Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திருச்செங்கோட்டில் நகராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி              31.12.2013

திருச்செங்கோட்டில் நகராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு

திருச்செங்கோட்டில் நகராட்சி அலுவலகப் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

திருச்செங்கோடு நகராட்சியில் சிதிலமடைந்த பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் கூடிய நகராட்சி அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் 1147 சதுர மீட்டர் கொண்டது. முதல் தளமும் இதே பரப்பைக் கொண்டதாகும்.

மொட்டை மாடியில் ரூ.10 லட்சத்தில் சோலார் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் அலுவலகத்தின் 25 சத மின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

இந்தக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

 இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, ஆணையர் ராஜேந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.       

 

திருவத்திபுரம் புதிய நகராட்சி அலுவலகம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினமணி              31.12.2013

திருவத்திபுரம் புதிய நகராட்சி அலுவலகம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தினை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

 திருவத்திபுரம் நகராட்சி அலுவலகக் கட்டடம் போதிய இட வசதி இல்லாமல் இருந்து வந்ததால், ரூ.99.90 லட்சம் மானியம் பெறப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்து வந்தது.

 இதனை திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நகராட்சி அலுலகத்தில் திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், துணைத் தலைவர் கே.எஸ்.செல்வராஜு, நகர்மன்ற உறுப்பினர்கள் விநாயகம், கே.வி.வெங்கட்ராமன், பி.எஸ்.ஏகாம்பரம், கே.செந்தில், ஆர்.முருகன், ஜெ.ரமணமுருகன், சரஸ்வதி, எ.ஊஷாராணி, ஆயிஷாபீ, எ.பவானி, கே.செல்வதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 விழாவுக்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சிவானந்தகுமார், துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணி, துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் பணியாளர்களும் செய்து இருந்தனர்.

 

ரூ.37 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்

Print PDF

தினமணி              31.12.2013

ரூ.37 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்

திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.37 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

 திருவண்ணாமலை நகராட்சியில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் நோக்கில் ரூ.36 கோடியே 66 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

 இதையடுத்து, திங்கள்கிழமை கொடநாட்டில் இருந்தபடியே காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பகுதியில் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், ஆட்சியர் அ.ஞானசேகரன், நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர், ஆணையாளர் பெ.விஜயலட்சுமி, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 தொடர்ந்து, குடிநீர் தொட்டிக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள குழாயில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் பொதுமக்கள் தண்ணீர் வழங்கினார்.

 இது தவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம் மற்றும் செங்கம் ஒன்றியங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையிலான குடிநீர் திட்டங்களையும் திங்கள்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

 


Page 227 of 3988