Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் முதல்வர் காணொலி காட்சியில் திறந்தார்

Print PDF

தினகரன்                03.01.2014

ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் முதல்வர் காணொலி காட்சியில் திறந்தார்

மண்ணச்சநல்லூர: ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்பட்டது. மேலும் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகமும் கட்டப்பட்டது. புதிய அலுவலகம் மற்றும் சுகாதார வளாகத்தை  முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து புதிய கட்டத்தில் அலுவலகத்தின் செயல்பாடுகள் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி, முன்னாள் தலைவர் சின்னையன், செயல் அலுவலர் கணேசன், துணைத்தலைவர் சாந்தா, அலுவலக இளநிலை உதவியாளர்கள் சாகுல் ஹமீது, சதீஷ்கிருஷ்ணன், அதிமுக நகர செயலாளர் சம்பத்குமார் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரவீன்குமார் பிச்சை, ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ.81 லட்சத்தில் மாநகராட்சி வணிக வளாகம் திறப்பு

Print PDF

தினகரன்                03.01.2014

ரூ.81 லட்சத்தில் மாநகராட்சி வணிக வளாகம் திறப்பு

கோவை, :  கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள 33 மற்றும் 34வது வார்டுகளில் ரூ.81 லட்சம் மதிப்பில் புதிதாக 19 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. 33வது வார்டு ராமச்சந்திரா சாலை கிழக்கு பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பில் 11 கடைகளுடன், வணிக வளாகம், 34 வது வார்டில் 37 லட்சம் மதிப்பில் 8 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல், தெலுங்குபாளையத்தில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கடன் சங்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை, மேயர் வேலுச்சாமி திறந்துவைத்தார். மேலும், 87வது வார்டில் பிருந்தாவன் பகுதியில் ரூ.37 லட்சம் மதிப்பில் தார்சாலை மேம்பாட்டு பணிகளையும், 93வது வார்டில் 5 தெருக்களில் ரூ.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளையும் மேயர் துவக்கிவைத்தார்.

 

பேரையூர் பேரூராட்சியில் 100 சதவீத வரிவசூல் 13வது ஆண்டாக சாதனை

Print PDF

தினகரன்                03.01.2014

பேரையூர் பேரூராட்சியில் 100 சதவீத வரிவசூல் 13வது ஆண்டாக சாதனை

திருமங்கலம், :பேரையூர் பேரூராட்சி தொடர்ந்து 13வது ஆண்டாக 100 சதவீதம் வரிவசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பாலமேடு, டி.கல்லுப்பட்டி, எழுமலை, பேரையூர், பரவை உள்ளிட்ட ஒன்பது பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் பேரையூர் பேரூராட்சியில் இந்தாண்டு 100 சதவீதம் வரிவசூல் செய்து வரிவசூலில் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த பேரூராட்சியில் வரியினங்கள் மூலம் 18 லட்சம் வசூலிக்க வேண்டும். இந்த இலக்கை பேரூராட்சி எட்டியுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் குருசாமி கூறுகை யில், கடந்த ஜனவரி முதல் டிசம்பர் முடிய ஓராண்டில் பேரூராட்சியில் வரிவசூலில் 100 சதவீதம் வசூலித்து சாதனை படைத்துள் ளோம். ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளாக எங்கள் பேரூராட்சி 100 சதவீதம் வசூலித்து சாதனை படைத்தது. இந்தாண்டு தொடர்ந்து 13ம் ஆண்டாக இந்த சாதனையை படைத்துள்ளோம்’ என்றார்.

 


Page 213 of 3988