Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகம்: முதல்வர் திறப்பு

Print PDF

தினமணி              31.12.2013

அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகம்: முதல்வர் திறப்பு

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

 திருக்கோவிலூர் அடுத்துள்ள அரகண்டநல்லூரில் ரயில் நிலையம் எதிரில் பேருராட்சி அலுவலகம் உள்ளது. மிகப் பழமையான இந்த அலுவலகம் நாளடைவில் சேதம் அடைந்தது.

 இதனால், ரயில்வே கேட் அருகில் சமுதாயக் கூடத்தில் இயங்கி வந்தது. அவ்விடத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கட்டுமானப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.

  இந்நிலையில், புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை வகித்தார். குத்துவிளக்கேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராமநாதன், உதவிக் கோட்டப் பொறியாளர் குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.

 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.பாலு, பேருராட்சி துணைத் தலைவர் ராஜ் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

வலங்கைமான் பேரூராட்சி அலுவலகம் காணொலி காட்சி மூலம் திறப்பு

Print PDF

தினமணி              31.12.2013

வலங்கைமான் பேரூராட்சி அலுவலகம் காணொலி காட்சி மூலம் திறப்பு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தேர்வுநிலைப் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

ரூ. 40 லட்சம் மதிப்பில் 2,400 சதுர அடி பரப்பில் நவீன வசதிகளுடனான புதிய கட்டடத்தை நண்பகல் 12.50 மணிக்கு முதல்வர் திறந்துவைத்தார். அப்போது, புதிய கட்டடத்தில் தஞ்சை மண்டல பேரூராட்சி

உதவி இயக்குநர் மணி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் விசுவநாதன், பேரூராட்சித் தலைவர் மாஸ்டர் எஸ். ஜெயபால், துணைத் தலைவர் சத்யா, ஒன்றியக் குழுத் தலைவர் பரமேஸ்வரி, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் மாத்தூர் குருமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமன், இளநிலைப்பொறியாளர் திருச்செல்வம் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

 

பள்ளபட்டியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு

Print PDF

தினமணி              31.12.2013

பள்ளபட்டியில்  குடிநீர் தொட்டிகள் திறப்பு

பள்ளபட்டி பேரூராட்சியில் சட்டப்பேரவை தொகுதி நிதி ரூ. 9.60 லட்சத்தில் 4 இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை எம்எல்ஏ கே.சி. பழனிசாமி அண்மையில் திறந்து வைத்தார்.

பொதுமக்களின் கோரிக்கையையடுத்து தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 4 வார்டுகளில் தலா ரூ 2.40 லட்சத்தில் மின்பவர் பம்ப், ஆழ்குழாய் கிணறு மற்றும் சின்டெக்ஸ்கள் அமைக்க மொத்தம் ரூ. 9.60 லட்சத்தை வழங்கினார்.

ஐவர் கால்பந்து : கரூர் முதலிடம்கரூர், டிச. 30: கரூரில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டியில் கரூர் புலியூர் நெல்சன் அணி முதல் பரிசை வென்றது.

கரூர் புலியூர் நெல்சன் விளையாட்டுக் குழு சார்பில் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் டிச. 28 முதல் டிச.29 வரை நடைபெற்ற போட்டிகளில் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று இறுதிப் போட்டியில் புலியூர் நெல்சன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் புகழூர் பாரதி அணியை எளிதில் வென்று முதல் பரிசான ரூ. 7,001-ஐ தட்டிச் சென்றது. 2-ம் பரிசாக புகழூர் பாரதி அணிக்கு ரூ. 5,001 வழங்கப்பட்டது. நாமக்கல் அணியை வென்ற ராணி மெய்யம்மை பள்ளி அணிக்கு -ம் பரிசாக ரூ. 3,001 வழங்கப்பட்டது.

பரிசுகளை புலியூர் செட்டிநாடு சிமென்ட் ஆலையின் முதுநிலை துணைத் தலைவர் அ. அண்ணாதுரை வழங்கினார். இதில் நெல்சன் கால்பந்து குழுச் செயலர் மோகன்ராஜ், நெல்சன் விளையாட்டுக் குழுச் செயலர் வீர. திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 225 of 3988