Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரை மேடையை உடனடியாகப் பயன்படுத்தலாம்

Print PDF

தினமணி              31.12.2013

புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரை மேடையை உடனடியாகப் பயன்படுத்தலாம்

வேலூர் பெங்களூர் சாலையில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தரைமேடையை மீன் வியாபாரிகள் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.

வேலூர் ஆபிஸர்ஸ் லைனில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மீன்மார்க்கெட்டுக்கு பதிலாக, பெங்களூர் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்மார்க்கெட் வளாகத்தை மாநகராட்சி நிறுவியது. இதில் ஷட்டர் போடப்பட்ட கடைகள், தரை மேடை கடைகள் உள்பட 110 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்துக்கு வருவதற்கு பழைய மீன் மார்க்கெட் வியாபாரிகள் உடன்படவில்லை. இதனால் பழைய மீன் மார்க்கெட்டை 30ஆம் தேதியுடன் மூடுவதாக மாநகராட்சி அறிவித்தது.

இரு தரப்பினருக்கும் பிரச்னை நிலவியதையடுத்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஜனவரி 8ஆம் தேதிக்குள் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தை காலி செய்ய கால அவகாசம் அளித்தது.

 வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட ஒருசில கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் புதிய மீன் மார்க்கெட்டை பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை கொண்டு வந்தது. ஆனாலும் வியாபாரிகள் எவரும் இந்த வளாகத்தை திங்கள்கிழமை பயன்படுத்தவில்லை.

இதுதொடர்பாக ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் கேட்டபோது, வியாபாரிகள் ஷட்டர் போடப்பட்ட கடைகளுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். தரை மேடை கடைகளை உடனடியாக அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.

 

நகராட்சிக் கடைகளை உள் வாடகைக்கு விட்டால் உரிமம் ரத்து: ஆணையர்

Print PDF

தினமணி              31.12.2013

நகராட்சிக் கடைகளை உள் வாடகைக்கு விட்டால் உரிமம் ரத்து: ஆணையர்

தாராபுரம் நகராட்சிக்குச் சொந்தமானக் கடைகளை ஏலம் எடுத்த பின் உள் வாடகைக்கு விட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையர் க. சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை கூறியது:

நகராட்சிக்குச் சொந்தமான 207 கடைகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 7-ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளன.  ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் குடும்ப அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கொடுக்க வேண்டும். அதிகத் தொகைக்கு ஏலம் கோருவதை தவிர்க்கும் பொருட்டு, வைப்புத் தொகை ஓராண்டு வாடகை என்பதை இரண்டு அல்லது மூன்றாண்டுகள் என மாற்றி அமைக்கப்படும். பெயர் மாற்றம் செய்து ஒன்பது ஆண்டுகளான கடைகள் மட்டுமே ஏலத்தில் விடப்படும். ஏலம் நடத்தப்படும் போது கருத்து முரண்பாடு ஏற்பட்டால் ஆணையரின் முடிவே இறுதியானது.

தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வைப்புத் தொகை சூழ்நிலை கருதி மாற்றவும் வாய்ப்பு உள்ளது. பேருந்து நிலையக் கடைகளில் டீக்கடை மற்றும் இறைச்சிக் கடைகள் நடத்த அனுமதியில்லை. கடைகளை ஏலம் எடுத்த பின் உள் வாடகைக்கு விட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். பொது ஏலம் நியாயமாகவும், நேர்மையுடன் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஏலத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.

 

அவிநாசி பேரூராட்சி கட்டடம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

Print PDF

தினமணி              31.12.2013

அவிநாசி பேரூராட்சி கட்டடம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

அவிநாசி பேரூராட்சி அலுவலக புதிய கட்டடத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

அவிநாசி பேரூராட்சி அலுவலகக் கட்டடம் ரூ. 1 கோடியே 34 லட்சம் மதிப்பில் அவிநாசி சேவூர் சாலையில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டது. இப் புதிய அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து அலுவலகப் பணிகளை அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்புசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் கு.கோவிந்தராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் பி.மணிச்சாமி, துணைத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி,  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கலைவாணன், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், துணைத் தலைவர் ஆனந்தகுமார், அதிமுக ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், அவிநாசிதொகுதி கழகச் செயலாளர் சேவூர்.ஜி.வேலுசாமி, வார்டு கவுன்சிலர்கள உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 228 of 3988