Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அம்மா உணவகத்திற்கு ஒரு நாள் செலவு ரூ.11 ஆயிரம்

Print PDF

தினகரன்                03.01.2014

அம்மா உணவகத்திற்கு ஒரு நாள் செலவு ரூ.11 ஆயிரம்

மதுரை, : அம்மா உணவகம் ஒவ்வொன்றுக்கும் தினமும் மாநகராட்சி நிதி ரூ.11 ஆயிரம் வீதம் ஒதுக்கப்பட்டு  செலவிடப்படுகிறது.

மதுரையில் 10 இடங்களில் அம்மா உணவகம், மாநகராட்சி பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இயங்கி வருகிறது. ஒரு உணவகத்தில் தினமும் காலையில் 1,200 இட்லி, மதியம் 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இதற்காக ஒரு உணவகத்திற்கு தினமும் ரூ.11 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் மாநகராட்சி செலவிடுகிறது.

இதில் ஒரு உணவகத்தில் ரூ. 3 ஆயிரத்து 600 வருவாய் வருகிறது. உணவகத்திற்கான அனைத்து செலவுகளும் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ஒதுக்கப்படுகிறது.

இந்தலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவம¬னையில் அம்மா உணவகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கு உணவகம் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதுவும் மாநகராட்சி பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது. இதன் திறப்பு எப்போது? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

ரூ. 570 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும்

Print PDF

தினமணி                 03.01.2014

ரூ. 570 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும்

பெங்களூருவில் ரூ. 570 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும் என்று,  கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பெங்களூருவில் பலத்த மழை பெய்ததால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்தச்சாலைகளை ரூ. 570 கோடியில் சீரமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கானப் பணிகள் ஏப்ரல், மே மாதங்களில் நிறைவடையும்.

ஏற்கெனவே, சேதமடைந்த 22 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் 26 சாலைகளின் சீரமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும், 70 சாலைகளில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள குழிகளை மூடுவதற்கு 3 கட்டங்களாக தலா ரூ. 100 கோடி ஒதுக்கப்படும்.

குழிகளை மூடும் இயந்திரம் குறித்து புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றார் அவர்.

 

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்களில் "சேவை தகவல் பலகை'

Print PDF

தினமணி                 03.01.2014

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட  அலுவலகங்களில் "சேவை தகவல் பலகை'

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்களில் சேவை தகவல் பலகை அமைக்கப்படுகிறது.

பெங்களூரு ஜெயநகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேவை தகவல் பலகையை அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், மாநகராட்சியின் பொதுப் பணி நிலைக் குழுத் தலைவர் பசவராஜ் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பசவராஜ் கூறியது:

பெங்களூரு ஜெயநகரில் சகாலா திட்ட மாதிரியில் அனைத்துப் பிரிவுகளின் தகவல் அடங்கிய பலகை மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், மாநகராட்சியின் சேவைகள், அதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜெயநகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முறையாக இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் 8 ம்ண்டலங்களில் உள்ள 191 மாநகராட்சி அலுவலங்களிலும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும்.

மின் வாரியம், குடிநீர் வாரியம். காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் இது போன்று தகவல் பலகை அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்த மாநகராட்சி ஆணையரிடம் கோரப்படும்.

வார்டு எண் 198-இல் எமிகேபூர் பகுதியில் கழிப்பறை, ஆழ்துளைக் கிணறு, பேருந்து நிலையம் அமைக்கவும், சாலைகளைச் சீரமைக்கவும் ரூ. 49.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.  வார்டு எண் 58-இல் சி.வி.ராமன் நகரில் ரூ. 50 லட்சத்தில் கெம்பே கெüடர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

 


Page 214 of 3988