             04.01.2014

குடிசைமாற்று குடியிருப்பு திட்டப் பணி: ஆட்சியர் ஆய்வு

சின்னமனூரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வரும் குடிசைமாற்று குடியிருப்புகளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 சின்னமனூர் நகராட்சிக்கு மத்திய அரசின் நகர்புற அமைச்சகம் மூலம் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய குடியிருப்பு மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.12 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சின்னமனூரில் 14 குடிசைப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு 950 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 புதிய குடியிருப்பு கட்டுமானப் பணி, பாதாளச் சாக்கடை இணைப்பு பணி, பொன்நகரில் நடைபெற்று வரும் தார்ச் சாலை, பேவர் பிளாக் கல் சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சமுதாயக் கூடம் கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் அப்துல்ரசீத், பொறியாளர் சரவணக்குமார், பணி மேற்பார்வையாளர் செல்லத்துரை ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 209 of 3988