Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்: பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சின்னம் தேர்வு செய்ய அழைப்பு

Print PDF

தி  இந்து      02.03.2017      

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்: பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சின்னம் தேர்வு செய்ய அழைப்பு

மதுரை மாநகரம் மிடுக்கான நகரத் திட்டத்துக்கான (ஸ்மார்ட் சிட்டி) முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டியை அடையாளப்படுத்தும் வகையில் மதுரையின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சின்னத்தை தேர்வு செய்ய பொதுமக்கள், மாணவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 500 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்நகரங்களில், மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்படும்.

இந்த திட்டத்தில் மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் இந்த திட்டத்தை தொடங்குவதற்காக ஸ்மார் சிட்டி லிமிடெட் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:

மிடுக்கான நகர திட்டத்துக்கு (ஸ்மார்ட்சிட்டி) மதுரையை அடை யாளப்படுத்தும் வகையிலான சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது. இப் பொறுப்பை மாணவர்கள், பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளோம். கல்லூரி மாணவ, மாணவிகள், வடி வமைப்பாளர்கள், தனியார் நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், இதில் தன்னார்வமாக இணைந்து மதுரை மாநகரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மிடுக்கான நகரம் குறித்த சிறந்த சின்னம் (LOGO) மற்றும் இலக்கு உரையை (TAGLINE) தயார் செய்து வரும் 17-ம் தேதிக்குள் ஆணையர்/தனி அலுவலர், அறிஞர் அண்ணா மாளிகை, மதுரை மாநகராட்சி, என்ற முகவரிக்கும், maducorp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

பொதுமக்கள் அனுப்பி வைக்கும் சின்னங்களில் எது சிறந்தவை என்பது தொடர்பாக, மீண்டும் பொதுமக்களிடம் வாக் கெடுப்பு நடத்தப்படும். அதில் முதலிடம் பெறும் சின்னம் மற்றும் இலக்கு உரைக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

விதிமீறல் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்காமல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சிஎம்டிஏ: உயர்நீதிமன்றம் கண்டனம்

Print PDF

 தினமணி         08.02.2017

விதிமீறல் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்காமல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சிஎம்டிஏ: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை எஸ்பிளனேடு பகுதியில் உள்ள அங்கப்பன் நாயக்கன் தெருவில் இருக்கும் விதிமீறல் கட்டடங்களுக்கு -சீல்- வைக்க முடியாமல், சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) நிர்வாகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎம்டிஏ. உறுப்பினர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு விவரம்: விதிகளை மீறி, ஏ.ஆர்.சுபத் கான், எஸ்.கே.ஹதீஜா உம்மாள் ஆகியோர் கட்டடம் கட்டியிருந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வீட்டின் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும், விதி மீறல் பகுதியை மனுதாரர் சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மீண்டும் அந்த வீட்டுக்கு ‘சீல்’ வைக்கலாம் என, கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. பின்னர், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அந்த கட்டடத்தை மீண்டும் ஆய்வு செய்தபோது, விதிமீறல் பகுதி சரி செய்யப்படவில்லை. இருப்பினும்

போதிய கால அவகாசம், கட்டட உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னரும் விதிமீறல் பகுதியை சரி செய்யவில்லை.

பின்னர் காவல் துறை உதவியுடன், அந்த கட்டடத்துக்கு‘சீல்’ வைக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி சென்றனர். ஆனால்,  கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்க விடாமல் உரிமையாளர்கள் தடுத்து விட்டனர்.

ஆகையால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாத சுபத்கான், ஹதீஜா உம்மாள் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: விதிமீறல் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்க முடியாத சிஎம்டிஏ. அதிகாரிகள், அந்த பணியை மேற்கொள்ள அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருப்பது வேதனைக்குரியது. 

இவற்றை பார்க்கும்போது, சட்ட ரீதியான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் தான் அரசு எந்திரங்கள் உள்ளன என்பதே தெளிவாக காட்டுகிறது. ஆகையால், காவல் துறை உதவியுடன், அந்த வீட்டிற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சென்று விரைவாக ‘சீல்’ வைக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள், தங்களது பணிகளை செய்வதற்கு இதுபோல வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் உதவியை நாடி, நீதிமன்ற நேரத்தையும் வீணடிக்கக் கூடாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் அறிவிப்பு

Print PDF

 தினமணி            21.09.2016

பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் அறிவிப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நகராட்சி பதவிகள் குறித்த இடவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கான உத்தரவு தமிழக அரசிதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சிபுரம் ஆகிய நகராட்சிகள் பொதுவானதாகும்; அதாவது ஆண்-பெண் இரு பாலரும் போட்டியிடக் கூடியதாகும்.

செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய நகராட்சிகளில் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உரிய (பொது) நகராட்சியாக மறைமலைநகர் இடம்பெற்றுள்ளது. இதே போன்று பிற நகராட்சி பதவிகள் குறித்த இட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 


Page 22 of 3988